நெதர்லாந்தில் புர்கா தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையைஅந்நாட்டு அரசு பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. எனினும் சிறந்தவொரு தேர்தல் வைத்து,மக்கள் ஆதரவுடனே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என டச்சுஅரசு தெரிவித்துள்ளது.டச்சு அரசு புர்கா மற்றும் ஏனைய முகமூடி ஆடைகளை அணிவதற்கு தடைசெய்யும் திட்டத்துக்கு உடன்பட்டுள்ளதுடன், பொருத்தமற்ற இடங்களில் பலக்லவாஸ் மற்றும் மோட்டார்சைக்கிள் ஹேல்மட் அணிவதலுக்கும் இச்சட்டமானது பொருந்தும் என நெதர்லாந்தின் பிரதிப்பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் மதஉடையமைப்புக்கு எதிர்ப்பான சட்டம் என்பதை பிரதிப்பிரதமர் நிராகரித்துள்ளார்.டச்சுப் பாரளுமன்றத்தின் இரு சபைகளது அங்கீகாரமும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைக்கவேண்டியுள்ளதுடன், இதற்கு ஒரு மாதகாலம் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவாலாயங்கள் ஆகிய வழிபாட்டுத்தளங்கள், விமானப் பயணத்தின்போது,டச்சு விமானநிலையங்கள் போன்ற இடங்களில் இச்சட்டம் செல்லுபடியாகாது என நெதர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.புதிய சட்டமானது அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன்,இதனை மீறுபவர்கள் 390யூரோக்களை அபராதமாக செலுத்தவேண்டும் என நெதர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.ஒல்லாந்தில் நீண்டகாலமாக புர்கா மற்றும் ஏனைய இஸ்லாமிய செயற்பாடுகளை தடைசெய்யுமாறு அழைப்புவிடுத்துவந்த கடும்போக்கு இஸ்லாமிய எதிர்ப்பாளரான கீட் வில்டர்ஸ் இச்சட்டத்தை வரவேற்றுள்ளதுடன், இதனை அற்புதமானசெய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் ஏறத்தாள 300பெண்கள் மாத்திரமே புர்கா அணிவதாக
நம்பப்படுவதுடன்,இவர்களை பொதுஇடங்களில் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது.துருக்கி மற்றும் மோரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் நெதர்லாந்தில் அதிகமாக வாழ்கின்றனர்.நெதர்லாந்தின் மொத்த சனத்தொகை 16.7மில்லியானாக இருப்பதுடன்,இதில் ஒரு மில்லியன்மக்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றனர்.பாரிய முஸ்லிம் சனத்தெகையைக்கொண்ட பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பொதுஇடங்களில் புர்கா அணிவதற்கு ஏற்கனவே
தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment