Facebook Twitter RSS

Sunday, December 09, 2012

Widgets

Khaled Mashaal இன் காஸா விஜயம் பற்றிய சில வாசகங்கள்!!



by: Abu Sayyaf         Khaled Mashaal  (Chairman of the Hamas Political Bureau). மேற்குகரையின் ரமழாவின் ஒரு கிராமமான சில்வாத்தில் 1956 ல் பிறந்தவர். அரபு இஸ்ரேலிய யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த பலஸ்தீன குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. தந்தை தனது வாழும் இடமாக குவைத்தினை தேர்ந்து கொண்டார். குவைத் பல்கலைக்கழகத்தில் படித்து பொளதீகவியல் பட்டதாரியாக வெளியேறினார். பல்கலைக்கழக நாட்களிலேயே அல் இஃவானுல் முஸ்லிமீனின் சிந்தனைக்தாக்கத்திற்க உட்பட்டவர் காலித் மஸேல். அது அவரை பின்னைய நாட்களில் இஃவான்களின் முக்கிய முழு நேர செயற்பாட்டாளராக மாற்றியது. 

ஹாகீமத் அல் ஹக் உல் இஸ்லாமிய எனும் அமைப்பிலும், பலஸ்தீன மாணவர் யூனியனிலும் சேர்ந்து இயங்கிய இவர் பின்னாட்களில் ஒரு பலஸ்தீன விடுதலைக்கான போராளியாகவும், அந்த விடுதலை என்பது மண்ணிற்கான போராட்டமாக இன்றி இஸ்லாமிய ஷரீஆவிற்கான போராட்டமாகவும் இருக்க செயற்பட்ட ஒரு இஸ்லாமியவாதியாகவும் இவரை மாற்றியது. இதன் பின்னைய களங்கள் இவரை ஹமாஸில் இணைய வைத்தது. 1991 வளை குடா யுத்தத்துடன் அவர் குவைத்தில் வசிப்பதற்கான வாய்ப்புக்கள் கேள்விக்குறியானது. அப்போது அவர் ஹமாஸின் மிக முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக மாறியிருந்தார். 

அபூ மர்சூக்குடன் இணைந்து ஹமாஸினது வெளிநாட்டு செயற்பாடுகளை துரிதப்படுத்தினார். எங்கெல்லாம் பலஸ்தீனர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் ஹமாஸின் செயற்பாடுகள் நடைபெறும் கடினமான வேலைத்திட்டம் அது. வெற்றிகரமாக இஸ்ரேலின் அநியாயங்களையும், காஸா மீதான அவர்களது வன்முறையையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தார். மொஸாட்டின் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் 10 இடங்களில் ஒன்று. 

1997 மகானே யெஹ்தா சந்தை குண்டு வெடிப்பு இவரை இலக்காக வைத்து மொஸாட்டினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அதிலிருந்து தப்பி விட்டார். நேரடியாக மொஸாட் ஈடுபடாத பல கொலை முயற்ச்சிகளும் மூன்றாம் தரப்பினாலும், ஐந்தாம் படையினராலும் கூலிக்கு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பாரிய அளவில் சித்தியெய்தவில்லை. 

ஜோர்தானில் காலித்  மிசேல் தனது அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கையில், போலி பாஸ்போர்ட்கள் மூலம் உள்நுழைந்த மொஸாட் தாக்குதல் அணியினர் நேரடியாகவே அவரை கொல்வதற்கு முயன்றனர். பாஸ்ட் கில்லிங் பொய்சின் எனும் துரிதமாக உடலுறுப்புக்களை செயலிழக்க வைத்து கொல்லும் நச்சு ஊசியை அவரது இடது காதினருகில் செலுத்தி விட்டு ஓடினர். அதனை கவனித்த அவரது மெய்பாதுகாவலர் அவர்களை துரத்தி சென்றனர். ஏற்கனவே தயாராக இருந்த காரில் மொஸாட் ஏஜென்ட்கள் ஏறி தப்பியோடிய போது பிரிதொரு காரில் அவர்களை விரட்டி சென்று ஜோர்தானிய பொலிஸாரின் உதவியுடன் அவர்களை மடக்கி கைது செய்து அருகில் இருந்த பொலிஸ் நிலையத்தில் சிறையிட்டனர். 

கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகளை பணயமாக வைத்து அன்றைய மன்னர் கிங் ஹுஸைன் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் தொடர்பு கொண்டு அவர் உடலில் ஏற்றப்பட்ட நச்சினை செயலிழக்க வைக்கும்  antidote இனை வழங்குமாறு கோரினார். நெதன்யாஹு மறுத்து விட்டார். கைது செய்யப்பட்ட உளவாளிகள் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் தாங்கள் இஸ்ரேலிய அரசின் உத்தரவுக்கமையவே செயற்பட்டதாக வாக்குமூலம் கொடுத்த போது நிலைமை சிக்கலாவதை உணர்ந்த இஸ்ரேலின் பாதுகாவலனும், அமெரிக்க அதிபருமான பில் கிளின்டன் தலையிட்டு, அந்த  antidote இனை அம்மானிற்கு வரவழைக்கும் முயற்ச்சியில் அதிகாரபூர்வமாக ஈடுபட்டார். பின்னர் மொஸாட்டின் அன்றைய இயக்குனர் அந்த மருந்தை நேரடியாகவே சென்று வழங்கி தனது சகாக்களை மீட்டு வந்தார். 

இந்த நிகழ்வின் போது மன்னர் ஹுஸைன் போற்றத்தக்க ஒரு காரியம் புரிந்தார். இது பலரிற்கும் தெரியாது. அது தான் அந்த அன்டிடோட் முறிப்பு மருந்துடன் இஸ்ரேலிய சிறையில் 
தடுத்து வைக்கப்பட்டிருந்த ஷேஹ் அஹ்மட் யாஸீனின் விடுதலை பற்றிய கோரிக்கையாகும். அவருடன் மேலும் பல பலஸ்தீன கைதிகளின் பட்டியல் இஸ்ரேலிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட இஸ்ரேலின் மொஸாட் ஏஜென்ட்கள் சாதாரண உளவாளிகள் அல்ல. மிகவும் முக்கிய பல அசைன்ட்மென்ட்களை முடித்தவர்கள். ரகசியமான பல  மர்ம கொலைகளான அசாஸினேஷன்களை செய்தவர்கள். இவர்கள் இஸ்ரேலிற்காக மட்டுமல்ல, சீ.ஐ.ஏ.யிற்காகவும் அமெரிக்க சார்பாக செயற்பட்டவர்கள். இவர்களின் விடுதலை என்பதன் விலை மிக மிக உயர்வானது. எதை இழந்தாலும் பரவாயில்லை, இவர்கள் மீண்டும் டெல்அவிவ் திரும்ப வேண்டும். அமெரிக்காவிற்கும் இது தவிர்க்க முடியாத பிரச்சனை. நாளைய ஊடகங்களில் பல இரகசிய படுகொலைகளின் பட்டியல் வெளிவராமல் இருக்க வேண்டும் என்றால் மன்னர் ஹுஸைனின் வேண்டுகோளை ஏற்பதனை தவிர வேறு வழியில்லை. 

ஷேஹ் அஹம்மட் யாஸீன், உட்பட பல பலஸ்தீன ஹமாஸ் போராளிகள் இந்த பேரம் பேசலில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மன்னர் ஹுஸைனின் பெயர் இதில் பிரபல்யமாகவில்லை. இந்திபாதாவின் தந்தை அஹ்மட் யாஸீன் என்றால் அதற்கும் அடிப்படை மன்னர் ஹுஸைன். தான் தன் கரங்களால் பலஸ்தீனர்களிற்கும், யாஸிர் அரபாததிற்கும், அல் பதாவிற்கும் செய்த துரோகங்களை துடைத்து கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது மன்னரிற்கு. 

பலஸ்தீன் அரசியல் தலைவரும், ஈடு இணையற்ற சாணாக்கியமிக்கவரும் மக்கள் அரசியலை உருவாக்கி வழி நடாத்தியவருமான டாக்டர் அப்துல் அசீஸ் ரன்தீஸியின் மறைவின் பின்னர் ஹமாஸிற்கு அந்த வெற்றிடத்தை ஈடுசெய்யுமளவிற்கு தகைமையும், திறமையும் வாய்ந்த தலைவராக நிரப்பியவர் இந்த காலித் மிஷைலே. 

ஹமாஸின் 25 வருட பூர்த்தி நினைவு தினத்திற்காக நேற்றைய தினம் இவர் காஸாவிற்கு வருகை தந்துள்ளார். இதன் காரணமாகவே இவரது வருகை என்பது பேசும் படி உள்ளது. காஸாவின் மக்கள் முன் காலித் மிஷைல் பேசிய வார்த்தைகளில் முக்கியமான வசனங்கள் இவை.  "Today is Gaza. Tomorrow will be Ramallah and after that Jerusalem, then Haifa and Jaffa." இந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்கள் எமக்கு புரிகிறதோ இல்லையோ இஸ்ரேலிற்கு நன்றாகவே புரியும்.  thanks khaibarthalam 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets