Facebook Twitter RSS

Tuesday, January 24, 2012

Widgets

சிறுவன் ‘ஷூ லேஸ்’ கட்டிய சம்பவம் மன்னிப்பு கேட்டார் மத்திய பிரதேச அமைச்சர் !



சிறுவனை ஷூ லேஸ் கட்ட வைத்ததற்காக மத்தியப் பிரதேச அமைச்சர் கவுரி சங்கர் பைசன் நேற்று மன்னிப்பு கேட்டார்.  மத்தியப் பிரதேசத்தின் கப்ரா பகுதியில்  புதிய சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பா.ஜ. கட்சியை சேர்ந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கவுரி சங்கர் பைசன், மத்திய அமைச்சர் கமல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் பைசனின் ஷூ லேஸ் கழன்றதால், ஒரு சிறுவனை அழைத்து கட்டச் சொன்னார். 


இந்த காட்சி டி.வி.யில் ஒளிப்பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது வெட்கக்கேடான செயல்’ என மத்திய அமைச்சர் கமல்நாத் கூறினார்.

பைசனை அமைச்சரவையிலிருந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  
இந்நிலையில் போபாலில் நேற்று பேட்டியளித்த பைசன் கூறியதாவது:
அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், குனியக் கூடாது என டாக்டர் கூறியுள்ளார். எனது தனிப்பட்ட வேலைகளை செய்ய சிறுவனை வேலைக்கு வைத்திருந்தேன்.

அவன் எனது குடும்ப உறுப்பினர் மாதிரி. சிறுவனை  ஷூ லேஸ் கட்டச் சொன்னது தவறுதான். இதற்காக மன்னிப்பு கேட்`டுக் கொள்கிறேன்.
இச்சம்பவம் குறித்து கமல்நாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தது வருத்தம் அளிக்கிறது.  இனிமேல் லேஸ்சுடன் கூடிய ஷூவை அணிவிதில்லை என முடிவெடுத்து விட்டேன். இதற்காக 6 ஜோடி, லேஸ் Anஇல்லாத ஷூ வாங்கியுள்ளேன். இவ்வாறு அமைச்சர் பைசன் கூறினார்.


No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets