Facebook Twitter RSS

Monday, January 16, 2012

Widgets

மோதல்களை தடுத்து நிறுத்துங்கள்! SDPI

புதுடெல்லி DEC14:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் தமிழகத்தின் கவலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கேரள மக்களின் பீதியை அகற்ற வேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு உண்டான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.

முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும் இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
சிந்திக்கவும்: ஒற்றுமைக்கு முன்கை எடுத்துள்ள  SDPI  தலைமைக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் முல்லை பெரியார் விசயத்தினால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் சோர்வடைந்து விடாமல் பார்த்து  கொள்ளுமாறு தங்களது கட்சியினர்களுக்கு வலியிறுத்தி இருப்பது ஒரு சிறப்பான சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மாதிரி கூடன் குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மத்திய அரசை வேண்டாமல் அதை திறக்க கூடாது என்று வலிமையாக குரல் கொடுப்பதற்கு  நன்றி. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல். 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets