கெய்ரோ:எகிப்தில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தால் இஸ்லாமிய ஆட்சி அமலுக்கு வரும். ஆகையால் அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எகிப்தில் சிறுபான்மையினரான காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் ராஃபேல் அழைப்பு விடுத்துள்ளார்.
எகிப்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வீடியோ மூலம் பிஷப் உரையாற்றியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ’நாம் எகிப்தில் மிகவும் நிர்ணாயக சக்திகள்.
நமது வாக்குகள் சிதறாமலிருக்க கவனம் செலுத்த வேண்டும். வருகிற சனிக்கிழமை நடைபெறும் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’ என்று பிஷப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்தவர்களின் பிரச்சாரத்தின் மூலம் அரபுநாடுகள் அல்லாத வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலோர் அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஏனெனில் அரபு நாடுகள் அல்லாத வெளிநாடுகளில் வசிக்கும் எகிப்தியர்களில் பெரும் எண்ணிக்கையினர் கிறிஸ்தவர்கள் ஆவர். மேலும் நேசனல் சால்வேஷன் ஃப்ரண்ட் என்று அழைக்கப்படும் எதிர்கட்சியினர் சிலர் எகிப்தில் வன்முறையை உருவாக்குகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.
வெளிநாட்டு சக்திகளுக்கும், இஸ்ரேல் பயங்கரவாத உளவுத்துறையான மொசாதிற்கும் எதிர்கட்சியினர் சிலருக்கும் தொடர்பு உள்ளது. வன்முறைகளுக்கு பொருளாதார உதவியை இவர்கள் தாம் எதிர்கட்சியினருக்கு அளிக்கின்றனர் என கூறப்படுகிறது.
முர்ஸி அம்ர் பின் ஆஸ் மற்று முஆவியா (இவர்கள் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் ஆவர்) போல அதிகாரத்தை தம் வசப்படுத்த தந்திரங்களை பிரயோகிக்கிறார் என்று முபாரக்கின் ஆதரவாளரான தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர் ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment