Facebook Twitter RSS

Thursday, April 05, 2012

Widgets

தென்சீன கடல் பகுதியில் எண்ணெய் அகழாய்வுப் பணி – இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை!


India has two oil blocks in the South China Sea and ONGC Videsh has been exploring the water body in partnership with foreign companies.
பீஜிங்:சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள வியட்நாமுக்குச் சொந்தமான பகுதியில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளை இந்தியா மேற்கொள்வதை உடனே நிறுத்த வேண்டும்.  இந்தியா உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறாவிட்டால் மிகப்பெரிய விலையை  கொடுக்க வேண்டியது வரும் என இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் தென்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நடந்த ஆசியான் உச்சி மாநாட்டின் போது  ஒப்பந்தம் ‌மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி )  நிறுவனம் அங்கு கச்சா எடுக்கும் பணிகளை‌ மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு சீனா கடும் ஆட்சேபமும்,  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கம்போடியாவில் ஆசியான் நாடுகளின் அரசியல் ‌விவகாரம் தொடர்பாக நடந்த மாநாடு நிறைவுற்றது.
இதனையொட்டி தென்சீனா தேசிய இன்ஸ்டியூட் தலைவர் ஷூசிஹூன் கூறுகையில், “இந்தியாவுடன் , சீனா எந்த வகையிலும்  சர்வதேச கடல் பகுதி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. சர்ச்சைக்குரிய தென்கடல் பகுதியில் 54 தீவுகள் உள்ளது. இவை  மலேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளன.
எனவே இங்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு தார்மீக உரிமை இல்லை. இப்பகுதியில் 40  சதவீத கச்சா எண்ணெய் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக இந்தியா தென்கடல் பகுதியிலிருந்து வெளியேற  வேண்டும். இல்லையெனில் இந்தியா அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியது வரும் என்றார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets