Facebook Twitter RSS

Sunday, January 08, 2012

Widgets

நதி நீர் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு







''முல்லைப்பெரியாறு,காவிரி நதி நீர்ப்பிரச்னைகள் பெரிதாகி நீண்டுகொண்டே போவதற்கு காரணம் மத்திய அரசின் பலவீனம்தான். 1956-ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நதி நீர்ப் பிரச்னைகள் தொடர்பாக இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தார்.
முதலாவ தாக, நதி நீர்த் தாவா சட்டம். இதன்படி நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மாநிலங் களுக்கு இடையே பிரச்னை எழுந்தால், நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏதாவது ஒரு மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்காகத்தான்... இரண்டா வது சட்டம். இந்தச் சட்டத்தின்படி நதி நீர் வாரியம் அமைக்கப்படும். 


உதாரணமாக, கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்காததால், நதி நீர் வாரியம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு வாய்க்கால்கள், அணைகள், மதகுகள் என்று எவற்றின் மீதும் தமிழக அரசுக்கோ, கர்நாடக அரசுக்கோ அதிகாரம் இருக்காது. இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவான நதி நீர் வாரியம்தான் நீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். 


ஆனால், நேருவுக்குப் பிறகு வந்த எந்த அரசுமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. தமிழகத்துக்கு மட்டும் தான் மற்ற மாநிலங்களோடு பிரச்னை இருக்கிறது என்று இல்லை. இந்தியா முழுக்கவே நதி நீர்ப் பிரச்னைகள் இருக் கின்றன. ஆனால், மத்தியில் அமையும் அரசு கூட்டணி அரசாகவும் பலவீனமான அரசாகவும் இருப்பதால் உறுதியானநிலைப் பாட்டை எடுப்பது இல்லை.



'காவிரி எங்கள் மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. எங்களுக்குப் போகத்தான் மிச்ச நீர்’ என்கிறது கர்நாடகா. இதே நியாயத்தை நாமும் பேசினால்? நெய்வேலி மின்சாரமும் எண்ணூர் அனல் மின்சார நிலைய மின் சாரமும் எங்கள் மாநிலத்தில் எங்கள் தொழிலாளர்களால் உற்பத்தி ஆகிற மின்சாரம். அதை கர்நாடகாவுக்குத் தர மாட்டோம் என்று சொன்னால், என்ன ஆகும்? அதே போல, தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நீர்தான் கேரளாவில் பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடி ஆறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது.


 இங்கே உற்பத்தியாகும் தண்ணீரை இங்கேயே அணை கட்டித் தடுத்தால் என்ன ஆகும்? தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் வசிக்கிறார்கள். நமக்குப் பெரியாறு அணை மூலம் கேரளா தரும் தண்ணீர் வெறும் 10 டி.எம்.சி-தான். அதாவது, 126 மில்லியன் கன மீட்டர். ஆனால், 30 லட்சம் மலையாளிகள் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தும் நீரோ 5,100 மில்லியன் கன மீட்டர் நீர்.எனவே, தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், 'தயவுசெய்து பொய்ப் பிரசாரத்தை நிறுத்துங்கள்’ என்று கேரள அரசியல்வாதிகளுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். இல்லை என்றால்,எதிர் காலத்தில் இதே மாதிரி அமைதியான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்க முடியாது.


மேலும், பெரியாறு அணைக்குச் செல்லும் நீரில், 5-ல் 1 பங்கு தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. அதாவது, 4867.9 மில்லியன் கன மீட்டர் நீர் இங்கிருந்து பெரியாறு அணைக்குச் செல்கிறது. ஆனால், நாம் கேட்பதோ வெறுமனே 126 மில்லியன் கன மீட்டர் நீர்தான். அதே போல்வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,313 மில்லியன் கன மீட்டர். இதில் 18 சதவிகித நீர்தான் நாம் கேட்கிறோம். 'கடலில் வீணாகக் கலந்தாலும் பரவாயில்லை, தமிழகத்துக்குத் தர மாட்டோம்’ என்று அடம்பிடிக்கிறது கேரளா. இதே நிலை தொடர்ந்தால்... தேசிய ஒருமைப்பாடு சுக்குநூறாகும்.''

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets