Facebook Twitter RSS

Tuesday, January 24, 2012

Widgets

இஸ்ரேல் ஈரானை தாக்கினால் பெரும் அழிவு நிச்சயம் : ரஷ்யாவை தொடர்ந்து பிரான்சும் எச்சரிக்கை மணி அடித்தது !


இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பமும் உலகம் முழுவதும் போரும் ஏற்படும்" என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நான்கு இராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி சர்கோசியை அந்நாட்டின் முக்கிய உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடையே
சர்கோசி பேசும் போது,
"ஆப்கானிஸ்தானில் எங்கள் வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும்.

மேலும், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் தயாராகி வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
thanks to asiananban.blogspot.com

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets