ஓமானில் வெகுவிரைவில் விஞ்ஞான நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அறிவியல் சமுதாயத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே விஞ்ஞான நகரம் உருவாக்கப்படவுள்ளதாக ஓமானின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கவுன்ஸிலின் பேச்சாளர்ஒருவர் தெரிவித்துள்ளார்.ஓமனில் அமைக்கபடவுள்ள விஞ்ஞான நகரத்தில் முக்கியமாகஅறிவியல் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விஞ்ஞான நகரின் மூலம் தொழில் சந்தைக்குத் தேவையான தகுதிவாயந்த தொழிலாளர் படையை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஓமானின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கவுன்ஸிலின் பொருளாதார கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்விஞ்ஞான நகரானது மாணவர்களுக்கு மற்றும் ஆராயச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதுடன், மேலும் இது பயிற்சிநெறிகள், மாநாடுகள் மற்றும் கல்விமன்றங்கள் ஊடாக சிறந்த கல்விச்சூழலை பெற்றுக்கொடுக்கவுமுள்ளது.
No comments:
Post a Comment