புனித மக்கா நகரில் அமைந்துள்ள கடிகாரக் கோபுரத்துடன் கூடிய விடுதியானது உலகின் முன்னனி தனித்துவமான விடுதி என்ற பெருமதிப்புள்ள உலக விருதைப்பெற்றுள்ளது.மத்திய கிழக்கின் மிகச்சிறந்த கட்டிடம் என்ற சிறப்பு விருதைப் பெற்று சில மாதங்களிலே மக்காவின் கடிகாரக் கோபுரத்துக்கு உலக விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இது உலகில் மிகஉயரமான வேறு கட்டிடங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது.மக்காவின் கடிகாரக் கோபுரத்தில் காணப்படும் கடிகாரமானது 40மீற்றர் (130அடி) நீள,அகலத்தை கொண்டுள்ளதுடன், இதனை 17கிலோமீற்றர் (10மைல்) தூரத்தில் இருந்து அவதானிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் ஐந்து நேரத் தொழுகைக்கான அதானை இக்கடிகாரம் முஸ்லிம் உலகத்துக்கு அறிவிக்கின்றது.
உலக வர்த்தகச் சொத்துக்கள் பிரதிநிதிகள் விழா கட்டாரின் கத்தாரா கலாச்சார நகரில் நடைபெற்றது.இதில் உலகின் 160 நாடுகளின் 213,000க்கும் அதிகமானவெளிநாட்டு முகவர் நியைங்கள்,சுற்றுலா நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் போது நடைபெற்ற வாக்கெடுப்பில் மக்காவின் கடிகாரக் கோபுரம் உலகின் முன்னனி கட்டிட விருதின் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
No comments:
Post a Comment