Facebook Twitter RSS

Sunday, December 02, 2012

Widgets

“ஷியாக்கள்” என்று ஒன்றும் தெரியாமல் ஒலமிடும் ஓநாய்களிற்கான பதிவு - இஸ்லாத்தின் எதிரிகளான ஷியாக்களை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!! PART 1
வழிகேடர்களின் சித்தாந்தமான ஷியாயிஸம் பற்றிய தெளிவை நம் சகோதரர்கள் அறிந்து கொள்வதற்காக அந்த வழி கெட்ட அமைப்பு பற்றிய அறிமுகம்

ஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யா சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. நரகின் விளிம்பில் இருந்தார்கள். இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர் உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை.

நபி (ஸல்) அவர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.
இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரழி) அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காக அலி (ரழி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி கிளர்ச்சி செய்தனர்.
இதேபோல் இவர்களுக்கு எதிராக அலி (ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே‘ஷீஆ’ شيعة எனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ‘ஷீஅத்து அலி’ என்று அழைக்கப்பட்டனர். ‘ஷீஆ’ شيعة என்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி (ரழி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரிவினர் நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும் நபி (ஸல்) அவர்களை விட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறி முற்றிப்போன போது அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
இன்று இவர்கள் பல பிரிவுகளாக பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் அவர்களின் ஆட்சியே உள்ளது. ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்ட ‘ஷீஆக்கள்’ தான் உண்மை முஸ்லிம்கள் என்ற பிரசாரம் கூட சில இயக்கவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கும் அனைத்து துறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு ‘ஷீஆப்’ புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டிருக்கின்றன இந்த இயக்கங்கள். எனவே ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பனவற்றை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அஷ்ஷீஆ : الشيعة
இப்பெயருக்குள் அனைத்து உட்பிரிவுகளும் அடங்கிவிடும். இதுவே மிகப் பிரபல்யமான பெயர்.
பிரதான பிரிவுகள்:
ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்கு பிரிவுகள் உள்ளன.
அஸ்ஸபயிய்யா
அஸ்ஸைதிய்யா
அல்கைஸானிய்யா
அர்ராபிழா
அஸ்ஸபயிய்யா:
இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது ‘அர்ரஜ்இய்யா’ வாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)
உட்பிரிவுகள்
அல்குராபிய்யா (காகம்): الغرابية
அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் – சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
அன்னமிரிய்யா:
முஹம்மத் அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான்.
இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை
1. தாரீகுத் தபரி
2. அல்பிதாயா வன்னிஹாயா
3. மீஸானுல் இஃதிதால்
4. லிஸானுல் மீஸான்
5. தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆ’ இயக்கம் உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் ‘ஷீஆ’ இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pழணல போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அஸ்ஸைதிய்யா: الزيدية
அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸெய்த் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால் மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.
இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர் அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் கிளை விடயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.
உட்பிரிவுகள்:
ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.
மூத்தோர்கள்: இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது எமன் நாட்டில் கருத்து முரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸுலைமானிய்யா ஜாரூதிய்யா ஸாலிஹிய்யா போன்ற முப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
(அல்மிலல் வந்நிஹல் பாகம் 1இ பக்கம் 155)
பிந்தியோர்கள்: இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் ‘காபிர்’கள் என்கின்றனர்.
கொள்கைகள்
  • இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்.
  • பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.
  • அல்லாஹ்வின் அறிவு: ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும் கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து பிறப்பெடுத்ததாகும்.
(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)
  • மஹ்தி: இவரின் வருகை பற்றி ஸெய்த் அவர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன. கைஸானிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா எனவும் இமாமிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி எனவும் ஏனைய பிரிவினர் இன்னும் பல மஹ்தீக்கள் வருவார்கள் என நம்புகின்றனர்.
ஷீஆக்கள்
அல் கைஸானிய்யா:
முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் ‘தவ்வாபீன்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த இப்பிரிவினர் அவர்களுக்கு உதவி செய்யத் தவறியதனால் அவரை இழந்தோம். எனவே நாம் பாவிகள் என்று கருதி ‘தவ்பா’ செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்க ஆரம்பித்தனர். உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து பல தளபதிகளைக் கொலை செய்தனர்.
இவர்கள் ‘தனாஸுக்’ என்ற மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டுள்ளனர். இவ்வாறு வழி கெட்ட கொள்கைகள் பல. ‘தீன் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல்’ என்றும் அம்மனிதர் அலிதான் என்றும் பிரசாரம் செய்தான் முக்தார். இவனது புனைப் பெயர் ‘கைஸானிய்யா’ என்று அழைக்கப்படுகிறது. ஷீஆக்களின் அனைத்து வழிகெட்ட கொள்கைகளும் இப்பிரிவினரிடமும் காணப்பட்டன.
அர்ராபிழாக்கள்
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும் மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்று கருதுகின்றனர்.
ராபிழாக்கள் ஷீஆக்களின் ஒரு பிரிவினர். இவர்களுக்குள் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
முஹம்மதிய்யா.
அல் – இஸ்னா அஷரிய்யா ஃ இமாமிய்யா.

முஹம்மதிய்யா:

அலி → ஹுஸைன் → அப்துல்லாஹ் → முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை ‘அந்நப்ஸ் அஸ்ஸகிய்யா’ பரிசுத்த ஆத்மா என்ற புனை நாமமிட்டும் அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும் தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி அவரது தலையைத் துண்டித்து அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
அல் – இஸ்னா அஷரிய்யா ஷ இமாமிய்யா:
இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான் ஈராக் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.
‘அஹ்லுல்பைத்’ திலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் என நம்புகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமை ‘வஸிய்யத்’ மூலம் நியமித்து பதவியில் அமர்த்துவர் எனக் கூறுகின்றனர்.
இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரும் ‘மஃஸும்’ பாவங்கள் செய்யாதவர்கள். எனவே அவர்களை ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்; மறுப்பவர்கள் ‘காபிர்’கள் என்றும் வாதாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நம்பும் இமாம்களில் முதன்மையானவர் அலி (ரழி) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீ அவர்களும் உள்ளனர்.
இமாம்களில் இறுதியான முஹம்மத் என்பவர் ஸாமர்ராவில் தனது தந்தையின் வீட்டில் திடிரென்று மறைந்துவிட்டதாகவும் அவர் மீண்டும் உலகுக்கு – பூமியில் குழப்ப நிலைகள் அதிகரிக்கும் காலப்பிரிவில் நீதியை நிலைநாட்ட – திரும்பி வருவார் என்றும் நம்புகின்றனர். இவரின் வருகையினால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறுவர் என்றும் கூறுகின்றனர். எதிர்பார்க்கப்படும் மஹ்தி (அலை) இவர்தான் எனவும் கருதுகின்றனர். ஷீஆக்களிடையே உள்ள பல பிரிவுகளிடையே மஹ்தி பற்றி மாறுபட்ட கருத்துக்களும் சிந்தனைகளும் உள்ளன.
இமாமிய்யா சிந்தனையுடையோர் நம்பும் 12 இமாம்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹஸன்
ஹுஸைன்
ஸெய்னுல் ஆப்தீன்
முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அல் பாகிர்
ஜஃபர் அஸ்ஸாதிக்
மூஸா இப்னு ஜஃபர் அல் காழிம்
அலீ இப்னு மூஸா அர்ரிழா
முஹம்மத் அல் ஜவாத்
அலீ இப்னு முஹம்மத் அல் – ஹாதி
ஹஸன் அல் – அஸ்கரி
முஹம்மத் இப்னு அல் ஹஸன்
இமாமிய்யா சிந்தனைப் பிரிவினர் ‘அல் ஜஃபரிய்யா’ என்ற பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றனர். இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும் யூத இனத்திற்கு ஒத்ததாக அமைந்துள்ளது.
உட்பிரிவுகள்:
அஷ்ஷைகிய்யா – குருத்துவம்
அர்ரிஷ்திய்யா
இஸ்மாயீலிய்யா
நுஸைரிகள் ஃ அலவியர்கள் – சிரியாவில் உள்ளனர்.
தகிய்யா:
ஷீஆக்களின் கொள்கைகளில் முக்கிய ஒன்றாக ‘தகிய்யா’வும் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதாகவே இக்கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இதன் மறுவடிவம் நிபாக் – நயவஞ்சகத்தனம் பொய் ஆகும். ஷீஆக் கொள்கை உள்ள ஒருவர் உள்ளொன்று வைத்துக் கொண்டு அதற்கு மாற்றமாக வெளிப்படையாக வேறொன்றைக் கூறுவதே ‘தகிய்யா’ எனும் நயவஞ்சகத்தனமாகும்.
‘தகிய்யா’வை ஷீஆக் கொள்கையின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். அதற்கான சில உதாரணங்கள்.
‘தகிய்யா’ என்பது எமது மார்க்கத்தின் அடிப்படை. அதனை மறுப்பவனுக்கு மார்க்கத்தில் இடமில்லை.
‘தகிய்யா என்னுடையதும் எனது முன்னோர்களினதும் வழிமுறை. அது இல்லாதவனுக்கு ஈமான் இல்லை’ என்று ஷீஆ இமாம்களில் ஒருவரான அபூ ஜஃபர் கூறுகின்றார். (அல்காபி 2 ஃ 27)
‘தகிய்யா’ என்பது மார்க்கத்திற்கு கண்ணியம் தருகின்றது. அது இல்லாவிடில் மார்க்கத்திற்கு இழிவு என ஷீஆக்கள் நம்புகின்றனர்.
‘நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை மறைத்து வைத்துக் கொண்டால் அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவான்; அதனை வெளிப்படையாகப் பரப்பினால் அல்லாஹ் உங்களை இழிவடையச் செய்வான்’ என அபூ அப்தில்லாஹ் எனும் ஷீஆ அறிஞர் குறிப்பிடுகின்றார். (அல்காபி 2 ஃ 176)
இஸ்மாயீலிய்யா:
இவர்கள் இமாமிய்யாவின் உட்பிரிவாக உள்ளனர். பன்னிரெண்டு இமாம்களில் முதல் ஆறு நபர்களையும் இவர்கள் நம்புகின்றனர். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதல் இப்பிரிவுக்கு வழிகோலியது. ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவர் இவர்களின் ஆறாவது இமாம். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
1. இஸ்மாயீல். 2. மூஸா அல் காழிம்.
இஸ்மாயீலைத் தலைவராக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாப் பிரிவினர் எனப்படுகின்றனர். மார்க்க விடயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. இன்று ஈரான் குராஸான் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழிமுறைகளுடையதே. இவர்கள் தமது 14வது இமாமாக ‘ஆகாகானை’ நம்புகின்றனர்.
நுஸைரிய்யா:
இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இவர்களை அலவிய்யாக்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் கிறிஸ்தவ மதத் தாக்கத்திற்குட்பட்டு அவர்களின் முக்கிய விழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இன்று இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு நுஸைரிய்யா ஆட்சியே உள்ளது.
துரூஸிகள்:
இறைவன் இமாமின் வடிவில் வந்துள்ளான் என்கின்றனர். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் தன்னில் இறைவன் அவதரித்துள்ளதால் தன்னை வணங்குமாறு மக்களைப் பணித்தான். பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உறவினர்கள் இவனைக் கொலை செய்துவிட்டனர்.
அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர் ‘இவன் சாகவில்லை; மறைந்திருக்கின்றான்’ என்று பாரசீகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹாமாஸ் அத்துரூஸி என்பவன் பிரசாரம் செய்தான்.
ஷீஆக்களின் கொள்கைகள்
  • அல்குர்ஆன்:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட 30 ஜுஸ்வுகள் அடங்கிய இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்ற அல்குர்ஆனை ஷீஆக்கள் முழுமையான அல்குர்ஆனாக ஏற்பதில்லை. 40 ஜுஸ்வுகள் இருப்பதாக நம்புகின்றனர். ‘இமாமுல் காயிப்’ என்பவரிடம் அது இருப்பதாகவும் அவர் வெளிவரும் போது கொண்டுவருவார் எனவும் அதன் பின்னர் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
  • அல் ஹதீஸ்:
புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அலி (ரழி) அவர்களையும் இவர்கள் நம்பும் இமாம்களும் அறிவித்த அல் உஸ்லுல் காபியில் உள்ளவற்றையே நம்புகின்றனர்.
  • ஸஹாபாக்கள்:
நான்கு ஸஹாபாக்களைத் தவிர மற்ற அனைவரையும் காபிர்கள் என்கின்றனர்.
ஷீஆக்கள் பற்றி அறிஞர்கள்:
நான் ஷீஆக்களின் வழிகெட்ட பிரிவான ராபிழாக்களைத் தவிர மற்றவர்களிடமே ஹதீஸ்களை எடுத்தேன். ஏனெனில் ராபிழாக்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி பொய்களை மார்க்கம் என்பர்.
– ஷகீக் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்)–
பொய் சொல்வதிலும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதிலும் முன்னிலைவகிக்கின்றவர்கள் ராபிழாக்களே ஆவர்.
– இமாம் ஷாபிஈ (ரஹ்)–
இந்த வழிகெட்ட ஷீஆக்களைப் பற்றி இமாம் மாலிக் (ரஹ்) அப்துல்லாஹ் இப்னுல் முபாறக் (ரஹ்) அபூ ஸர்ஆ (ரஹ்) இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இப்னுல் கையிம் (ரஹ்) அர்ராஸி அத்தஹபி போன்றவர்களும் நவீன கால நல்லறிஞர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.      SOURCE KHAIBARTHALAM

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets