லக்னோ:டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் ஸய்யித் புகாரியின் மருமகன் உமர் அலி கான் உத்தரபிரதேச சட்டமேலவை(எம்.எல்.சி) உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அவர் மனு தாக்கல் செய்தார். சட்ட மேலவையில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
ஸய்யித் புகாரிக்கும், சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான ஆஸம்கானுக்கும் இடையே நிலவும் கருத்துவேறுபாடு குறித்து உமர் அலிகான் கூறுகையில், அவ்வாறான கருத்துவேறுபாடு எதுவும் இல்லை என்று பதில் அளித்தார்.
ஸய்யித் புகாரி நேற்று முன்தினம் முதல்வர் அகிலேஷ் யாதவின் முன்னிலையில் வைத்து முலாயம்சிங் யாதவுடன் அவருடைய வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். மேலும் இரண்டு முஸ்லிம்களையும் அமைச்சரவையில் சேர்க்க சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment