Monday, January 09, 2012
உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது.
உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளதாக உலக கண்கானிப்பு தாபனத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தறிவற்றவர்களாவர்,இதனால் அவர்களுக்கு தங்களது வாழ்வை நடாத்துவதற்கு சம்பாதிக்க முடியாதுள்ளதுடன், வறுமையில்
இருந்து மீள முடியாதுமுள்ளதாக உலக கண்கானிப்புத்தாபனம் தெரிவித்துள்ளது. உலகம் பூராகவும் வாழும் மக்களில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களின் குழந்தைகள் போசாக்கின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெஷிங்டன் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் ஆய்வகமான உலக கண்கானிப்பு தாபனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 250மில்லியன் முதல் 500மில்லியன் சிறுவர்கள்
விட்டமின் A குறைபாட்டால் பாதிக்கப்படுவதுடன்,பிற்காலத்தில் அச்சிறுவர்கள் குருடர்களாக மாறுகின்றனர்.இவர்களில் அரைவாசிப் பேர் 12மாதங்களில் தமது பார்வைச்சக்தியை இழப்பதினால் இறக்கின்றனர் என அவ்வாய்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதுக்குக்குறைந்த 500 மில்லியன் சிறுவர்கள் போசாக்கின்மை குறைபாட்டினால் இறப்பெய்வதுடன், மேலும் ஆபரிக்கா கண்டத்தில் ஆறு செக்கன்களுக்கு ஒரு சிறுவர் என்ற வீதத்தில் பட்டினியால் சிறுவர்கள் இறக்கின்றனர். வழமையாக 1.3பில்லியன் தொன் உணவுப்பொருட்களில் ,இம்மொத்த தொகையின் மூன்றுபகுதி மனிதனுக்காக உற்பத்தி செய்யப்படுவதுடன் இவற்றின் நுகர்வின் போது பெரும்பகுதி வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஒவ்வொரு வருடமு ம் அமெரிக்காவில் மாத்திரம் உணவு விற்பனையின் போது,உணவுப் பாவனையின் போது,வீட்டுக் கழிவுகள் என 40மில்லியன் தொன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றது. அமெரிக்காவில் வீணாக்கப்படும் உணவுகள், உலகம் முழுதும் உணவின்றிவாடும் ஒரு பில்லியன் மக்களின் உணவுப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை 1990ஆம் ஆண்டு எழுத்தறிவற்று காணப்பட்ட ஒரு பில்லியன் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன்,இன்னும் 792 மில்லியன் மக்கள் கல்வியறிவற்றுக் காணப்படுகின்றனர்.இவர்களில் மில்லியன்
கணக்கானோர் வறுமையினாலேயே கல்வியைத் தொடரமுடியாது உள்ளதாக உலக கண்கானிப்பு தாபனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment