லண்டன்: இன்றைய குழந்தைகளை இன்டர்நெட், குறிப்பாக கூகுள் மூளை வறட்சியுடையவர்களாக மாற்றி விட்டது. இது பெரும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல இங்கிலாந்து கண்டுபிடிப்பாளர் டிரெவர் பெய்லிஸ். 75வயதான பெய்லிஸ் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். அதில் முக்கியமானது வைன்ட்அப் ரேடியோ. அவர் இன்றையகுழந்தைகளின் நிலை குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,இன்றைய குழந்தைகள் செயல்திறன் பயிற்சியும், திறமையும் அற்றவர்களாக வளர்கின்றனர். எதையும் யோசித்துச் செய்யும் மன நிலையில் அவர்கள் இல்லை. இன்டர்நெட்டையே முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கூகுளுக்கு அடிமையாகி விட்டனர். கூகுள் மூலம்தான் எதையும் தேடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களது மூளை வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமையும், மூளை வறட்சிக்கு வித்திடும். குழந்தைகள் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கேற்ப அவர்களைப் பழக்க வேண்டும். மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று எதற்கெடுத்தாலும் அதற்கு அடிமையாகியிருக்க கூடாது. ஆனால் இன்றுள்ள குழந்தைகள் அப்படியா இருக்கிறார்கள். அவர்களை நினைத்தாலே எதிர்காலத்தை நினைத்துப் பயமாக இருக்கிறது என்றார் பெய்லிஸ்.
No comments:
Post a Comment