Facebook Twitter RSS

Sunday, January 29, 2012

Widgets

ஈராக்கில் 24 முஸ்லிம்களை படுகொலை செய்த அமெரிக்கனுக்கு 3 மாத சிறை ?


ஈராக் நகரமான ஹதீஸாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு 24 அப்பாவி மக்களை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரன் ப்ராங் உட்டரிக் குற்றவாளி என உறுதிச் செய்யப்பட்டது. நவம்பர் 19-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ யூனிட்டின் கமாண்டராக பணியாற்றியவர் உட்டரிக். இவ்வழக்கில் இவருடைய சக ராணுவ வீரர்களான ஏழுபேரை நீதிமன்றம் பல கட்டங்களில் விடுவித்தது. வேண்டுமென்ற செய்யாத படுகொலை, உணர்ச்சியைத் தூண்டும் தாக்குதல் ஆகிய வழக்குகளை சுமத்தமாட்டோம் என ராணுவ வழக்குரைஞர்கள் தயாரித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உட்டரிக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தண்டனை தீர்ப்பு குறித்த விசாரணை உடனடியாக துவங்கும் என விசாரணை நடைபெறும் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் கேம்ப் பெல்டன் செய்தித் தொடர்பாளர் ஜோ கோபல் தெரிவித்தார்.

மூன்று மாதம் சிறை, மூன்றுமாதம் சம்பளத்தின் இரண்டு பகுதி முடக்கிவைத்தல், தற்போதைய ராங்கை குறைத்தல் ஆகிய தண்டனைகள்தாம் உட்டரிக்கிற்கு கிடைக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள், பெண்கள் உள்பட 24 அப்பாவிகளை கொடூரமாக சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவத்தினருக்கு சர்வதேச சமூகத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசு நடத்தும் விசாரணை நாடகமும், தண்டனையும் எவ்வளவு கேலிக்கூத்தானது என்பது இச்சம்பவத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets