Facebook Twitter RSS

Friday, December 21, 2012

Widgets

மீனவர்களை கொன்ற வழக்கு: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த நாடு செல்ல இத்தாலி கடற்படை வீரர்களுக்கு அனுமதி !



கடந்த பிப்ரவரி மாதம் கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் என்று சந்தேகப்பட்டு, இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக இத்தாலிய கடற்படை வீரர்கள் லத்தோர் மாசிமில்லியனோ, சல்வடோர் ஜிரோன் ஆகியோர் மீது கேரள ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ்பண்டிகையை இத்தாலியில் குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பவதாசன், கடற்படை வீரர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக இத்தாலி சென்று வர அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். இதற்காக அவர்கள் ரூ.6 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
 
இந்தியாவில் இருந்து அவர்கள் புறப்பட்டு சென்று 2 வாரங்கள் அவரை அங்கு தங்கிவிட்டு, ஜனவரி 10-ம் தேதி மாலை 3 மணிக்குள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets