JAN 12: தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்தநிலையில் நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.
இப்படி பட்ட ஒரு அரசைத்தான் நாம் நடுவண் அரசு என்று சொல்கிறோம். இந்த அரசுக்கு நாமும் கட்டுப்பட்டு தேசியம் பேசி, நாம் இந்தியர்கள் என்று மார்தட்டி கொள்கிறோம். போலி தேசபக்தி முகமூடி அணிந்து, தமிழர் என்கிற அடையாளம் இழந்து இந்தியன் என்று மார்தட்டி கொண்டதன் விளைவை இப்போது அனுபவிக்கிறோம்.
மத்திய மனிதாபிமானம் இல்லாத அரசு உதவி செய்யும் என்று நம்பி ஏமாந்தது போதும். தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழர்கள் தயாராக வேண்டும். தமிழகத்தில் மீன்பிடி தொழிலை நம்பி பல லட்சம் மக்களும், படகுகளும் உள்ளன. இவர்கள் தங்களுக்கு என்று ஒரு பாதுகாப்பு படையை நிர்மாணிக்க வேண்டும். வெறி கொண்டு அலையும் சிங்கள கடல் படைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இதற்க்கு தமிழக அரசு முழு உதவியும், தற்காப்பு ஆயுத பயிற்ச்சியும் தமிழக மீனவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுவே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
ரௌத்திரம் பழகு
No comments:
Post a Comment