by: Abu Sayyaf சவுதி அரேபியா. இஸ்லாத்தின் தாயகம். பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறந்த இடம். இஸ்லாம் உருவான இடம். முதல் முஸ்லிம் கிலாபா இயங்கிய இடம். புனித நகர் மக்கா அமைந்துள்ள இடம். நபியின் தோழர்களான ஸஹாபாக்கள் வாழ்ந்து மரணித்த இடம். இதை எழுதும் இந்த செக்கன் வரை இஸ்லாமிய தஃவாவிற்காக செல்வங்களை செலவழிக்கும் இடம். இப்படி எத்தனையோ பெருமைகளை தன்வசம் கொண்ட தேசம் சவுதி அரேபியா. அமீருல் முஃமினீன் எனும் இஸ்லாமிய தலைமையை புறந்தள்ளி அதிகாரமிக்க மன்னராட்சி என்பதே எப்போதும் பிரச்சனை தரும் விடயம். ஷேஹ் உஸாமா பின் லாதின் (ரஹ்) அவர்கள் இந்த மன்னராட்சியை எதிர்த்தே போராடினார்கள்.
இஸ்லாத்தின் இருப்பிடம் சவுதி என்பது இன்றைய முஸ்லிம்களின் உள்ளங்களில் எழுதப்படாத மானசீக வரிகள். இந்த தேசத்தை அமெரிக்கா தன் பிடியில் வைத்து கொண்டு அதன் வளங்களை தனது எண்ணை கம்பனிகள் மூலம் சுரண்டி வருவது வரலாறு. இந்த தேசத்தின் மதீனா வரை தனது எல்லைகளை அகட்ட வேண்டும் என்பது யூத தேசத்தின் கனவு. ஆனால் இதற்கெல்லாம் அப்பால் “ஈரான்” இந்த தேசத்தை சீரழிக்க வேண்டும் என்பதில் குறியாக செயற்படுகிறது. அதன் ஒரு நிகழ்வு அண்மையில் நிகழ்ந்து முடிந்துள்ளது.
Sheikh Hasan al-Saffar எனும் ஷியா மதகுருவினால் வெளியிடப்பட்ட நூலான al-Ta‘addudiyya wa ‘l-hurriyya fi ‘l-islam (இஸ்லாத்தின் பன்முகத்தன்மையும் சுதந்திரங்களும்) என்பது ஷியா சுன்னி கூட்டிணைவு பற்றி பேசுகிறது. முரண்பாடுகளிற்கு மத்தியில் ஒற்றுமை காணல் எனும் கோஷத்தினை இவர்கள் உயர்த்தி பிடித்தாலும் இதன் பின்னால் மக்கா மதீனாவை கைப்பற்றும் கும்மின் பயங்கரவாதம் மறைந்து கிடக்கிறது இதில்.
அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் ஷியாக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சவுதி அரசை அவரது பத்வாக்கள் மூலமாக நிர்பந்தித்திருந்தார். அதே வேளையில் சவுதி உலமா கவுன்சிலின் அதி உயர் உறுப்பினரான அப்துர்ரஹ்மான் பின் ஜிப்ரின், ஷியாக்கள் மீதான கட்டற்ற படுகொலைகளை கண்டித்ததோடு அதனை நிறுத்துமாறு கோரியிருந்தார். இதனையும் அவர் தனது மார்க்க பத்வா ஊடாகவே வழங்கியிருந்தார். இரண்டாயிரமாம் ஆண்டகளிற்கு பின்னர் சவுதி அரசாங்கம் ஷியாக்கள் மீதான கொலைகளை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சில உரிமைகள் தொடர்பான விடயங்களிலும் நெகிழ்ச்சி போக்கை கடைப்பிடித்து வந்தது.
நேற்று முன்தினம் Qatif நகரில் திரண்ட ஷியாக்கள் ஒரு பேரணியாக நகரின் மையத்தை நோக்கி நகர்ந்தனர். பின்னர் அண்மையில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற முடியாத தடை உத்தரவும் பெற்றவரான Sheikh Tawfiq AlAmer இனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பரித்தனர். அநியாயமாக அவர் மீது சவுதி அரசாங்கம் போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரவாரித்தனர். பின்னர் அவர்கள் கோஷம் அரசியல் மாற்றம் பெற்றது. “சவுதி மன்னராட்சி ஒழிக” என கோஷமிட்டனர். ஜனநாயக சுதந்திர பாராளுமன்றம் தேவை என முழங்கினர். ஹிஜாஸ் கட்டுப்படாது என சத்தமிட்டனர். மேலும் கோஷத்தின் வாசகங்கள் வழுவடைந்தன. கிழக்கு பிராந்தியத்தை தனியாக பிரி என முழங்கத் துவங்கினர். இறுதியில் இமாம் அலியையும், இமாம் ஹுஸைனையும் நினைவு கூர்ந்தனர்.
சவுதி அரேபிய கலகமடக்கும் பொலிஸாரின் இறுக்கமான செயல் நடவடிக்கைகள் காரணமாக இவர்கள் கலைக்கப்பட்டனர். இதனை ஒரு சாதாரண கலகமாகவோ, அல்லது ஒரு பிராந்திய மக்களின் உணர்வுகளின் எதிரொலியாகவோ பார்க்க முடியாது. உரிமை மறுப்புக்கள், நீதி தொடர்பில் முரண்பாடுகள், கட்டற்ற சர்வாதிகார பிரயோகங்கள் போன்றவற்றிற்கான கோஷங்களை ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முழங்கவில்லை.
இவர்களது கோஷங்களிலும் பிரகடனங்களிலும் “கிழக்கு பிராந்தியத்தின் சுயநிர்ணயம்” எனும் அரசியல் ஆயுதம் முழங்கியது. பிராந்தியத்தில் மிகவுமே வலிமை குறைந்த இவர்கள் இதுப பற்றி பேசுவதன் பின்னணியில் ஈரானின் அரசியல் நகர்வுகள் இருக்க நிறையவே வாய்ப்புள்ளது. இந்த தேசம் சிரியாவின் விவகாரத்தில் பஸர் அல் அஸாதின் அரசிற்காக துணை நின்றது. இப்போது அது சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தை பிரிப்பதில் மூன்றாம் தரப்பு மூலம் தன் திட்டங்களை நிறைவேற்ற பார்க்கிறது.
சவுதியின் கிழக்கு பிராந்தியம் என்பது ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற தேசங்களுடனும் பாரசீக வளைகுடாவுடனும் தொடர்புடையது. ஈரானிய ஷியாக்கள் சவுதியினுள் நுழையும் பட்டுப்பாதையும் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இந்த துரோக அரசயிலிற்கு அமெரிக்காவும், ஏன் இஸ்ரேலும் கூட துணை போகலாம். ஆச்சரியப்பட எதுவுமில்லை.
இந்த பேரணி என்பது சவுதி அரசிற்கு விடுக்கப்படும் முதல் சிவப்பு சமிக்ஞை. இந்த பிரிவினைவாத சக்திகளை இனங்கண்டு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தான் சவுதி அரேபியா என்ற தேசம் நிலைத்திருக்கும். ஷியாக்கள் சவுதியில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்து விட்டாலோ அல்லது கிழக்கு பிராந்தியத்தில் பிரிவினை போராட்டங்களை ஆரம்பித்து விட்டாலோ நிறுத்துவது மிகவுமே கடினம். அரேபிய வளைகுடா கடலும் சிவப்பு நிறமாவது பின்னர் தவிர்க்க முடியாததாகி விடும்.
No comments:
Post a Comment