Facebook Twitter RSS

Saturday, December 22, 2012

Widgets

கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்?



வைகறை வெளிச்சம் ; 2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.
மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.
நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?
கருணை மனு
இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக் கொண்டிருக்கின்றது.
குடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பட்ட, கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ என்னவோ, யாமறியோம்.
அந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன் என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்ட பின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)
இன்று கசாப், நாடறிந்த கொலைகாரன். அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ளன. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன?
கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும்? அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள், ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன?
அரசியல் காரணம்!
நம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.
இந்த வகையில் கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிட இருந்தது. எதிர்கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உட்பட பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கசாப்-ஐ தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா?
ஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும். மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப் பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை. இத்தனையும் இருக்கும் போது ஏன்? இரகசியமாகத் தூக்கிலிட வேண்டும்.
ஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கசாப்-இன் பக்கம் சற்றே திரும்புவோம்.
அவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய் வாக்குமூலங்களை வாங்குவதற்கு அவனைப் படுத்திய சித்திரவதைகள் அவை.
தான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை, நிம்மதி!
கிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசிஸ் சவுதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.
யார் இந்த கசாப்?
இந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.
இவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம். பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.
இப்படிக் கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நேப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation  Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.
ஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.
அப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து, விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
இப்படித்தான் அஜ்மல் கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006 முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி ஷி.வி.முஷ்ரிப் அவர்கள் எழுதிய “கர்கரேயை கொலை செய்தது யார்?” என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.
நேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் சி.வி.பாரூக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கசாப்-ஐ விடுதலை செய்ய மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது “Not on the Merits of the Case, but on the Technical Grounds” எனக் கூறியது. இதன் பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் அத்துணை ஒய்யாரமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம். நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கசாப்-ஐ 2006இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள் அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் சி. வி. பரூக். Source:  The News Revalpindi, Tol: DEC16, 2008.
கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.
மும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள், வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்?
மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்தாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.
ஒருவர் மும்பை மிரர் என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டின், டி சவோசா. மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, "இந்த இருவரையும் சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள்! அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்" என கேட்டார்கள், அஜ்மல் கசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.
அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. "அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் நீதிபதி தகல்யானி. "அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும்" என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.
நீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி. அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில். இரண்டு, போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கசாப்பின் தரப்பில் பொம்மைதாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K.P. பாவர். TH: 1/12/009. அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி இங்கே!.
அரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...?
26/11 வழக்கை நடத்திய நீதிபதி எம்.எல்.தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது, "இந்த வழக்கில் 71 சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம். அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது."
இதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.        
20,000 பக்கங்களைப் படிக்க.
கசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப் படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகால்யானி கொடுத்தது எட்டே நாள்கள் தாம். இந்த எட்டு நாள்களில், மூன்று நாட்கள் கசாப்-இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாள்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ் காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab case
இதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட, அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தார்கள்.
கசாப் -இன் வயது: நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு ‘ஜீவனைல்’ என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.
ஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக “குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001” என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப்படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டு வந்திட வேண்டும்.
ஆனால் நீதிபதி தகயல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.
அஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன், அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.
இவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.
அஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக் காப்பாற்றிட இயலும். ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதைக் கடந்த வயதுக்கு வந்துவிட்டான். “வயது சுமார் 21” என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.
யார் சொன்னது எனக் கேட்டபோது எக்ஸ்ரே வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். "அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா" என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.
"சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா? நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா? அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா?" எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. "நீ வெளியே போ" என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.
இந்த தகவல்களைத் தரும் FRONTLINE இப்படிக் கூறுகின்றது “Getting other Experts Opinion may have helped kasmi in contesting the technical evidence”. ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் “டெக்னிக்கல்” சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும். FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வரையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.
இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.
மூத்த வழக்கறிஞர் Fali S.நரீமான், அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.
இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகக்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக் கண்டு கொள்ளவில்லை.
உயர்நீதிமன்றத்தில்:
உயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், "தாங்கள் கசாப்-ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும்" எனக் கேட்டார்கள்.
அதற்கு உயர்நீதிமன்றம் "அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது" எனக் கூறிவிட்டார்கள்.
அதன்பின் கசாப்-ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மனநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும் வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ‘mitigating circumstance’ தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில் பெரிய அளவில் உதவி செய்யும்.
இதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.
ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!
மேலும் விளக்கங்களுக்கு படியுங்கள் "கர்கரேயைக் கொலை செய்து யார்?"
நீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:
ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.
வழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.
ஆனால் இங்கே கசாப்-ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.
மேல் முறையீடு:
“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத் துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றார். கசாப்-ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.
எப்படி இருக்கின்றது நீதிபரிபாலனம்? நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல, சட்டத்தின் எல்லா கதவுகளும் கசாப்பிற்கு திறந்து விடப்பட்டிருந்தன எனப் பிதற்றுகின்றன. வெட்கம்! வெட்கம்!! மாபெரும் வெட்கம்
புகைப்படமும் கசாப்பும்.
கசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.
ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது "அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன" என்றார்கள். "இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்" எனக் கூறிவிட்டார்கள்.
இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!
கசாப் - யாரைக் காப்பாற்ற இந்த அவசர தூக்கு?
உண்மையிலேயே மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.
ஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.
"இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் - இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை?" எனக் கேட்டதற்கு, "இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை" எனக் கூறிவிட்டார்கள்.
இவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு.
சட்டம் தன் கடமையைச் செய்ததா?
இல்லை! கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனு போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.
பிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும் Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653) 
கேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்; கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பெற்றவர்.
அவர் தனக்கு வழங்கப் பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது; மரண தண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் "அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 72இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்து விட்டார்.
பின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார். இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.
"கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது" எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.
குடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.
உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் "குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம்" எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.
மொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம்" என்கின்றார். (The Hindu, No.22,2012.)
இந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.
நீதி தேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.
சுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனால்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperiety என்கின்றார்கள். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.
உள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.
ஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். “நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என் இயல்பு." இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி இருக்கின்றார். அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.
"இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்னைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன்." இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது, நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார் இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.
ஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை:
IB-இன் வேலை
ஆதிமுதல் அனைத்தும், IB என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.
1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாள்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
உண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்றிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாள்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாள்களில் படித்து, தனக்குத் தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.
அது உடனேயே உரிய துறைகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசுத் தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம். மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.
2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய மாநில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.
“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளும் மன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின்  அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர, உயர அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள்." (page 6 of the Human Rights Report) பாபரிமஜ்ஜித் வழக்கில் IB பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.
ராஜீ ராமச்சந்திரன்
இவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன். இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் - இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார்? என நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர் - தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets