செச்னியா. வீரத்தின் விளை நிலம். ரஷ்யர்கள் மீண்டும் மீண்டும் தோற்றுப் போகும் பூமி. மிக் விமானங்கள், ஹோவிட்சர் ஆட்டிலறிகள், டீ.80 ரக டாங்கிகள், எம் 24 தாக்குதல் ஹெலிகள், இரசாயன குண்டுகள், நச்சு குண்டுகள், என தனது பலம் வாய்ந்த கனரக ஆயுதங்களாலும் வீழ்த்த முடியாத போராட்டம். போராட்ட உணர்வு மிக்க மக்கள். வீரமிகு போராளிகள், அவர்களை உள்வாங்கும் இயற்கை என எல்லாமே ரஷ்யாவிற்கு பாதகமாக இருக்கின்றது. தனது 5 வருட ஆட்சியில் இங்குஸ் கவ்கஸ்ஸில் அமைதியை கொண்டு வருவேன் என முழங்கிய விளாடிமிர் புட்டின் பின்னர் ஒரு பேட்டியில் கூறினார் செச்னியா என்பது ரஷ்ய வீரர்களை பலியெடுக்கும் மரணக்குழி என.
இப்போது ஆயுதங்களில் நம்பிக்கை அற்று போன நிலையில் அமெரிக்க பாணியில் “முஸ்லிம்களிற்கு இடையிலான மோதல்” எனும் களத்தை திறக்க முற்பட்டுள்ளனர். பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், சிரியாவில் என அமெரிக்கா திறந்துள்ள “ஷியா சுன்னி கொலைக்களம்” இப்போது செச்னியாவில் திறக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசு ஈரானிற்கு சில காலங்களிற்கு முன்னர் அவர்களது ஷியாயிஸத்தை பரப்புவதற்கும், சூபிஸத்தை வளர்ப்பதற்கும் தனது நிலங்களான Shamilkala (முன்னாள் Makhachkala) மற்றும் Caspian Sea போன்ற பகுதிகளை தாரைவார்த்திருந்தது. அதில் தங்கு தடையின்றி ஈரானியர்கள் உள்வரவும், வெளிச்செல்லவும் அனுமதியளித்திருந்தது.
இப்போது கும்மின் அயாத்துல்லாக்கள் இங்கு ஒரு பெரிய ஷியா நிலையத்தை நிறுவ முற்பட்டுள்ளனர். ஈரானிய அரசின் முழு ஒத்துழைப்புடன் இந்த ஷியா பிரச்சார மையம் செயற்படவுள்ளது. இது ஷியாக்களின் குடியிருப்புக்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷியாயிஸம், மற்றும் சூபிஸத்தை தங்கள் பிரச்சார மூலங்களாக கொண்டு இவர்கள் செயற்படவுள்ளனர். இதன் மூலம் இங்குஸ் பிராந்தியத்தில் ஷியா சுன்னி மோதல்களை உருவாக்குவது இவர்கள் திட்டம். ரஷ்ய அரசு செச்னியா போராட்டத்தை நிர்மூலும் செய்வதறக்காக அந்த அரசிற்கு ஈரான் செய்யும் துரோகம் இது. Dagestan பிரதேசத்தில் ஒரு பெரிய ஷியாக்களின் மஸ்ஜித்தை அமைத்து அதனை கட்டளைபீடமாக மாற்ற ஈரானிய ஷியாக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்திற்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
செச்னிய விடுதலை போராட்டத்தை நாசம் செய்ய முயலும் ஈரானிய அரசின் இன்னொரு முகம் இது.
செச்னிய போராட்டத்தை நிர்மூலம் செய்ய முனையும் ஈரான் - துரோக தேசத்தின் இன்னொரு முகம்!! source khaibarthalam
No comments:
Post a Comment