Facebook Twitter RSS

Sunday, December 23, 2012

Widgets

என்னால் பால் தாக்கரேயைப் பாராட்டிட முடியவில்லை - மார்க்கண்டேய கட்சு


மார்க்கண்டேய கட்சு, தலைவர் பத்திரிகையாளர்கள் குழுமம்
அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபல்யங்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இவர்கள் ஒருவருக்கு மேல் ஒருவம் ஏறிநின்று பால்தாக்கரேக்கு புகழாரங்களைச் சூட்டுகின்றார்கள். வந்து குவியும் இந்தப் பாராட்டுகள் பரபரப்பான ஆரவாரங்கள், இவற்றினூடே நான் பணிவோடு என்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
“இறந்தவர்களைப் பற்றி சிறந்ததையே பேசுங்கள்” என்ற விஷயத்தை நான் நன்றாக அறிவேன். பால்தாக்கரே விஷயத்தில் நான் அந்தவிழுமத்தைப் பின்பற்ற முடியவில்லை என வருந்துகின்றேன். காரணம் என் தாய் நாட்டின் நலன் இதுபோன்ற விழுமங்களைவிட எனக்கு உயர்வானது.

பால்தாக்கரேயின் பாரம்பரியம் என்ன?
அது! “மன்னனின் மைந்தர்கள்” என்ற தேசத்துரோக முழக்கம் இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் (1) (1) சொல்கின்றது
“இந்தியா, அதாவது பாரதம், பல மாநிலங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்” இந்தியா ஒற்றை மாநிலம் அல்ல, மாறாக அஃதோர் தொகுப்பு, ஒன்றியம்.
அரசியல் நிர்ணயச்சட்டம், 19 (1) (மீ) சொல்லுகின்றது “இந்தியக் குடிமக்கள் யாவர்க்கும்-இந்திய எல்லைக்குள் தாம் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும் தங்கி இருப்பதற்கும் உரிமை உண்டு”
இதனால், குஜாரத் மாநிலத்தைச் சார்ந்த மக்களுக்கும், தென்னிந்தியாவைச் சார்ந்த மக்களுக்கும், பிகாரைச் சார்ந்த மக்களுக்கும், உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த மக்களுக்கும், இந்தியாவின் இதரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், மாராட்டிய மாநிலத்திற்கு செல்லவும் தங்கவும், வாழ்ந்திடவும் உரிமை உண்டு. இதனால் மராட்டிய மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு மாராட்டிய மாநிலத்தில் குடியேறும் உரிமை உண்டு. அதேபோல் மராட்டிய மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும், இந்தியா சில வரலாற்றுக் காரணங்களுக்காக, ஜம்முகஷ்மீர், சில தென்கிழக்கு மாநிலங்கள் இவற்றில் சில பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், எல்லா மக்களுக்கும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் குடியேறும் உரிமை உண்டு.
ஆனால் (பால்தாக்கரேயின்) மண்ணின் மைந்தர்கள் கொள்கை, மராட்டிய மாநிலம் மராட்டியர்களுக்கே சொந்தம் எனச் சொல்லுகின்றது. குஜராத்தைச் சார்ந்தவர்களும், தென்னிந்தியர்களும், வட இந்தியர்களும் மராட்டிய மாநிலத்திற்கு அன்னியமானவர்கள் என்பது பால்தாக்கரேயின் கருத்து.
பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனையைச் சார்ந்தவர்கள், 1960களிலும், 1970களிலும், தென்னிந்தியர்களை அடித்து நொறுக்கினார்கள். அவர்களின் உணவிடங் களை, உறைவிடங்கள் இவற்றை யெல்லாம் துகள்களாக்கினார்கள். 2008இல், பீகார் மாநிலங்களைச் சார்ந்தவர்களையும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர்களையும், அடித்து நொறுக்கினார்கள். பிற மாநிலங்களைச் சார்ந்த இவர்கள், அங்கே பால் விற்றும், செய்தித் தாள்களைப் பட்டுவாடாச் செய்தும், வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள். இவர்களை மராட்டிய மாநிலத்தின் ஊடுருவிகள் எனப் பழிசுமத்தி தாக்கினார்கள். வாடகைக்கு கார்களை ஒட்டிக்கொண்டிருந்தவர்களின் கார்களையும் உடைத்தார்கள். முஸ்லிம்களையும் கருவறுத்தார்கள்.
இவையெல்லாம் பால்தாக்கரேக்கு ஒருவாக்கு வங்கியை உருவாக்கித் தந்தன. அது மற்றவர்களை வெறுக்கக் கற்றுத்தந்த வாக்கு வங்கி. ஹிட்லருக்கும் இப்படித்தான் ஒரு வாக்கு வங்கி இருந்தது. இந்த ஹிட்லரை பால்தாக்கரே அடிக்கடிப் புகழ்ந்து கொண்டிருந்தார். நாடு உடைந்து குடிமக்கள் சிதறுண்டால் எனக்கென்ன? என்ற பாங்கிலேயே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.
மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கை இந்திய தேத்திற்கு எதிரான, இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கும் எதிரான ஏன் நன்கு ஆய்வுசெய்தால், பால்தாக்கரே, அவரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள், இவர்களுக்கும் எதிரானது.
இந்தியா விரிந்து வியாபித்த ஒரு நாடு (வட அமெரிக்காவைப் போல்) இங்கே இந்தியாவில் குடியேறியவர்களே அதிகம்.
இந்தியாவில் வாழும் மக்களில் 92-முதல் 93 சதவிகிதம் வரை பல இடங்களிலிருமிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள். குறிப்பாக வட மேற்கு பகுதிகளிலிருந்து வசதியான வாழ்க்கையைத் தேடிவந்தவர்கள். என்னுடைய “பிளாக்”- இல் “இந்தியா என்பது என்ன? என்ற கட்டுரையைப் படிக்கவும். (justicekatju.blogspot.in)
இந்தியாவின் பூர்வீகக்குடிகள் அல்லது இந்தியாவின் உண்மையான மண்ணின் மைந்தர்கள், திராவிடத்திற்கு முந்தைய ஆதிவாசிகள் – (Old Dravidian Tribales known as Adivasis, the bhils Gonds, santhas, Todas etc) அவர்கள் எண்ணிக்கையில் ஏழு அல்லது எட்டு விழுக்காடுகளே இருக்கின்றார்கள். ஆகவே மண்ணின் மைந்தர்கள் என்ற கோட்பாட்டை மிகவும் அக்கறையோடு செயல்படுத்தவதாக இருந்தால் 92 முதல் 93 விழுக்காடு மராட்டியர்களும் அந்நியர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களை அப்படித்தான் நடத்திட வேண்டும். ஒரு வேளை பால்தாக்கரேயின் குடும்பத்தினரும் வட்டத்திற்குள் வரலாம்.
மராட்டிய மாநிலத்தின் உண்மையான பூமிபுத்திரர்கள்-மண்ணின் மைந்தர்கள், பில்ஸ் இன மக்களும் அவர்களைச் சார்ந்தவர்களுந் தான். இவர்கள் மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 7 அல்லது 8 விழுக்காடுகள் தாம் (சதவிகிதம்தான்).
நாம் ஒன்றுபட்டு நின்றால்தான் வறுமை, வேலை இல்லாமை இவற்றையெல்லாம் வென்று பொருளாதார வளர்ச்சியையும் பெற்று உலகநாடுகளை விஞ்சிமுன்னே நின்றிட முடியும். இதனால் தான் என்னால் பால்தாக்கரேயை பராட்டிய முடியவில்லை.
THE HINDU NOV.  19, 2012.
பால்தாக்கரே பற்றி பிரபல எழுத்தாளர்
இந்திய பாசிசத்தின் அங்கீகாரம் உண்மை முகம்.
பால்தாக்கரேக்கு சொந்தமான திட்டம் எதுவுமில்லை. 1992-93களில் முஸ்லிம்களைத் திட்டம் போட்டு கொலை செய்ததுதான் இவருடைய சாதனை. இதுவும் இவருடைய சொந்த சரக்கல்ல. இதுபோன்ற படுகொலைகள் பலவற்றை சங்க பரிவாரத்தினர் அதற்கு முன்பே நடத்தி இருந்தார்கள். இந்தப் படுகொலைகளிலெல்லாம் பால் தாக்கரேயை காங்கிரஸ் பக்குவமாக பாதுகாத்தது.
காங்கிரஸ் கட்சிதான் இந்திய அரசியல் கலாச்சாரத்தின் முக்கிய மையம். ஆனால் அது தொடர்ந்து வகுப்புவாத சக்திகளை வளர்த்துவிட்டது. அவர்களுடன் சமரசம் செய்துகொண்டது. 1992/93 இன் இனப்படுகொலை வரையும் அதற்குப் பின்னும் பால்தாக்கரேயை வளர்த்தது காங்கிரஸ்தான்.
பிரவீன் சாமி: TH:20/11/2012.
சிறுபான்மையினர் கவனத்திற்கு:
1992/1993 இனப்படுகொலைகளை நிகழ்த்திய பால்தாக்கரேயை பட்டவர்த்னமான குற்றவாளி என்றது ஸ்ரீகிருஷ்னா என்ற நீதிபதியின் தலைமையில் அமைந்த விசாரணைக் குழு. இந்த இனப்படுகொலை குற்றத்தில் ஒரு மணி நேரம் கூட பால்தாக்கரேயை அதாவது இந்திய பாசிசத்தின் உண்மை முகத்தை சிறையில் வைத்திட இயலவில்லை, காரணம் சிவசேனா ஆட்சியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தேசிய காங்கிரஸ், (ழிசிறி) அவரை தொடாந்து காப்பாற்றியது. அதேபோல் பல்வேறு ஊழல்களிலும் ஒரு கொலை வழக்கிலும், ஒரு பெரும் நில அபகரிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்ட நிதின் கட்கரிக்கும் இந்த தேசிய காங்கிரசைச் சார்ந்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
இதனால் காங்கிரசு வந்துவிட்டால் எல்லாம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் இந்திய பாசிசம் இப்போது தேசியக் கொடியைக் கொண்டு கவுரவிக்கப்படுகின்றது என்பதை கவனிக்கவும்?
தமிழில்: மு. குலாம் முஹம்மத்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets