Facebook Twitter RSS

Monday, January 09, 2012

Widgets

7 பில்லியன் உம்மத்துக்கு 7பில்லியன் ஸலவாத்துக்கள்.

2012ஆண்டின் நபி(ஸல்) அவர்கள் உலகில் வந்துதித்த தினமான பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி,அதாவது ஹிஜ்ரி 1433 ரபீயுல்அவ்வல் பிறை 12 ஆம் தினத்தை முன்னிட்டு துருக்கியின் நபி(ஸல்) அவர்களது மனிதன் மற்றும் சூழல் அமைப்பு எனும் சங்கம், The new Muslim-Fitr எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. The new Muslim-Fitr நிகழ்வானது, நபி(ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும் ஸலவாத்தைக் கேட்பதன் மூலம் உயர்ந்த ஆத்மீக சிந்தனைகளை மனிதர்களிடம் கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும்.இதன் அடிப்படையில் '7 பில்லியன் உம்மத்துக்கு 7பில்லியன் ஸலவாத்துக்கள்' எனும் நிகழ்ச்சியானது,நபி(ஸல்) அவர்களது மனிதன் மற்றும் சூழல் அமைப்பு எனும்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால்உலகுக்கு இறுதிநபியாக அனுப்பப்பட்டார்கள். உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட2பில்லியன் காணப்படும் முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்னும் 5பில்லியன் மக்கள் மக்களுக்கு இவ்அழைப்பு சென்றடையவேண்டியுள்ளது. இதனாலேயே இந்நிகழ்வு '7 பில்லியன் உம்மத்துக்கு 7பில்லியன் ஸலவாத்துக்கள்' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.எனவே உலகம்முழுதும் உள்ள முஸ்லிம்களைஇலக்காகக் கொண்டு ,7 பில்லியன் உம்மத்துக்கு 7பில்லியன் ஸலவாத்துக்கள் என்ற நிகழ்வை துருக்கியின் நபி(ஸல்) அவர்களது மனிதன் மற்றும் சூழல் அமைப்பு எனும் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் செய்கிறார்கள், ஆகவே விசுவாசிகளே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள். (சூரா அல்அஹ்ஜாப்:56) என்ற புனித அல்குர்ஆன் வசனத்தின் அடிப்படையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவ்அமைப்பு தெரிவித்துள்ளது.2012ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் 3ஆம் திகதி வரை, 7பில்லியன் உம்மத்துக்கு 7பில்லியன் ஸலவாத்துக்கள் என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நபி(ஸல்) அவர்களுக்காக 7பில்லியன் ஸலவாத்துக்களை உலகம்முழுதும் உள்ள முஸ்லிம்களிடம் இருந்து ஒன்றுதிரட்டும் நிகழ்வை துருக்கியின் www.kutludogum.tv எனும் சமூக இணையதளம் ஆரம்பித்துள்ளது. யாவருக்கும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டு, அவர்கள் சொல்லும் ஸலவாத்துக்களின் எண்ணிக்கையை பதிவு செய்யமுடியும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets