2012 புதிய ஆண்டில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில்
மட்டும் ரூ.142 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகின. கடந்த ஆண்டுடன்
ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.37 கோடி அதிக விற்பனை நடந்து சாதனை(!)
படைத்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 696 டாஸ்மாக்(அரசு மதுபான)
கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 441 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
புத்தாண்டு தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மிக நீண்ட வரிசை காணப்பட்டது. சாதாரணமாக, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். ஆனால், புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் ரூ.70 கோடிக்கும், புத்தாண்டு அன்று ரூ.72 கோடிக்கும் என இந்த ஆண்டு மொத்தம் ரூ.142 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.
அதேசமயம் கடந்த ஆண்டு இந்த இரு தினங்களில் மொத்தம் ரூ.107 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதைவிட ரூ.37 கோடிக்குக் கூடுதல் மதுபானங்கள் விற்பனை ஆகி சாதனை(!) படைத்துள்ளது.
இத்தனைக்கும் தானே புயலால் சென்னை உட்பட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment