Sunday, January 29, 2012
காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸா செல்கிறார்
காஸ்ஸாசிட்டி:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட
இயக்கமான ஹமாஸின் அரசியல் விவகார தலைவரான காலித் மிஷ்அல் முதன் முறையாக
காஸ்ஸாவிற்கு செல்லவிருக்கிறார். மிஷ்அல் தனது சுற்றுப் பயணத்தின்போது
ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர்
இஸ்மாயீல் ஹானிய்யா ஆகியோரை சந்திப்பார் என காஸ்ஸா வெளியுறவுத்துறை அமைச்சக
செய்தித் தொடர்பாளர் அஹ்மத் யூசுஃப் தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீனின் மேற்குகரையில் பிறந்த மிஷ்அல்
இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து 1967-ஆம் ஆண்டு ஃபலஸ்தீனை விட்டு வெளியேறிய
பிறகு இதுவரை திரும்பச் செல்லவில்லை.
மஹ்மூத் அப்பாஸின் தலைமையிலான ஃபத்ஹுடன்
நல்லிணக்க பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்பு மிஷ்அல் ஃபலஸ்தீனுக்கு
செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என அல் அரேபியா
தொலைக்காட்சி சேனல் கூறுகிறது.
கடந்த வாரம் மிஷ்அல் கெய்ரோவில் இஃவானுல்
முஸ்லிமூன் உள்ளிட்ட இயக்கங்களுடன்நடத்திய பேச்சுவார்த்தையில்
ஒத்துழைப்பதை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தெரிவித்ததாக அஹ்மத்
யூசுஃப் கூறுகிறார்.
இதற்கிடையே, 1999-ஆம் ஆண்டு ஜோர்டானில்
இருந்து வெளியேற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு காலித் மிஷ்அல்
அந்நாட்டிற்கு செல்லவிருக்கிறார். கத்தர் இளவரசரும், செய்தி ஒலிபரப்புதுறை
அமைச்சருமான ஷேக் ஹமத் பின் தமீம் அல்தானி உள்பட பிரமுகர்களுடன் அவர்
சந்திப்பை நடத்துகிறார்.
ஜோர்டானுடன் புதிய உறவை
பலப்படுத்துவதற்காக இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஜோர்டான்
தலைநகர் அம்மானில் ஹமாஸின் அலுவலகம் திறப்பது உள்ளிட்ட பல்வேறு காரியங்கள்
விவாதிக்கப்படும் என ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1999-ஆம் ஆண்டு காலித் மிஷ்அல் உள்பட
நான்கு ஹமாஸ் தலைவர்களை வெளியேற்றியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீன் அமைப்பிற்கும்
ஜோர்டானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதி ஆப்கானிஸ்தானில்உருவாக்கப்பட்டுள்ளது.இப் புனித அல்குர்ஆன் பிரதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு செவ்வாய்கிழமையன்று ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நடைபெற்றது. கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதியானது, ஆப்கானிஸ்தானின் உயர்நிலை அரச அதிகாரிகள்,இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.இதன் போது ஹாகீம் நாஸிர் குஸ்ரேவ் கலாச்சார நிலையம் மற்றும் குராஸான் நகரின் வரலாற்றைக் கூறும் ஓவியக்கண்காட்சியை திறக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆனை உருவாக்குவதற்கான நிதி மற்றும் அனுசரனை ஆப்கானிஸ்தானின் கொடைவள்ளல் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.இப்புனித அல்குர்ஆனின் சித்திர மற்றும் வர்ண வேலைப்பாடுகள் செய்துமுடிக்கஏறத்தாள 5வருடங்கள் சென்றன.இப்புனித நூலின் வர்ணவேலைப்பாடுகள் பிரசித்தபெற்ற ஓவியர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய அல்குர்ஆனை உருவாக்கும் வேலைதிட்டம்2004செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு 2009செப்டம்பர் மாதம் நிறைவுபெற்றது.அட்டைகள் உருவாக்கல் மற்றும் காப்பகம் செய்தல் என்பவற்றுக்கு குறைந்தது இரு வருடங்கள் சென்றுள்ளன. இப்புனித அல்குர்ஆனானது 218 பக்கங்களைக்கொண்டுள்ளது. இப்புனித நூலானானது 228சென்றிமீற்றர் நீளத்தையும்,155சென்றிமீற்றர்
அகலத்தையும் கொண்டது.மேலும் இப்புனித அல்குர்ஆன் பிரதியின் 30 ஜூஸ்களும்30வெவ்வேறு வடிமைப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
முகப்பு செய்திகள்அறிவியல்சிறப்பு கட்டுரைகள்இஸ்லாமியப்பாடல்கள்இஸ்லாமிய அறிஞர்கள் கலாசாரம் உலக கட்டிடங்கள் விருதில் மக்காவின் கடிகாரக் கோபுரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
புனித மக்கா நகரில் அமைந்துள்ள கடிகாரக் கோபுரத்துடன் கூடிய விடுதியானது உலகின் முன்னனி தனித்துவமான விடுதி என்ற பெருமதிப்புள்ள உலக விருதைப்பெற்றுள்ளது.மத்திய கிழக்கின் மிகச்சிறந்த கட்டிடம் என்ற சிறப்பு விருதைப் பெற்று சில மாதங்களிலே மக்காவின் கடிகாரக் கோபுரத்துக்கு உலக விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இது உலகில் மிகஉயரமான வேறு கட்டிடங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது.மக்காவின் கடிகாரக் கோபுரத்தில் காணப்படும் கடிகாரமானது 40மீற்றர் (130அடி) நீள,அகலத்தை கொண்டுள்ளதுடன், இதனை 17கிலோமீற்றர் (10மைல்) தூரத்தில் இருந்து அவதானிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் ஐந்து நேரத் தொழுகைக்கான அதானை இக்கடிகாரம் முஸ்லிம் உலகத்துக்கு அறிவிக்கின்றது.
உலக வர்த்தகச் சொத்துக்கள் பிரதிநிதிகள் விழா கட்டாரின் கத்தாரா கலாச்சார நகரில் நடைபெற்றது.இதில் உலகின் 160 நாடுகளின் 213,000க்கும் அதிகமானவெளிநாட்டு முகவர் நியைங்கள்,சுற்றுலா நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் போது நடைபெற்ற வாக்கெடுப்பில் மக்காவின் கடிகாரக் கோபுரம் உலகின் முன்னனி கட்டிட விருதின் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
முகப்பு செய்திகள்அறிவியல்சிறப்பு கட்டுரைகள்இஸ்லாமியப்பாடல்கள்இஸ்லாமிய அறிஞர்கள் கலாசாரம் நெதர்லாந்து அரசு புர்கா தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரனையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது.
நெதர்லாந்தில் புர்கா தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையைஅந்நாட்டு அரசு பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. எனினும் சிறந்தவொரு தேர்தல் வைத்து,மக்கள் ஆதரவுடனே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என டச்சுஅரசு தெரிவித்துள்ளது.டச்சு அரசு புர்கா மற்றும் ஏனைய முகமூடி ஆடைகளை அணிவதற்கு தடைசெய்யும் திட்டத்துக்கு உடன்பட்டுள்ளதுடன், பொருத்தமற்ற இடங்களில் பலக்லவாஸ் மற்றும் மோட்டார்சைக்கிள் ஹேல்மட் அணிவதலுக்கும் இச்சட்டமானது பொருந்தும் என நெதர்லாந்தின் பிரதிப்பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் மதஉடையமைப்புக்கு எதிர்ப்பான சட்டம் என்பதை பிரதிப்பிரதமர் நிராகரித்துள்ளார்.டச்சுப் பாரளுமன்றத்தின் இரு சபைகளது அங்கீகாரமும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைக்கவேண்டியுள்ளதுடன், இதற்கு ஒரு மாதகாலம் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவாலாயங்கள் ஆகிய வழிபாட்டுத்தளங்கள், விமானப் பயணத்தின்போது,டச்சு விமானநிலையங்கள் போன்ற இடங்களில் இச்சட்டம் செல்லுபடியாகாது என நெதர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.புதிய சட்டமானது அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன்,இதனை மீறுபவர்கள் 390யூரோக்களை அபராதமாக செலுத்தவேண்டும் என நெதர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.ஒல்லாந்தில் நீண்டகாலமாக புர்கா மற்றும் ஏனைய இஸ்லாமிய செயற்பாடுகளை தடைசெய்யுமாறு அழைப்புவிடுத்துவந்த கடும்போக்கு இஸ்லாமிய எதிர்ப்பாளரான கீட் வில்டர்ஸ் இச்சட்டத்தை வரவேற்றுள்ளதுடன், இதனை அற்புதமானசெய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் ஏறத்தாள 300பெண்கள் மாத்திரமே புர்கா அணிவதாக
நம்பப்படுவதுடன்,இவர்களை பொதுஇடங்களில் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது.துருக்கி மற்றும் மோரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் நெதர்லாந்தில் அதிகமாக வாழ்கின்றனர்.நெதர்லாந்தின் மொத்த சனத்தொகை 16.7மில்லியானாக இருப்பதுடன்,இதில் ஒரு மில்லியன்மக்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றனர்.பாரிய முஸ்லிம் சனத்தெகையைக்கொண்ட பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பொதுஇடங்களில் புர்கா அணிவதற்கு ஏற்கனவே
தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமானில் விஞ்ஞான நகரம் அமைக்கப்படவுள்ளது.
ஓமானில் வெகுவிரைவில் விஞ்ஞான நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அறிவியல் சமுதாயத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே விஞ்ஞான நகரம் உருவாக்கப்படவுள்ளதாக ஓமானின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கவுன்ஸிலின் பேச்சாளர்ஒருவர் தெரிவித்துள்ளார்.ஓமனில் அமைக்கபடவுள்ள விஞ்ஞான நகரத்தில் முக்கியமாகஅறிவியல் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விஞ்ஞான நகரின் மூலம் தொழில் சந்தைக்குத் தேவையான தகுதிவாயந்த தொழிலாளர் படையை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஓமானின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கவுன்ஸிலின் பொருளாதார கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்விஞ்ஞான நகரானது மாணவர்களுக்கு மற்றும் ஆராயச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதுடன், மேலும் இது பயிற்சிநெறிகள், மாநாடுகள் மற்றும் கல்விமன்றங்கள் ஊடாக சிறந்த கல்விச்சூழலை பெற்றுக்கொடுக்கவுமுள்ளது.
முகப்பு செய்திகள்அறிவியல்சிறப்பு கட்டுரைகள்இஸ்லாமியப்பாடல்கள்இஸ்லாமிய அறிஞர்கள் கலாசாரம் அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடு எகிப்தில் நடைபெறவுள்ளது.
புனித அல்குர்ஆன் கற்பதில் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடொன்றை
எகிப்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எகிப்தின் சனத்தெகை மற்றும்உதவி ஆணைக்குழுவின் மேற்பார்வையில் உலக குர்ஆன் ஞாபக மன்றம் மற்றும்முஸ்லிம் இளைஞர் உலக மன்றம் என்பன இணைந்து இம்மாநாட்டை நடாத்தவுள்ளது. குர்ஆன் மனனமிட்டவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய மாநாடுநடைபெறவுள்ளது. எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தினதும் உலக குர்ஆன் ஞாபக மன்றத்தினதும் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்குக் கொண்டிருக்கும் 80நாடுகளைச் சோந்த மாணவர்கள்,இம்மாநாட்டில் அல்குர்ஆன் கல்விகற்பதில் ஏற்படும் தடைகளை கலந்துரையாடல்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்காக வழிமுறைகள் முன்மொழிவு பற்றிய அறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிக்கவுள்ளது.
கேடுகெட்ட சுகாதாரத்துறை! 100 குழந்தைகள் பலி!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 26 நாட்களுக்குள் நூறு குழந்தைகள் சாவுஎன்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரியே ஒத்துக்கொள்கிறார் என்றால் சாவின் எண்ணிக்கை எத்தனை மடங்காக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இப்படி கேடுகெட்ட ஒரு சுகாதாரத்துறை நமக்கு தேவையா? அடிப்படை சுகாதார, மருத்துவ வசதிகள் கூட இல்லாத ஒரு நாட்டில்தான் நாம் வசிக்கிறோம். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யாமல் அழிவு ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் ஆனந்தம் அடைவதேன்? ஆடம்பர விழாக்களை நடத்துவதேன்? ஒரு நாட்டின் வருங்கால சந்ததிகளை மழலைகளை காப்பாற்ற துப்பில்லாத நமக்கேன் இந்த வல்லரசு குடிபோதை.
இந்த போதையால் வாங்கி குவித்த ஆயுதங்களால் என்ன பயன். துருபிடித இந்த ஆயுதங்களை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில்தானே தூசு தட்டுகிறோம். அணுவுலைகள் இல்லாத ஒரு மாவட்டத்தில் வாழும் குழந்தைகளையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை. அணு உலைகள் இருக்கும் மாவட்டங்களின் நிலைமையை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளதே. அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவினால் ஏற்ப்படும் சுகாதார குறைவையும், நோய்களையும் நாம் எப்படி தீர்க்கப்போகிறோம்.
போபால் நமக்கு ஒரு முன்னுதாரணம், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இன்னும் நஷ்ட்ட ஈடுகள் கொடுக்க முடியவில்லை. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் பஞ்சம் மற்றும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது. சீன தனது நாட்டை பஞ்சத்தில், வரட்சியில் இருந்து பாதுகாக்க பிரமபுத்திரா நதியின் குறுக்கே ஒரு அணையை கட்டி இருக்கிறது. நாம் இருக்கிற நதிகளை பங்கிட தெரியாமல் தவிக்கிறோம்.மக்கள் விழிப்படைவார்களா?
கூடங்குளம் மக்களின் போராட்டம் நியாயமானதே என்பதை நிரூபிக்கும்
நிதர்சனமான ஒரு உதாரணம் இது. மொத்த தமிழகமும் சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன் !
நாதியாத்(குஜராத்):இறைவன் நாடினால் எதுவும் சாத்தியமே! ஒருவர் தனது நோக்கத்தை அடைய இடைவிடாது தொடர்ந்து உறுதியான மனதுடன் போராடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக 16 வயது மாணவன் ரமீஸ் வோரா திகழ்கிறார்.இவர் தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார். ஆச்சரியதக்க விஷயம் என்னவெனில், இவருக்கு பிறவியிலேயே கண் தெரியாது.குஜராத் மாநிலத்தில் கஞ்சாரி கிராமத்தில் வசிக்கும்
ஏழைக் குடும்பத்தில் ரமீஸ் 1996-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஃபாரூக் வீடு, வீடாகச் சென்று துணிகளை விற்று வாழ்க்கையை நடத்துகிறார். ரமேஷ் பிறந்தபொழுது அவருக்கு கண்பார்வை தெரியாது என தெரிந்தவுடன் ஃபாரூக் மனம் உடைந்து போனார். ஆனால், தனது தந்தையின் கவலையை போக்கி தனது 16-வது வயதில் அவரை உவகை கொள்ள வைத்துள்ளார் ரமீஸ்.ரமீஸ்,பிறவியிலேயே கண் பார்வை தெரியாவிட்டாலும் புத்திசாலியான மாணவன். அவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று கல்வி பயில்வதுடன், மதரசாவுக்கும் செல்கிறார். தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ய துவங்கினார். 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார்.
தனது அனுபவங்களை ரமீஸ் பகிர்ந்துகொள்கிறார்: “எனது நண்பர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்யும் வேளையில் நானும் அவர்களுடன் இருப்பது வழக்கம். ஆசிரியர் பாடத்தை கேட்பார். நானும் அவர்களுடன் இருந்து மனனம் செய்ய துவங்கினேன். எனது தவறுகளை ஆசிரியர் திருத்துவார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! நான் 3 ஆண்டுகளில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துவிட்டேன்”.
ரமீஸின் சாதனையை கண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கின்றனர். அவரது தாயார் ஸல்மா வோரா கூறுகையில், “ரமீஸை நினைத்து பெருமையாக இருக்கிறது. முஃப்தி அஹ்மத் காபூரி அவர்கள் ரமீஸை கெளரவித்தார்” என கூறுகிறார்.
ரமீஸ் கூறுகையில், ‘அடுத்த 9 ஆண்டுகளில் ஆலிம் மற்றும் முஃப்தி(உயர் படிப்பு) பட்டங்களை படித்து முடிப்பதே எனது குறிக்கோளாகும். எனது மூத்த சகோதரர் ஆலிம் பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.’ என தெரிவித்தார்.
ஹாஃபிஸ்(திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்)ரமீஸ் வரும் ஆண்டுகளில் முஃப்தி ரமீஸாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இலங்கையில் 3 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதி: ஈரான் நிதியுதவி !
மேற்கு நாடுகளுக்கு ஈரானின் அணுசக்தி ஆய்வில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.ஈரான் மீதான பொருளாதர தடை அதன் பொருளாதரத்தை முடக்கும்இராணுவ நோக்கம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதி அளிப்பதற்கான 1000 மின்சார திட்டங்களுக்கு ஈரான் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக ஈரான் மீதான சர்வதேச பொருளாதர தடைகள் மத்தியிலும் ஈரான் இலங்கைக்கு உதவுவது பெருமிதமானது என்றும் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார் .ஈரான் தூதுவர் எம். என். ஹசன் பூருக்கும் அமைச்சர் சம்பிக ரணவக்கவுக்கும் இடையில் நேற்று (27) மின்சக்தி எரிசக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அதன் போதே இதனை தெரிவித்துள்ளார்
திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன் !
நாதியாத்(குஜராத்):இறைவன் நாடினால் எதுவும் சாத்தியமே! ஒருவர் தனது நோக்கத்தை அடைய இடைவிடாது தொடர்ந்து உறுதியான மனதுடன் போராடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக 16 வயது மாணவன் ரமீஸ் வோரா திகழ்கிறார்.இவர் தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார். ஆச்சரியதக்க விஷயம் என்னவெனில், இவருக்கு பிறவியிலேயே கண் தெரியாது.குஜராத் மாநிலத்தில் கஞ்சாரி கிராமத்தில் வசிக்கும்
ஏழைக் குடும்பத்தில் ரமீஸ் 1996-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஃபாரூக் வீடு, வீடாகச் சென்று துணிகளை விற்று வாழ்க்கையை நடத்துகிறார். ரமேஷ் பிறந்தபொழுது அவருக்கு கண்பார்வை தெரியாது என தெரிந்தவுடன் ஃபாரூக் மனம் உடைந்து போனார். ஆனால், தனது தந்தையின் கவலையை போக்கி தனது 16-வது வயதில் அவரை உவகை கொள்ள வைத்துள்ளார் ரமீஸ்.ரமீஸ்,பிறவியிலேயே கண் பார்வை தெரியாவிட்டாலும் புத்திசாலியான மாணவன். அவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று கல்வி பயில்வதுடன், மதரசாவுக்கும் செல்கிறார். தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ய துவங்கினார். 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார்.
தனது அனுபவங்களை ரமீஸ் பகிர்ந்துகொள்கிறார்: “எனது நண்பர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்யும் வேளையில் நானும் அவர்களுடன் இருப்பது வழக்கம். ஆசிரியர் பாடத்தை கேட்பார். நானும் அவர்களுடன் இருந்து மனனம் செய்ய துவங்கினேன். எனது தவறுகளை ஆசிரியர் திருத்துவார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! நான் 3 ஆண்டுகளில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துவிட்டேன்”.
ரமீஸின் சாதனையை கண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கின்றனர். அவரது தாயார் ஸல்மா வோரா கூறுகையில், “ரமீஸை நினைத்து பெருமையாக இருக்கிறது. முஃப்தி அஹ்மத் காபூரி அவர்கள் ரமீஸை கெளரவித்தார்” என கூறுகிறார்.
ரமீஸ் கூறுகையில், ‘அடுத்த 9 ஆண்டுகளில் ஆலிம் மற்றும் முஃப்தி(உயர் படிப்பு) பட்டங்களை படித்து முடிப்பதே எனது குறிக்கோளாகும். எனது மூத்த சகோதரர் ஆலிம் பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.’ என தெரிவித்தார்.
ஹாஃபிஸ்(திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்)ரமீஸ் வரும் ஆண்டுகளில் முஃப்தி ரமீஸாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ஈராக்கில் 24 முஸ்லிம்களை படுகொலை செய்த அமெரிக்கனுக்கு 3 மாத சிறை ?
ஈராக் நகரமான ஹதீஸாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு 24 அப்பாவி மக்களை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரன் ப்ராங் உட்டரிக் குற்றவாளி என உறுதிச் செய்யப்பட்டது. நவம்பர் 19-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ யூனிட்டின் கமாண்டராக பணியாற்றியவர் உட்டரிக். இவ்வழக்கில் இவருடைய சக ராணுவ வீரர்களான ஏழுபேரை நீதிமன்றம் பல கட்டங்களில் விடுவித்தது. வேண்டுமென்ற செய்யாத படுகொலை, உணர்ச்சியைத் தூண்டும் தாக்குதல் ஆகிய வழக்குகளை சுமத்தமாட்டோம் என ராணுவ வழக்குரைஞர்கள் தயாரித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உட்டரிக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தண்டனை தீர்ப்பு குறித்த விசாரணை உடனடியாக துவங்கும் என விசாரணை நடைபெறும் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் கேம்ப் பெல்டன் செய்தித் தொடர்பாளர் ஜோ கோபல் தெரிவித்தார்.
மூன்று மாதம் சிறை, மூன்றுமாதம் சம்பளத்தின் இரண்டு பகுதி முடக்கிவைத்தல், தற்போதைய ராங்கை குறைத்தல் ஆகிய தண்டனைகள்தாம் உட்டரிக்கிற்கு கிடைக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள், பெண்கள் உள்பட 24 அப்பாவிகளை கொடூரமாக சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவத்தினருக்கு சர்வதேச சமூகத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசு நடத்தும் விசாரணை நாடகமும், தண்டனையும் எவ்வளவு கேலிக்கூத்தானது என்பது இச்சம்பவத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா !
பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்
பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது.இதையடுத்துத் தான், ஈரானின் மிக பாதுகாப்பான அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் வகையிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் கொண்டிருப்பதாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
மொத்தம் 20 அடி நீளம் கொண்ட இந்த "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டு, 5,300 பவுண்டு வெடிப்பொருட்களை தாங்கி செல்லும் சக்தியும், பூமியில் 200 அடி ஆழத்திற்கு ஊடுருவும் திறனும் கொண்டது.போர்டோவில், ஈரான் நிறுவியுள்ள அணுசக்தி நிலையம், பூமிக்கடியில் 212 அடி ஆழத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:மொத்தம் 20 குண்டுகளைத் தயாரிக்க அமெரிக்கா, 330 மில்லியன் டாலர் செலவழித்துள்ளது. இந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது, ஈரானின் தற்போதைய பாதுகாப்பான அணுசக்தி நிலையங் களை தாக்கும் அளவிற்கு அவற்றின் திறன் இல்லை எனக் கண்டறியப் பட்டது.அதனால் அவற்றின் சக்தியை அதிகரித்து தயாரிப்பதற்காக, கூடுதலாக 82 மில்லியன் டாலர் நிதியை அரசிடம் கோரியுள்ளது பென்டகன். 2009ல், அமெரிக்க விமானப் படையின், பி -2 உளவு விமானத்தில் இந்த ரக குண்டுகளைப் பொருத்தும் ஒப்பந்தத்தை, போயிங் விமான நிறுவனம் வாங்கியிருந்தது.இவ்வாறு அந்த பத்திரிகை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 24, 2012
ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்தது ?
ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்தது. இதனால், அமெரிக்கா உட்படஉலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், சமீப காலமாக அண்டை நாடுகளான இஸ்ரேல் & ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது.
அணு உற்பத்தியை உடனடியாக நிறுத்த தவறினால் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை இஸ்ரேல் வலியுறுத்தியது. இந்த ஆண்டுஇறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் மீண்டும் வெற்றி பெற அமெரிக்க வாழ் இஸ்ரேலியர் களின் ஆதரவு தேவைப் படும் நிலையில், அதிபர் ஒபாமாவுக்குநெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே, ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் நேற்று விடுத்தது. அது தவறும் பட்சத்தில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது. அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் ராணுவ அமைச் சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டு கால நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், தன்னிச்சையாக ஈரான் மீது தாக்குதல் நடத்த எச்சரிக்கை விடுத்துள்ளதால் அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!
JAN 20: தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.
கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.
நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.
அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.
சரி இதற்க்கு முன்னாள் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பிரோஜனம் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.
இதனால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் என்றவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில் கசிவுகள் எதுவும் ஏற்ப்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதை பார்க்க முடிகிறது.
இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்ப்பட்டதன் விளைவாள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.
விஞ்சான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சி கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இது அத்தியாவாசியமான மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை. மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவு செய்யமுடியாத இந்தியா போன்ற நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை. மேலும் இது போன்ற அழிவுத்திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நேக்கி நகர்த்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!
JAN 24: கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே.
கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.
இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.
ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால் அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு உருவாக்கினால் அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.
விநாயகர் ஊர்வலங்களிளின் போது விநாயகரை கடலில் கரைக்க பலவழிகள் இருந்தாலும் வேண்டும் என்றே சிறுபான்மையினரின் வணக்க தளங்கள் வழியாக ஊர்வலங்களை கொண்டு சொல்வோம் என்று அடம் பிடிப்பது. அப்படியே இவர்கள் போக அனுமதிக்கப்படும் போது வேண்டுமென்றே தொழுகை நேரம் வரும்வரை ஊர்வலத்தை தாமதப்படுத்துவது. பின்னர் ஊர்வலத்தில் "பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற பல கீழ்த்தரமான வார்த்தை பிரோயோகங்களை செய்வது.
இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு வெடிவெடித்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது. ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம் நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.
முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை எடுத்து கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.
மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே. இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி வருகின்றனர். குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.
இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.
ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால் அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு உருவாக்கினால் அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.
இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு வெடிவெடித்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது. ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம் நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.
முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை எடுத்து கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.
மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே. இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி வருகின்றனர். குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
*மலர்விழி*
Subscribe to:
Posts (Atom)