Facebook Twitter RSS

Saturday, December 29, 2012

Widgets

2013 முதல் நேட்டோவின் இராணுவ பங்காளியாக இஸ்ரேல் - அந்தரத்தில் துருக்கி!!



                

by: Abu Sayyaf    ஜெரூஸலம் போஸ்ட்டின் தலைப்பு செய்தியே இன்று உலக செய்தியாக மாறியுள்ளது. கைபரை கைப்பற்றிய் சந்தோஷம் போல யூத உடகங்கள் கடந்த இருநாட்களாக ஆர்ப்பரிக்கின்றன. என்ன அந்த செய்தி?. “2013ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நேட்டோவின் கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” என நேட்டோ அங்கீகாரம் வழங்கிய செய்தியே அது. யூத பூதத்தின் ஸியோனிஸ வெறிப்பற்களை இப்போது ஆழமாகவும் அகலமாகவும் பதிக்கலாம். முழு மத்திய கிழக்கிலும். மத்திய ஆசியாவிலும். வட ஆபிரிக்காவிலும். எவ்வளவு சந்தோஷகரமான செய்தி இது. யூத லொபிகள் நியூயோர்க்கில் சந்தோஷ நடனம் ஆடுவது இதனால் தான். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் முதலீடு செய்ததற்கான இலாபம் இப்போது அவர்களிற்கு பங்கிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி இன்னொரு தேசத்திற்கு கசப்பானது. வெறுப்பானது. யாருக்கு?. துருக்கி இதனை கவலையுடன் பார்க்கிறது. நேட்டோவின் இன்னொரு பங்காளி தேசம். உலக முஸ்லிம்களின் கோட்பாதராக தன்னை பரிணாமப்படுத்தி வரும் இந்த வேளையில் இப்படியொரு இடி இறங்கியிருக்கிறது துருக்கிக்கு. சிரியாவில் இஸ்ரேலை முந்திக்கொண்டு ஆட்சி மாற்றத்தை தான் விரும்பியவாறு ஏற்படுத்த அனைத்து பிரயத்னங்களும் இந்த அறிவிப்பால் மண்கவ்வியுள்ளன.

நேட்டோவின் இன்னொரு அங்கத்தவ தேசமான துருக்கி இஸ்ரேலின் இராணுவ பிரசன்னம் நேட்டோவில் உருவாகியுள்ளதை நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளது. ஆனால் நேட்டோவின் மத்திய குழு துருக்கியை உறுப்பு நாடு என்ற வகையில் இஸ்ரேலுடன் நெகிழ்ச்சிப்போக்கு அரசியலை மேற்கொள்ளுமாறும், அதுவே நேட்டோவின் பலம் என்றும், முரண்பட்ட செயற்பாடுகள், வெளிப்பாடுகளினால் நேட்டோவின் பலம் பலவீனப்பட்டு விடல் கூடாது என்று எச்சரி்க்கை கலந்த வார்த்தைகள் அடங்கிய தூதினை அங்காராவிற்கு அனுப்பியுள்ளது. இப்போது துருக்கிக்கு நேட்டோவா? அல்லது வெளியேறுவதா? என்ற சத்திய சோதனை காலம். இதில் எந்த முடிவை நோக்கியும் துருக்கி செல்லலாம். சில வேளைகளில் கேம்ப் டேவிட்டில் எகிப்து அடித்த பல்டி போல ஒரு அந்தர் பல்டியை அடித்து நேட்டோவின் கட்டளைக்கு அடிபணியலாம். தாகூத்திய அரசியல் இதையெல்லாம் அனுமதிக்கும்.

இஸ்ரேல் நேட்டோவின் பங்காளியாக இருந்தாலும் இதுவரை காலமும் பயிற்ச்சிகள், ஒத்திகைகள், செமினார்கள், திட்டமிடல் வகுப்புக்கள் போன்ற அமர்வுகளிளேயே பங்கு பற்றியுள்ளது. 2013 முதல் இஸ்ரேல் நேட்டோவின் களங்களிற்கு தனது இராணுவத்தை அனுப்புவது என்பது பாரிய அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தவல்லது. அமெரிக்காவின் நண்பர்களான சவுதி, குவைத், பஹ்ரைன், கட்டார்,  என யாரும் இதனை எதிர்க்கவில்லை. மௌனம் சம்மதம் என்பது போல் எதுவும் தெரியாதது போல் இருக்கின்றனர்.

யூத இராணுவ பூட்ஸ்கள் முஸ்லிம் தேசங்களின் வேலிகளின் ஓரம் நடைபயிலும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் அமைதி காக்கும் படை என்ற பெயரில் இதனை அது செய்து முடிக்கும். மனிதாபிமான இராணுவ உதவிகள் என்ற பெயரில் இதனை அது செய்து முடிக்கும். அகண்ட யூத சாம்ராஜ்யத்திற்கான நகர்வுகளும், நவசிலுவை போரின் நகர்வுகளும் சமகாலத்தில் ஆரம்பமாகியுள்ளன. உலக அரசியலை பற்றிய நீண்ட கால தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு கட்டமே நேட்டோவில் இந்த இஸ்ரேலிய இராணுவ பிரசன்னம்.

நேட்டோவின் 28 நாடுகளும் வீட்டோ பவரை கொண்டுள்ளன. துருக்கிக்கு பற்றியட் ஏவுகணைகளை வழங்கிய அதே நேரம் இஸ்ரேலை நேட்டோவின் இராணுவ நாடாக அங்கீகரித்து அதிகாரமளித்த வேளையை அமெரிக்கா அழகாக செய்து முடித்துள்ளது. நக்குண்டார் நாவிழந்தார் என்ற தமிழ் பழமொழி துருக்கிக்கும் பொருந்தும் போலும்.

நேட்டோவின் பேச்சாளர் இது பற்றி குறிப்பிடுகையில் “மத்திய கிழக்கின் இரு பலமிக்க இராணுவங்கள் தேசங்கள் எம்முடன் இணைந்துள்ளன. இஸ்ரேலுடன் எமக்கு பல இராணுவ உறவுகள் உள்ளன. இதன் மூலம் அது மேலும் மேன்படும். எதிர் பயங்கரவாத தாக்குதல் முறைமை, சைபர் தாக்குதல் முறைமை, ஏவுகணை தொழில்நுட்ப விருத்தியும் தாக்குதல் முறைமையும் என பல பயன்பாடுகள் நேட்டோவை வலுப்படுத்தும். துருக்கி இதனை புரிந்து கொண்டுள்ளது என்று நம்புகிறோம். இஸ்ரேலுடன் தெளிவான உறவினை ஏற்படுத்தவதன் மூலம் துருக்கி தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும்” என்றார்.

Matthew Mark Horn. “இஸ்ரேல் நேட்டோ திட்டத்திற்கான” பொருப்பாளர். பென்டகனின் முன்னாள் அதிகாரி. யூத காங்கிரஸினால் நிதியுதவி அளிக்கப்பட்டே இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. (இஸ்ரேலை முழு அளவிலான செயற்பாடுடைய நாடாக நேட்டோவினுள் உருவாக்கல்) அது இப்போது அவர்களிற்கு வெற்றியளித்துள்து. நீண்டகால ஸியோனிஸ கனவுகளை இந்த வாய்ப்பின் ஊடாக தங்களால் அடைந்து கொள்ள முடியும்  என்ற நம்பிக்கை அவர்களிற்கு. மத்தியூவ் ஹோர்ன் இது பற்றி குறிப்பிடுகையில் நான் எனது அசைன்மென்டை வெற்றிகரமாக முடித்து விட்டேன். அடுத்த கட்டம் இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் கைகளில் இருக்கிறது. அவர்கள் நேட்டோவி்ன் தலைமையை கைப்பற்றுவதன் ஊடாக தங்கள் கனவுகளை நனவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.!!

தியேட்டர் ஹெஸலின் இஸ்ரேலை உருவாக்கிய திட்டத்திற்கு அடுத்த தரத்தில் மத்தியூவ் மார்க் ஹோர்னின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஸியோன் மையம் ஆர்ஜன்டீனாவில் பிரகடனம் செய்துள்ளது. டெல்அவிவே முஸ்லிம் தேசங்களை நோக்கி திட்டமிடுகிறது என்று ஊற்று நோக்கிய எம்மை அதற்கும் அப்பால் பல திட்டமிடல்கள் உள்ளன என்பதனை இந்த நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன. இன்னொன்றையும் கூட. அது துருக்கியின் துரோகம். அதனை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்..

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets