Facebook Twitter RSS

Thursday, April 05, 2012

Widgets

யு.ஏ.இ யில் வேலை:இந்திய அதிகாரிகளின் அனுமதி கட்டாயம்!


New system aims to protect workers
புதுடெல்லி:ஐக்கிய அரபு அமீரகத்தில்(யு.ஏ.இ) வேலை தேடும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய அதிகாரிகளின் அனுமதியை   கட்டாயமாக்கும் திட்டம் நிறைவேற உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியும், யு.ஏ.இ தொழில்துறை அமைச்சர் ஸக்ர் கோபாஷும் கையெழுத்திட்டுள்ளனர்.
வேலை பாதுகாப்பும், சம்பளமும் உறுதிச்செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்திய தொழிலாளிகளை ரிக்ரூட்மெண்ட் நிறுவனங்களும், வளைகுடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரும் மோசடி செய்வதாக புகார்கள் அதிகரித்துள்ள சூழலில் அரசின் இந்நடவடிக்கை ஆறுதலை தரும் என கருதப்படுகிறது.

17 லட்சம் இந்தியர்கள் யு.ஏ.இயில் பணிபுரிகின்றனர். புதிய சட்டத்தின் அடிப்படையில் வேலை ஒப்பந்தத்தில் தொழிலாளி, தொழில் உரிமையாளர் தவிர இந்திய அரசு அதிகாரிகளின் சம்மதமும் தேவையாகும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets