நாதியாத்(குஜராத்):இறைவன் நாடினால் எதுவும் சாத்தியமே! ஒருவர் தனது நோக்கத்தை அடைய இடைவிடாது தொடர்ந்து உறுதியான மனதுடன் போராடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக 16 வயது மாணவன் ரமீஸ் வோரா திகழ்கிறார்.இவர் தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார். ஆச்சரியதக்க விஷயம் என்னவெனில், இவருக்கு பிறவியிலேயே கண் தெரியாது.குஜராத் மாநிலத்தில் கஞ்சாரி கிராமத்தில் வசிக்கும்
தனது அனுபவங்களை ரமீஸ் பகிர்ந்துகொள்கிறார்: “எனது நண்பர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்யும் வேளையில் நானும் அவர்களுடன் இருப்பது வழக்கம். ஆசிரியர் பாடத்தை கேட்பார். நானும் அவர்களுடன் இருந்து மனனம் செய்ய துவங்கினேன். எனது தவறுகளை ஆசிரியர் திருத்துவார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! நான் 3 ஆண்டுகளில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துவிட்டேன்”.
ரமீஸின் சாதனையை கண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கின்றனர். அவரது தாயார் ஸல்மா வோரா கூறுகையில், “ரமீஸை நினைத்து பெருமையாக இருக்கிறது. முஃப்தி அஹ்மத் காபூரி அவர்கள் ரமீஸை கெளரவித்தார்” என கூறுகிறார்.
ரமீஸ் கூறுகையில், ‘அடுத்த 9 ஆண்டுகளில் ஆலிம் மற்றும் முஃப்தி(உயர் படிப்பு) பட்டங்களை படித்து முடிப்பதே எனது குறிக்கோளாகும். எனது மூத்த சகோதரர் ஆலிம் பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.’ என தெரிவித்தார்.
ஹாஃபிஸ்(திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்)ரமீஸ் வரும் ஆண்டுகளில் முஃப்தி ரமீஸாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.






No comments:
Post a Comment