புதுடெல்லி:பாக்.அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நட்புரீதியாகவும் அமைந்தது என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
ஒரு நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த பாக். அதிபர் சர்தாரியுடன் நடத்திய சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர். இரு நாடுகள் இடையேயான உறவு குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், இரு நாடுகள் இடையேயான பிரச்சனைகளை செயல்ரீதியான அறிவுடன் அணுக முடிவுச் செய்துள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்கு வர பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர் விரைவில் பாக்.வருவார் என்றும் சர்தாரி தெரிவித்தார்.
அஜ்மீர் தர்காவுக்கு வருகை தந்துள்ள சர்தாரி டெல்லியில் செவன் ரேஸ் கோர்ஸில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லத்தில் அவர் அளித்த மதிய விருந்தில் கலந்துகொண்ட பிறகு நடந்த குறுகிய நேர பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானுக்கு அவர அழைப்பு விடுத்தார். ஏற்கனவே திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வருகை தந்த சர்தாரி சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை சுருக்கிக்கொண்டார். சோனியாகாந்தி இவ்விருந்தில் கலந்துகொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் தனக்கு பங்கேற்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment