ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஆலோசகரை பெண் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக் கொன்றார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு, அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஆலோசகர் ஒருவர் சென்றார். அப்போது அங்கு நின்ற பெண் பொலிஸ் அதிகாரி திடீரென துப்பாக்கியால் சுட்டதில், இராணுவ ஆலோசகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை ஆப்கானிலுள்ள நேட்டோ படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆனால் மரணமடைந்த ஆலோசகரின் பெயர் விவரத்தை வெளியிடவில்லை. இச்சம்பவம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரி கூறுகையில், பலத்த பாதுகாப்புடன் தான் இராணுவ ஆலோசர் பொலிஸ் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் அருகில் சென்ற பெண் பொலிஸ் திடீரென கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டார் என கூறினார்.
வெளிநாட்டு படை வீரரை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் பொலிஸ் சுட்டுக் கொன்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இதனையடுத்து குறித்த பெண்ணை கைது செய்து, பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment