தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 மாணவிகள் இறந்துள்ளனர். அதில் ஒருவர் விபத்தில் இறந்தார், மீதமுள்ள இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் செவல்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. அவரது மகள் சுதா(17). பிளஸ் டூ மாணவி. கடந்த 18ம் தேதி காலை அவர் பள்ளி செல்ல வேறு ஒரு பள்ளி வேனில் லிப்ட் கேட்டுச் சென்றார். வளைவு ஒன்றில் வேன் செல்கையில் திடீர் என்று கதவு திறந்ததில் சுதா கீழே விழுந்தார். இந்நிலையில் வேன் நிலைதடுமாறி அவர் மீது கவிழ்ந்ததில் சுதா பரிதாபமாக இறந்தார். அதே நாளில் திருச்செந்தூர் மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. நகரில் 9ம் வகுப்பு படித்த தனது மகள் பபிதா(14) உறவினருடன் படுக்கையில் இருந்ததைப் பார்த்த அலெக்ஸ் பெற்ற பிள்ளையை தன் கையாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி கிளாக்குளத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி புனிதா(13) பள்ளிக்கு சென்றவர் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். விசாரணையில் கூலித் தொழிலாளி சுப்பையா என்பவர் அவரை கற்பழிக்க முயன்று கொலை செய்தது தெரிய வந்தது. தூக்குடியில் ஒரே வாரத்தில் 3 மாணவிகள் இறந்துள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment