Wednesday, January 11, 2012
ஈரானின் புதிய யுரேனியச் செறிவூட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும். அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானின் புதிய யுரேனியச் செறிவூட்டும் பணியால் அந்நாடு மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஐ.நா.,வில் இதுகுறித்து பதிலளித்த ஈரான் தூதர்,"அந்நாடுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றன' எனக் குற்றம்சாட்டினார். ஈரானின் கோம் நகர் அருகில் உள்ள போர்டோ என்ற இடத்தில் பூமிக்கடியில், பலத்த பாதுகாப்புடன் யுரேனியம் செறிவூட்டும் பணியை அந்நாடு துவங்கியுள்ளது.
இது, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியதாவது: போர்டோவில் ஈரான் 20 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டத் துவங்கினால், இனி, எதிர்காலத்தில் அணுசக்தி தேவைகளை முன்னிறுத்தி அந்நாடு இப்போது செய்து வரும் வன்முறைகளுடன், மேலும் பல அத்துமீறல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. அதனால், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் உடனடியாக கைவிட வேண்டும். சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு நுலண்ட் தெரிவித்தார்.
வெனிசுலாவையும், ஈரானையும் ஆக்கிரமிப்பாளர்கள் என, அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. நாங்கள் எந்த நாட்டிலும் ஊடுருவவில்லை. அணு குண்டுகள் உட்பட ஆயிரமாயிரம் குண்டுகளைப் போட்டது யார்? ஹ்யூகோ சாவேஸ், வெனிசுலா அதிபர்
a
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment