அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.எல்.ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. மேலும் புதிய எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து ஆவணக் கணக்குகளை வைத்து இந்த விவரம் வெளியிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் எலக்ஷன் வாட்ச் அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் கூறியதாவது... மொத்தம் உள்ள182 எம்.பிக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது மொத்த உறுப்பினர்களில் 31 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 24 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி என தீவிரமான வழக்குகள் உள்ளன. பாஜகவின் அமீத் ஷா, சங்கர் செளத்ரி, ஜேத்தா பர்வத், ஐக்கிய ஜனதாதளத்தின் சோட்டுபாய் வாசவா, காங்கிரஸின் ஜாசுபாய் பர்வத் ஆகியோர் மீது மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளன. வாசவா மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன. அமீத் ஷா மீது சோராபுதீன், அவரது மனைவி கெளசர் பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் கொன்றதாக வழக்கு உள்ளது. பர்வத் மீது கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இவர் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தபோது 1998ம் ஆண்டு தொடரப்பட்டதாகும். பின்னர் இவர் அரசியலுக்கு வந்த பிறகு வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடந்த சட்டசபையில் 26 சதவீத கிரிமினல் வழக்குகளைக் கொண்டவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த முறை இது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் உள்ள 182 உறுப்பினர்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 86 பேர் ஆவர். காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் 43 பேர். ஒவ்வொரு பாஜக எம்.எல்.ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடியாகும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 12.36 கோடியாக உள்ளது.
Latest News
Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts
Wednesday, December 26, 2012
Thursday, November 08, 2012
மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!

மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
Friday, August 31, 2012
குமரி:ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம்!

நாகர்கோவில்:முக்கடல்களைப் போலவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என மூன்று சமூகமும் நல்லிணக்கத்தோடு கைக்குலுக்கி வாழ்ந்த மண் குமரி மாவட்டம். 1982-ஆம் ஆண்டு நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் இம்மூன்று மதத்தினர் இடையே நிலவிய நல்லிணக்கத்திற்கு விழுந்த முதல் அடியாக மாறியது.
1993-ஆம் ஆண்டு மணலிக்குழிவிளை என்ற பகுதியில் கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத்தலம் நள்ளிரவில் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து தள்ளப்பட்டது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. அடுத்து வந்த காலக்கட்டங்களில் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வன்முறையைத் தூண்ட பாசிஸ்டுகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறியது. இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தபவர்கள் ஹிந்துமுன்னணி, பா.ஜ.க சங்க்பரிவார பாசிச கும்பலாகும்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வணக்கஸ்தலங்கள் வழியாகத்தான் செல்வோம் என்று அடம்பிடித்து விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள் மதவெறியைத் தூண்டும் கோஷங்களை சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் முழங்குவது ஆண்டுதோறும் வாடிக்கையானது. கடந்த 2008-ஆம் ஆண்டு திருவிதாங்கோடு, 2010 இல் மிடாலம் ஆகிய பகுதிகளில் இவர்கள் நடத்திய வன்முறைச் செயல்களால் மாவட்டம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
Monday, May 07, 2012
பாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்க அத்வானி உள்ளிட்டோரின் பேச்சுதான் காரணம்- சிபிஐ
பாபர் மசூதியை கரசேவர்கள்
இடிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் ஆவேசப்
பேச்சும், தூண்டுதல் பேச்சும்தான் காரணம். எனவே அவர்கள் வழக்கு
விசாரணையிலிருந்து விடுபட முடியாது, விசாரணையை அவர்கள் நிச்சயம் சந்தித்தாக
வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இப்படித் தெரிவித்துள்ளது சிபிஐ.
Sunday, April 15, 2012
முஸ்லிம் லீகருக்கு அமைச்சர் பதவி - பா ஜ க எதிர்த்து பந்த் !

கேரள மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்திவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அந்த ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது.
முஸ்லிம் லீக கட்சிப் பிரமுகர் மஞ்சளம்குழி அலீ என்பவருக்கு அமைச்சர் பதவி அளிக்க உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு
முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி கேரளாவில் இன்று `கறுப்பு தினம்' என்று அறிவித்தது. மாநிலமெங்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. நடைப்பயணம், மாவட்ட த் தலைநகரங்களில் அரசு அலுவலகங்களின் முன் எதிர்ப்பு முழக்கங்களை பாரதிய ஜனதா தொண்டர்கள் எழுப்பினர்.Thursday, February 09, 2012
குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வி : கடும் கண்டனம்

கலவரத்தில் மத ஸ்தாபனங்கள் அதிகமாக அழிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 600 மத ஸ்தாபனங்களை மீண்டும் கட்டுவதற்கு நிதியை அளிக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இனப் படுகொலையின் வேளையில் தகர்க்கப்பட்ட வீடுகள் மற்றும் வியாபாரா ஸ்தாபனங்களை புதுப்பிக்க பணம் அளித்த அரசு மத ஸ்தாபனங்களின் மராமத்துப் பணிகளுக்காக நிதி அளிக்கும் பொறுப்பு உள்ளது. மத ஸ்தாபனங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசியல் சட்டம் பிரிவு 27-இன் படி சட்ட மீறல் என அரசு வாதிட்டது.
இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத் என்ற அமைப்பு அளித்த மனுவில் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தது.
முதன் முறையாக குஜராத் இனப்படுகொலை வழக்கில் ஒரு நீதிமன்றம் மோடி அரசை நேரடியாக குற்றம் சாட்டுகிறது என இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் எம்.டி.எம்.ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
ஆமாம்! ஆபாசப்படம் பார்த்தேன்!-கர்நாடகா அமைச்சர் ஒப்புதல்

சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும்போது ஆபாசப்படம் பார்த்தேன் அது என்ன கிரிமினல் குற்றமா? என்று கர்நாடகா அமைச்சர் லஷ்மண் சவாடி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா கூட்டுறவுத் துறை அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான லஷ்மண் சவாடி அம்ற்றும் சி.சி. பாட்டீல் ஆகிய இரு அமைச்சர்களும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்தது வீடியோவில் பதிவாகி வெளியானது.
"ஆம் அது புளூ பிலிம் போன்றதுதான், துறைமுக அமைச்சர் கிருஷ்ணா பாலிமர் செல்போனில் அந்தப் படம் இருந்தது. அதாவது அந்த வீடியோ படத்தில் ஒரு பெண் நடனமாடுகிறாள் அவரை 4 பேர் பலாத்காரம் செய்கின்றனர். அயல்நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் விருந்தின் போது நடைபெறுகிறது பாருங்கள் என்று என்னிடம் காண்பித்தார். சட்டப்பேர்வையில் மால்பியில் நடைபெற்ற விருந்து ஒன்று பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது நான் இந்த வீடியோவை பார்த்தேன்.
ஆம் நான் பார்த்தது உண்மைதான், ஆனால் அது என் போன் அல்ல. நான் எந்த கிரிமினல் குற்றமும் செய்துவிடவில்லை. மொபைல் என்னுடையது அல்ல வெறுமனே பார்த்தது எப்படி குற்றமாகும்.
ஆனால் சட்டப்பேறவையினுள் மொபைல் போன்கள் கொண்டு செலவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இரட்டை சர்ச்சையில் அகப்பட்டுக் கொண்டுள்ளீர்களே என்று நிருபர்கள் கேட்ட போது, லஷ்மண் சவாடி, "நான் என்னுடைய மொபைலில் பார்க்கவில்லையே, ஆனால் கிளிப்பிங்கை பார்த்தேன் மறுக்கவில்லை. சவாடி ஒருநாளும் அந்தக் காரியத்தைச் செய்யமாட்டார். நான் அதனைச் செய்யவில்லை" என்றார்.
Tuesday, January 24, 2012
மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!
JAN 24: கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே.
கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.
இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.
ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால் அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு உருவாக்கினால் அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.
விநாயகர் ஊர்வலங்களிளின் போது விநாயகரை கடலில் கரைக்க பலவழிகள் இருந்தாலும் வேண்டும் என்றே சிறுபான்மையினரின் வணக்க தளங்கள் வழியாக ஊர்வலங்களை கொண்டு சொல்வோம் என்று அடம் பிடிப்பது. அப்படியே இவர்கள் போக அனுமதிக்கப்படும் போது வேண்டுமென்றே தொழுகை நேரம் வரும்வரை ஊர்வலத்தை தாமதப்படுத்துவது. பின்னர் ஊர்வலத்தில் "பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற பல கீழ்த்தரமான வார்த்தை பிரோயோகங்களை செய்வது.
இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு வெடிவெடித்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது. ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம் நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.
முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை எடுத்து கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.
மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே. இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி வருகின்றனர். குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.
இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.
ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால் அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு உருவாக்கினால் அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.
இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு வெடிவெடித்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது. ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம் நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.
முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை எடுத்து கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.
மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே. இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி வருகின்றனர். குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
*மலர்விழி*
Monday, January 16, 2012
யார் பிரதமர் ரஜினியா? ஜெயாவா?
JAN
16: சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர்
பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில்
பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை
அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
ஒருவேளை பா.ஜக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய் கூட்டணி
உருவானால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். இதில் சிலர் ரகசியமாக ரஜினியை முன்மொழிந்துள்ளனர்.
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. ஒரு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் பிரவேசமான பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய பார்பனர்கள் முயற்சிப்பது என்னவோ சரி. ஆனால் அதில் ரஜினிகாந்த்க்கு என்ன வேலை என்பது புரியாத மர்மம்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களும், சாமியார்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடித்து அவர்களை வெளியே கொண்டு வரவும் அதே நேரம் தங்களது வர்ணாசிரம ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடியை தமிழகத்தில் காலூன்ற செய்யும் வேலையைத்தான் இவர்கள் சிரத்தையோடு செய்து வருகின்றனர். ஜெயலலிதா மற்றும் சோ, சுப்பிரமணிய சாமி, குரு மூர்த்தி, பாலசந்தர் இவர்கள் எல்லாம் யார் என்று நமக்கு தெரியும். அந்த கூட்டத்தில் ரஜினிகாந்தும் சேர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. தங்களது பயங்கரவாத முகம் வெளியே தெரிந்து விட்டதால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பிரதம வேட்பாளர் தேவைப்படுகிறது அது ஜெயலலிதாவாகவோ அல்லது ரஜினிகாந்தாகவோ இருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)