Bodu Bala Sena (බොදු බල සේනා "Buddhist Power Force"). இலங்கையின் இன்றைய பேசுபொருள். சிங்கள வீர விதான, ஜாதிக ஹெல உருமய, போன்ற உச்சரிப்புகளிற்கும் அப்பால் செயற்படும், இளம் பௌத்தர்களால் வெகுவாக உள்வாங்கப்படும் அமைப்பு. வெறுமனே இனவாதம் மட்டும் பேசாமல் தர்க்கரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும், இலங்கை பௌத்த மக்களை தன்வசப்படுத்துவதற்காக இயங்கும் ஒரு வலைப்பின்னலே Bodu Bala Sena. காலத்திற்கு காலம் இனவாதம் பேசும் பௌத்த அமைப்புகளிற்கு மத்தியில் இதன் செயல் வேகமும், விவேகமும் புருவங்களை உயர்த்த வைக்கின்றன.
R.S.S.ன் கோல்வாக்கர், ஹெக்டேயர் போன்றவர்கள் பேசும் தத்துவார்த்த சித்தாந்தம் சார்ந்த சாயல் Bodu Bala Sena விடம் காணப்படுவது ஒரு முக்கிய விடயமாகும். “அரசியலை இந்து மயப்படுத்து, இந்து மதத்தை ஆயுதமயப்படுத்து” என்பது சுவாஸ்திகா கோஷம். “விஷ்வ பாரத்” கனவினை நனவாக மாற்ற அது அவர்களது அடிப்படை இலக்காக இருந்தது. ஆனால் இந்நாள் வரை அவர்களிற்கு அந்த இலக்கை அடைய முடியவில்லை என்பது வேறு விடயம். R.S.S.ன் சித்தாந்த முழக்கம் Bala Sena வினால் சொல்லப்படவில்லை. ஏனென்றால் 1978 களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அரசியல் எப்போதோ பௌத்தமயப்படுத்தப்பட்டு விட்டது. மூன்று தசாப்த புலி பயங்கரவாதிகளுடனான சண்டையில் இராணுவ சிந்தனைகள் நாட்டில் வேடூண்டி விட்டன. அதனால் அவர்கள் அடுத்த கட்டம் நோக்கி நகரமுற்பட்டுள்ளார்களா? என்ற கேள்வி உருவாவது நியாயமானதே.
Bodu Bala Sena சிங்கள பௌத்த மக்களின் மதம் சார்ந்த தத்துவங்களை மேம்படுத்தவும், கலாச்சார ரீதியாக அவர்களை ஒன்றினைக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாக தன்னை சொல்லிக்கொள்கிறது. அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது. தன்னை அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பாக பௌத்த மக்கள் முன் காண்பிப்பதில் கரிசணையுடன் செயற்படுகிறது.
இந்திய கலைஞர்களிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டம், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் இந்தியாவிற்கு எதிரான ஐ.நா.விற்கான முறைப்பாடு, கனேடிய பொங்கு தமிழிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள், இலங்கை கண்காணிப்பு குழுவிற்கு எதிரான அறிக்கைகள் என அது தனது ஆரம்பகால நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. July 2012 இற்கு பின்னர் அதன் செயற்களம் மேலும் அகலமானது. சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை பொளத்தர்களிற்கான மத சுதந்திரம் பற்றி அது பேசியது. Pereralage Thungasiri என்ற பௌத்த சிங்களவர், பொளத்த வழிபாடுகளில் ஈடுபட்ட போது அவரது தொழில் வழங்குனரால் பொலிசாரிடம் பிடித்து கொடுக்கப்பட்டது பற்றிய செய்தியை மையமாக வைத்தே இந்த பிரச்சாரத்தை அது முன்னெடுத்தது. பின்னர் இலங்கை தூதரம் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அறிவித்தும் இருந்தது. BoBala Sena வினது செயளாலர், Ven Galaboda Aththe Gnanasara Thera அன்று “ Pereralage Thungasiri சவுதியில் சிரச்சேதம் செய்யப்படுவாரா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். சவுதி அரேபியாவில் சிங்கள பெண்கள் கட்டாயமாக அபாயா எனும் உடை அணிய வேண்டிய நிர்ப்பந்தகங்கள் பற்றியும், குற்றங்களிற்காக சிரச்சேதம் செய்யப்பட்ட இலங்கையரின் கொலைகள் பற்றியும் பொது பல சேனா கேள்வியெழுப்பியிருந்தது.
இலங்கையில் தொடராக முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மஸ்ஜித்களிற்கு எதிரான போராட்டங்கள், முஸ்லிம்களை விமர்சித்து செய்யப்படும் பரப்புரை பிரச்சாரங்கள், ஊடகங்களில் குறிப்பாக இணையத்தளங்களில் எழுதப்படும் விடயங்கள் என்பன நாட்டில் ஒரு இன தளம்பல் நிலையை கொண்டுவரும் அபாயங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் Bodu Bala Sena தான் திட்டமிட்டு செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பது ஆரயாயப்பட வேண்டிய விடயமாகும். முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அனைத்து இனவாத செயற்பாடுகளிற்கும் Bodu Bala Sena வின் மேல் குற்றம் சாட்ட முடியாது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளல் வேண்டும். அதே வேளை இலங்கையின் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் மேலோங்கும் தீவிரவாதம் தொடர்பில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதனது அபாயம் குறித்து அரசை எச்சரித்துள்ளனர். உரிய நேரத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ இது குறித்து பல அவதானங்களை முன்வைத்துள்ளார்.
சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலிமுஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். (lankamuslim.org/2012/12/26/ஆயுதம்-ஏந்தவேண்டும்-என்ப/l)
Bodu Bala Sena என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேஸ்புக்கில் இலங்கை முஸ்லிம்கள் மீது மிகவும் தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த செய்திகளை அறியும் அப்பாவி பௌத்த சிங்கள மக்கள் தவறான சிந்தனைகளை நோக்கி வழிநடாத்ப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.. இந்த தீங்கான தொடர் பிரச்சாரங்களினால் நாட்டில் இனவன்முறை உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
முஸ்லிம்களின் பொருளாதாரம் பற்றிய குற்றச்சாட்டுக்கள், இஸ்லாமாபோபியா எனும் இஸ்லாத்தின் வளற்ச்சி குறித்த அச்சம், முஸ்லிம்களின் கலாச்சார பாரம்பரியங்கள் தொடர்பிலான பொறாமை, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வு என பல வடிவங்களில் மதவாதமும் இனவாதமும் இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளன.
எம்மை சுற்றி நடக்கும் விடயங்களில் எந்த விழிப்புணர்வும் இல்லாத மக்களாக இலங்கை முஸ்லிம்கள் இருக்கிறார்கள். வெறுமனே “நாட்டில் இனவாதம் கூடி விட்டது” என்று புலம்புவதை தவிர வேறு எதுவுமே இவர்களிற்கு தெரிவதில்லை. இந்த மதவாத, இனவாத சக்திகளின் சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளிற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினைவது அவசியம். தங்களிற்குள் உள்ள பேதங்களை மறந்து செயற்பட வேண்டிய ஒரு காலமிது. முஸ்லிம் அரசியல்,சமூகவியல் அமைப்புக்கள் இந்த விவகாரங்கள் தொடர்பில் ஒரு குடையில் ஐக்கியப்படல் வேண்டும். இந்த நாட்டில் உள்ள சட்டங்களின் ஊடாக இதற்கான மாற்று வழிகளை நாம் ஏற்படுத்தல் வேண்டும். வெளிப்படையான, பகிரங்கமான முஸ்லிம்களிற்கு எதிரான செயற்பாடுகளிற்கு எதிராக நாம் நீதி துறையை நாடுவதில்லை. மாறாக மாற்று இனத்தையும், அரசையும் ஏசுகின்றோம். இந்த சிந்தனை தவறானது.
சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் அவர்கள் மேல் தாக்கம் செலுத்தும் இனவாத, மதவாத நடைமுறைகளிற்கு எதிராக ஜனநாயகரீதியிலான மாற்று தெரிவுகள் என்ன என்பது தொடர்பான கல்வி இலங்கை முஸ்லிம்களிற்கு அவசியம். இந்த அமைப்புக்கள் தொடர்பான ஆய்வுகள், அவர்களின் பின்புலங்கள், அவர்களது உண்மையான இலக்கு என்ன என்பது போன்ற ஆய்வுகள் தவிர்க்க முடியாதது. அதே வேளை இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான பதிவுகளும் அவசியமானவை. இவென்ட் டயறி எனும் இந்த செயற்திட்டம் உலகிற்கு இலங்கை முஸ்லிம்கள் மீதான அவ்வப்போது நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட விடயங்கள் தொடர்பான செய்திகளை தேட பெரிதும் உதவி புரியும்.
இவர்களை பற்றி இவர்களது வார்த்தைகள் மூலமாக அறிந்து கொள்வதானால் கீழ் வரும் அவர்களது பிரச்சார தளங்களிற்கு சென்று பாருங்கள்..
Bodu Bala Sena வினது பேஸ்புக் முகவரி: https://www.facebook.com/pages/Bodu-Bala-Sena/102787816538523?fref=ts
Bodu Bala Sena வினது இணைய முகவரி: http://bodubalasena.org
Bodu Bala Sena வினது யூடியுப் முகவரி: http://www.youtube.com/user/bodubalasena
No comments:
Post a Comment