Facebook Twitter RSS

Saturday, December 29, 2012

Widgets

ரத்தன் டாடா ஓய்வு. டாட்டா குழுமத்தின் புதிய தலைவராகிறார் சைரஸ் மிஸ்திரி !



ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார்.இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட
சைரஸ் மிஸ்திரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார். 44 வயது இளைஞரான சைரஸ் மிஸ்திரி பழம்பெரும் டாட்டா குழுமத்தின் தலைவராகிறார். இன்று புதிய தலைவராகும் மிஸ்திரி, ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை சேர்ந்தவர். பலோன்ஜி குழுமம் டாட்டா குழும நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பான டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு ஒன்றால் மிஸ்திரி ஏற்கனவே டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ரத்தன் டாட்டாவை, ஜே.ஆர்.டீ. டாட்டா 1991–ஆம் ஆண்டில் இக்குழுமத்தின் தலைவர் ஆக்கினார். அவ்வாண்டில் இக்குழுமத்தின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கே இருந்தது. இது ஏறத்தாழ 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி ஈட்டும் சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. டாட்டா குழுமத்தை பன்னாட்டு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது வண்ணக் கனவாக இருந்தது.
மைல்கல் சாதனைகள்
இந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கோரஸ் உருக்கு நிறுவனத்தை டாட்டா ஸ்டீல் வாங்கியது, அந்நாட்டின் சொகுசு கார் பிராண்டுகளா ஜகுவார் மற்றும் லேண்டு ரோவரை டாட்டா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது, மேலும் டாட்டா டீ நிறுவனம் அங்கு டெட்லி பிராண்டை கையகப்படுத்தியது போன்றவை ரத்தன் டாட்டாவின் மைல்கல் சாதனைகளாகஅமைந்தன

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets