”’இன்னும் மூன்றே ஆண்டுகளில் வறண்ட நகரம் என்ற பெயரை ஹைதராபாத் பெற்று விடும். சென்னையும் அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சென்னையில் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது.”’ என்ற அதிர்ச்சி தகவல் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் வெளியாகியுள்ளது. பருவ மழை குறைந்ததால் விவசாயம் பொய்த்துப்போய் உள்ளது. குளம், ஆறு, வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்ட நிலத்தடி நீரில் அதிகளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல்கள் இதுதான்:;
* ஐதராபாத், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் 3 ஆண்டுகளில் ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரே இல்லாமல் வறண்டு விடும்.மழை பெய்யும்போது 16 சதவீத நீராவது நிலத்துக்குள் சென்றால் தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன பெருநகரங்களில் 8 சதவீத நீர் கூட நிலத்தடிக்கு செல்லவில்லை.
* வறண்ட நகரம் என்ற பெயரை வரும் 3 ஆண்டுகளில் ஐதராபாத் பெறும். சென்னையும் அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சென்னையில் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது.
* தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 451 நகரங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 மாதிரிகளில் உயர்ந்த அளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
* இதில் மிகவும் அபாயகரமான நிலையில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. அடுத்ததாக நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் நிலத்தடியில் வெற்றிடம்தான் காணப்படுகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும், மோசமான நீரால் நோய் பரவும் அபாயநிலையும் காணப்படுகிறது.
* இந்த நிலையை தவிர்க்க மழை நீர் சேகரிப்பு அமைப்பை அனைவரும் ஏற்படுத்தி, மழை நீரை நிலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பதும், தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் ஏற்கனவே அமலில்உள்ளது.
No comments:
Post a Comment