Facebook Twitter RSS

Wednesday, January 30, 2013

இஸ்லாம் ஒரு மதம் அல்ல மார்க்கம்


112:1(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

மற்ற சமயங்களைப் போல் மதங்களைப்போல் "இஸ்லாம்" ஒருசமய(மத)மாகவே மாற்றார்களால் கணிக்கப் பட்டுள்ளது. இது வி„யத்தில் அவர்களைக் குறைகூறி விமர்சிக்கும் இடம்பாடு மிகக்குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், இன்றைய முஸ்லிம்களின் புரோகித மோகம், உண்மை மார்க்கத்தை சமயமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது. 

மற்ற சமயங்களில் நியதியாக்கப்பட்டுள்ள மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் பெரும்பாலானவைகள் அப்படியே  அல்லது சிற்சில மாற்றங்களுடன் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையை அனுசரித்து நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்களின் அங்கீகாரத்துடன், இவைகள்அவர்களாலேயே நடத்தி வைக்கப்படுகின்றன. அதனால், இதுவும்  இஸ்லாத்திற் குட்பட்டதே என்பது இன்றைய முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

இஸ்லாத்திற்கு இன்றைய  முஸ்லிம்கள்  மாற்றாருடன்  போட்டிக் போட்டுக்கொண்டு  பாரம்பரிய  சொந்தம் கொண்டாடுவதால் மற்ற சமயத்தவர்கள் மூடச்சடங்கு சம்பிரதாயங்களை நியாப்படுத்த செய்யும் விதண்டா வாதங்களே இங்கும் நியாயங்களாகின்றன.

இந்நிலையில்,இன்றைய  முஸ்லிம்கள்  நன்றாகச் சிந்திப்போர் கூட இஸ்லாத்தைப் பாரம்பரிய அடிப்படியில் அணுகி, இஸ்லாமும், மற்றசமயங்களைப் போல் ஒருசமயம் என்ற மாயையில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் போன்றவர்கள் மூலம்தான் மாற்றார்கள் இஸ்லாத்தை அறியும் சூல்நிலை பரவலாகக் காணப்படுகின்றது.

ஏற்கனவே மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய முஸ்லிம்கள் (தவறான) நடை முறைகளைக் கண்டு இஸ்லாத்தை மாற்றார்கள் தவறாகக் கணித்து வைத்துள்ளனர். சில போற்றத்தக்க நடைமுறைகள் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டாலும், அவைகள் மாற்றார்களிடம் இஸ்லாத்தை நிƒத் தோற்றத்தில் அறிமுகப்படுத்த ஏற்றதாய் இல்லை.அதனால் மற்ற சமயத்தவர்கள் போல் இன்றைய முஸ்லிம்களும்  ஒரு சமயத்தவர்களே!

சடங்கு சம்பிரதாயங்களைத் தோற்றுவித்தவர்கள் புரோகிதர்கள். இறைவன் கூறுகிறான்:
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்; அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி,  அல்லா‹வுடைய வழியிலிருந்து, அறிவின்றி (ƒனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.(அல்குர்ஆன் 31:6)

மற்ற சமயங்களைப் போல் இஸ்லாமும் ஒரு சமயமே மதமே என்ற (தவறான) தோற்றம் எப்படியோ ஏற்ப்பட்டுவிட்டது. இது போலித் தோற்றம், உண்மையல்ல. இதற்கு இன்றைய முஸ்லிம்களும், அவர்களின்  முன்னோர்களும், மார்க்கத்தைப் புரோகிதமாக்கிய முல்லா வர்க்கமும் முழுப் பொறுப்பாளர்களாகிறார்கள்.


இஸ்லாம் பொறுப்பு அல்ல!
இஸ்லாம் ஒரு மதமல்ல!
இஸ்லாம் ஒரு சமயம் அல்ல!
இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல!
இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம்.
அல்லா‹ முஸ்லிம்கள் அனைவரையும் உண்மையான மார்க்கத்தை  விளங்க வைப்பானாக.


ஹிஜ்ரி 1342, ரஜப் 28ல் என்ன நடந்தது-?



முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) -ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்கவேண்டும் என்ற இழிநிலை உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாசானில் நடைபெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.



 "முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும்.கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம்" 



கிலாஃபத்தை முழுமையாக அழிப்பதற்கு பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்று உலகமே அறிந்திருந்தது.கிலாபஃத்தை அழித்ததோடு மேற்குலக ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர். ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள். முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும், சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.




 நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறுவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. உண்மையில் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாத்தின் எதிரிகளும் தோன்றிவிட்டார்கள். முஸ்லிம்களுடன் நீண்ட காலம் போராடி தோல்வி கண்ட காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே அவர்கள் சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்களை வீழ்த்த முடியும் என்பதாக உணர்ந்தார்கள்.



முஸ்லிம்களின் சிந்தனையை பலவீனப்படுத்த,கிலாஃபத்தின் இறுதி காலகட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தை தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.இதனை அடைவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளை கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றி பெறமுடியும் என்பதால் , குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும் ,துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.



இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் அழிவும் நடந்தேறியது. முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற இங்கிலாந்தின் அடிவருடி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட உடனேயே முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாத்தின் பூமி பல தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர்.மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர் . அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கினர். 



மேற்குலகின் ஏஜண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் பங்கம் ஏற்ப்பட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , பலஸ்தீன், காஷ்மீர் ,செச்சன்யா,கிழக்கு துர்கிஸ்தான் என்று உல்கின் பலபாகங்களிலும் உள்ள முஸ்லீம்கள் வேட்டையாடப்படுகிண்றனர் . முஸ்லிம் உலகு எல்லா நிலைகளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது.முஸ்லிம் உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.முஸ்லிம் நாடுகளில் இன்று நடைபெற்று வரும் எழிச்சிமிகு போராட்டங்கள் கிலாஃபத்திற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது. 



முஸ்லிம்களே! 

உலக அரங்கில்ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்கவேண்டாமா? இந்த ஆட்சி முறைக்கு கீழ் தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சி முறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமுல்படுத்தப்படுவதன் மூலமாகவே , முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும். முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:



"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141) 


"விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்." (ஆல இம்ரான் :28) 



முஸ்லிம்களே! 


இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது. கிலாஃபத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும்.கிலாஃபத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சனையாக இருப்பதோடு கட்டாயக்கடமையாகவும் இருக்கின்றது. 



 “நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), இப்னு மாஜா) 



முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில், சர்வசாதாரணமாக இன்று முஸ்லிம்களின் கண்ணியமும் பாழ்படுத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். குர்ஆனை எரிக்கும் போராட்டத்தை அமெரிக்காவில் கயவன் ஒருவன் நடத்தியிருக்கிறான். முஸ்லிம் உம்மத்தை கேடயமாக நின்று பாதுகாக்ககூடிய பொறுப்பு மிக்க இமாம்(கலீஃபா) இல்லாததே முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும். நபி(ஸல்) கூறினார்கள்


 "இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள்". (அபூஹ§ரைரா (ரலி), முஸ்லிம்) 


 நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின்னர் இந்த உம்மத்தை யார் வழி நடத்தவேண்டும் என்பதை தெளிவாகவே அறிவித்து சென்றுள்ளார்கள். 


“நான் அபூ ஹ§ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய நபி (ஸல்) அவர்களின் கூற்று: பனிஇஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். அதிக எண்ணிக்கையில் கலீஃபாக்கள் தோன்றுவார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என வினவினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: முதலாமவருக்கு பைஆ செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பைஆ செய்யுங்கள். அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து விசாரணை செய்வான்” என்றார்கள். (அபுஹாசிம் (ரலி), முஸ்லிம்) 



முஸ்லிம்களே! 


நம் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் பொறுப்பை நிறைவேற்ற வீறு கொண்டு எழ வேண்டாமா? நாம் உறுதிப்பிரமாணம் கொண்டு ஏற்று வாங்கிய மாபெரும் அமானிதத்தை நாம் மட்டும் சுமந்து கொண்டிருந்தால் போதுமா? அதன் பிரகாசத்தை அழைப்புப்பணி மூலம் உலகம் முழுதுவதும் பரப்ப இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபா அவசியமல்லவா?முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரங்களிருந்து பிரிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டாமா? முஸ்லிம்கள் மாத்திரமன்றி முழு மனித சமுதாயமும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நிம்மதியாக வாழ நாம் வழி ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டாமா? கடந்த நூற்றாண்டிலும் தற்போதும் மனித சமுதாயம் சந்தித்துள்ள மாபெரும் அழிவுகளுக்கு காரணமான மனித அறிவிலிருந்து தோன்றிய முதலாளித்துவம் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை அடியோடு அகற்றி மீண்டும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டாமா? 



முஸ்லிம்களே! 


நம் பாதை சுவனத்தின் பாதையாகும்.அதன் பாதை இன்னைல்கள் நிறைந்தது. அதை அடைந்து கொள்வதற்கு மாபெரும் தியாகங்கள் செய்வது அவசியமாகும். சஹாபாக்கள் மற்றும் நம் முன்னோர்களின் தியாக உணர்வு நமக்கும் வர வேண்டாமா?அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய சட்டங்கள் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்பட, இந்த அழைப்பு பணியில் ஈடுபடுவோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வோமா?


 "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்." (அல் அன்ஃபால்: 24) 

Tuesday, January 29, 2013

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி



      "தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி       
  தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது   
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன்அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.
தாலிபான் யுவான் ரிட்லியை கொலை செய்துவிடுவார்கள் என்றே முழு உலகமும் எதிர்பார்த்தது. அவர் கொலை செய்யப்பட வேண்டும், அதன் மூலம் தாலிபான்களை காட்டுமிராண்டிகளாகக் காட்ட வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம். ஆனால் யுவான் ரிட்லி தாலிபான் பிடியில் இருந்து வெளியேறி மேற்கத்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தனது அந்த மகத்தான சாதனையை நூலாகவும் வெளியிட்டார். நாடறிந்த எழுத்தாளர் சகோதரர் மு.குலாம் முஹம்மது அவர்கள்"தாலிபான் பிடியில்" எனும் பெயரில் அதனை தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
நீங்கள் இங்கு காண்பது அதிலிருந்து சில பகுதிகளே ஆகும். இந்நூலைப்பற்றிய விபரங்கள் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நூலை ''விஸ்வரூபம்'' எனும் பெயரில் ஆஃப்கானிஸ்தானைப்பற்றி தப்பும் தவறுமாக படமெடுத்திருக்கும் கமலஹாஸனுக்கும் அவரது சகாக்களுக்கும் எவரேனும் அனுப்பி வைத்து அவர்களுக்கு உண்மை எது பொய் எது என்பதை அறிவுறுத்தினால் நல்லது. -adm. nidur.info ]
  தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி  
  தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது   
ஆஃகானிஸ்தானியப் பெண்கள் புர்கா அணிந்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் வீரத்தை வெளிக்காட்டிட வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக அதனை நழுவ விடமாட்டார்கள். அவர்களின் உறுதி, மனத்திடம் இவை என்னை வெகுவாகக் கவர்ந்தன.
குழி விழுந்த விழிகளைப் பெற்ற பெண்ணொருத்தி என்னிடம், ஒரு கேள்வியைக் கேட்டாள். அது மிகவும் நெருடலாக இருந்தது. அந்தக் கேள்வி, "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்பதே!
நான் எனக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்றேன். சிரித்தாள் அவள். "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?" என ஓர் எதிர் வினாவை வீசினேன். இதற்கு அந்தப்பெண்மணி பொட்டில் அறைந்தாற்போல் பதில் சொன்னாள்.
"அமெரிக்கர்களும், பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர்களும் ஒரு குழந்தையைப் பெறும் அளவிற்கே பலமுடையவர்கள் ஆனால் எங்களால் 15 குழந்தைகள் வரை பெற்றிட முடியும். உங்களால் மிகக் குறைந்த அளவு ஆண்களையே இராணுவத்திற்கு அனுப்பிட இயலும். எங்களால் பல ஆண்களை போர்வீரர்களாகத் தந்திட இயலும். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக ஒரு பெரும் படையையே எங்களால் அனுப்பிட இயலும்."
"எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளோடு தான் பிறக்கின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் வளருகின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் விளையாடுகிறார்கள். அவர்கள் வீர விளையாட்டுகளைப் போர்க்களங்களிலே காட்டுபவர்கள். அங்கேதான் அவர்கள் தங்கள் மரணத்தையும் சந்திக்கின்றார்கள். போரும், பட்டினியும், போராட்டங்களும் எங்கள் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதிகள். இப்படி என் பிள்ளைகளை அநியாயத்திற்கெதிரான போரிலே தந்துவிட்டு, தேவையானால் நானும் சென்று போராடுவேன்."
இப்படி அந்தப் பெண் பேசி முடித்ததும், அந்தப் பேச்சை ஆமோதிப்பது போல் சிரித்தாள், கிழவி ஒருத்தி தன் பொக்கை வாய் திறந்து. இந்த பொக்கைவாய் சீமாட்டி நூறு வயது நிரம்பியவள். அவள் பல போர்களைச் அச்ந்தித்து இருக்கிறாளாம். இந்தப் பெண்மணி என்னைப்பார்த்து ஏதோ உரக்கச்சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.
அவள் என்ன சொன்னாள் என எனது 25 வயது தோழியிடம் கேட்டேன். அவள் அதனை மொழிபெயர்த்துச் சொன்னாள்...
அவள் ஆஃப்கானிஸ்தான் பெண்ணாம். அமெரிக்கர்களை எதிர்த்து போராடுவாளாம். ஆஃப்கானிஸ்தான் மக்களை அதுவும் குறிப்பாக பெண்களை யாரும் அடிமைப் படுத்திட இயலாதாம். இந்த மொழிபெயர்ப்பைக் கேட்டவுடன் நான் அந்தப் பெண்ணைப்பார்த்து பொறாமைப்பட்டேன்.
உண்மையில் அவர்களின் எண்ணங்கள் ஏற்றம் மிக்கவை. அவர்கள் காட்டும் வீரம் வைரம் பாய்ந்தது. விவேகம் நிறைந்தது.
இன்றுவரை ஆஃப்கானிஸ்தானிய பெண்களையோ அவர்களின் உணர்வுகளையோ நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.
அதுபோல் புர்காவை வெறுக்கக் கற்றுக்கொண்டுள்ளோம் அல்லாமல் புர்காவினுள்ளிருக்கும் பெண்மையையும் அதன் பொன்னறிய பண்புகளையும் நாம் புரிந்து கொள்ளவில்லை, என்பதையும் உணர்ந்தேன்.
நான் ஆஃப்காணிஸ்தானுக்குள் வருவதற்கு முன் தாலிபான்களைப் பற்றிப் படித்த நூல்கள் என் நினைவுக்கு வந்தன. "புர்காவிற்குள்" என்ற ஆவணப்படதைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், தாலிபான்களைப்பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், தாலிபான்கள் கொடூரமானவர்கள் அவர்களை உடனேயே அழித்தாக வேண்டும் என்ற முடிவுக்கே வருவார்கள். ஷெய்ரா ஷா என்ற பெண்மணிதான் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.
"புர்காவுக்குள்" என்பது ஓர் ஆவணப்படம் என்றே உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் அது உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படமல்ல, மாறாக கற்பனைக்கதை.
ஆனால் அதனைத்தயாரித்தவர் அதை ஓர் ஆவணப்படம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் பார்ப்பவர்கள் அத்தனையும் உண்மை என நம்பினார்கள். அதனால் தாலிபான்களை வெறுத்தார்கள்.
ஆனால் என் கண் முன்னால் நான் பார்க்கும் தாலிபான்கள் முற்றிலும் மாறுபட்டவ்ர்களாக இருந்தார்கள். என்னுள் ஓர் தணியாத ஆசை, இல்லை வேட்கை தலைதூக்கியது. அது தாலிபான்களைப்பறிய உண்மைகளை உலகுக்குச் சொல்லியாக வேண்டும் என்பதே.
அவர்கள் பண்பாளர்கள். அவர்களின் புத்திசாலித்தனம், பெருந்தன்மை இவற்றிற்கு முன் முட்டாளாக சிறுமைப்பட்டு நின்றேன், நான்.
....எத்துனை கள்ளங்கபடமற்ற உள்ளம் தாலிபான்களுக்கு. இந்த தாலிபான்களையா இதயம் இல்லாதவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், உலக ஊடகங்களில், நொந்து போனேன்.
ஜெலாலாபாத் முதல் காபூல் வரை உள்ள வனப்பகுதி, வனப்பும், செழிப்பும் நிறைந்து கோலாகலமாக என்னை மகிழ்வித்தன. தாலிபான்களின் பூமிதான் எத்தனை ரம்மியமானது. இயற்கையின் எடுப்பும், எழிலும் அங்கே பள்ளிக் கொண்டிருந்தன. இயற்கை தன்னை அலங்கரித்துக் கொண்டு, காண்பவர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. மலையும், மடுவுமாக எங்கணும் இயற்கையின் கோலங்கள்.
குண்டு போட்டு புகை மண்டலத்தைக் கிளப்பி, நான் பின்லேடனை பிடித்து விடுவேன் என்ற புஷ்ஷின் பம்மாத்து இங்கே பலிக்காது என்பதை அந்த மலைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் உணர்ந்தேன்.
.... நான் கொலை செய்யப்படவெண்டும் என சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவுத்துறை விரும்பியது.தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என உலகிலுள்ள எல்லாப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம்பிட வேண்டும். அதற்காக பத்திரிகை துறையில் கொடிகட்டிப்பறந்த நான் கொலை செய்யப்பட வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை விரும்பியது. விரும்பியதோடு நின்றுவிடவில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது.
...ஆனால் தாலிபான்கள் தங்களது சீரிய முயற்சியால் உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் என்னைப் பற்றிய உண்மையான தகவல்களைத் திரட்டியதோடு மட்டுமல்ல, அமெரிக்க உளவுத்துறையின் தகிடுதத்தங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்.
சவால்களும், சோதனைகளும் நிறைந்த அவரது ஆஃப்காணிஸ்தான் பயணத்தைப் பற்றி மேலும்தெரிந்துகொள்ள இந்நூலை வாங்கிப்படியுங்கள். அமெரிக்க கைக்கூலிகளின் பொய்களுக்கு பதிலளியுங்கள்.
  நூலைப்பற்றிய விபரங்கள் :   
"தாலிபான் பிடியில்"
தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது M.Com., M.A.,JMC.
VERGAL PUBLICATIONS
52/1, Mannady Street,
Konica Color Lab Building,
4th Floor, Room: 7
Mannady, Chennai - 600 001.
Website: www.darultrust.in
Phone:  +91 44 455 66 909
Cell:  91 94442 39594
பக்கங்கள் 201
விலை ரூபாய் 80.00

தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆங்கிலேய பெண் பத்திரிகையளர்


இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ]
[ தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்... ]
"நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு 'கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை - நானா? அல்லது அவர்களா?).
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.
இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.
புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. 'வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்...National Domestic Violence Surveyநடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: "பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''
(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story'என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரைhermosh at aol dot comஎன்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)
''Jazaaklallaahu khairan'' M.Abdul Rahman

Monday, January 28, 2013

முஸ்லிம் சமூகப் பிளவும், இஸ்லாம் சொல்லும் தீர்வும்




எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்


இன்று முஸ்லீம்கள் தாங்கள் அறிவு தரவேறுபாட்டால் இஸ்லாத்திற்க்கு பல்வேறு வகையான விளக்கங்களை அளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வழிகேடர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்று செல்லி திரிகிறார்கள். இப்படி அலைவது சரிதான ? இதற்க்கான தீர்வு தான் என்ன ? அல்லாஹ்வின் வேதமும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் தான் என்ன என்று பார்ப்போம்.
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள், இன்னும் (அவனுடைய) தூதருக்கு கட்டுப்படுங்கள், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கு கட்டுப்படுங்கள்.
(அல் குர்ஆன் 4:59)
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
 
நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள்...
(அல் குர்ஆன் 3:102,103)
 
நிச்சயமாக நீங்கள் ஒரே சமுதாயம் தான். நான் தான் உங்கள் இறைவன். எனக்கே அஞ்சுங்கள்.
(அல் குர்ஆன் 23:52)
 
ஈயத்தால் வார்க்கப்பட்ட கட்டிடத்தைப் போல் ஓரணியில் நின்று அல்லாஹ்வின் பாதையில் போரிடக்கூடியவர்களை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல் குர்ஆன் 61:4)
 
தம் மார்க்கத்தைப் பிளந்து பலபிரிவுகளாகிவிட்ட இணைவைப்பேரில் ஒருவராக ஆகிவிட வேண்டாம்.
(அல் குர்ஆன் 30:31)
 
சண்டையிடாதீர்கள். இதனால் கோழைகளாகிவிடுவீர்கள். அப்போது உங்கள் பலம் போய்விடும்.
(அல் குர்ஆன் 8:46)
 
தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் கருத்து முரண்பட்டு பிரிந்துவிட்டவர்கள் போல் ஆகிவிடாதீர்கள். அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு.
(அல் குர்ஆன் 3:105)

 
(தண்டணை வழங்கப்படும்) அந்த நேரத்தில் (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மை பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்த தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டணை பெற்றே தீர்வார்கள் மேலும் அவர்களுக் கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்
(அல் குர்ஆன் 2:166)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அபூ ஹீரைரா (ரலி) அறிவித்தார்கள்.
இமாம் ஒரு கேடயம் ஆவர். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள். (முஸ்லிம்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்.
 அல்லாஹ்வின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்த ஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவார். ஆனால் பைஆ செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜாஹிலியா மரணமடைபவராவர் (முஸ்லிம்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
 எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். (புகாரி)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை)வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுபடாமல்அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் ஜாஹிலிய மரணத்தை அடைவார். (புகாரி)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில் தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்பவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும் ஏனெனில், ஒருவர்(இஸ்லாமியக்)கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில்) இறந்துவிட்டால் அவர் ஜாஹிலிய மரணத்தை தழூவியவர் ஆவார். (புகாரி)
 
முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இஸ்லாத்தின் வளங்கள் ஒவ்வொன்றாக அழிந்து போய்விடும் அவற்றில் ஒன்று அழியும்போது அடுத்துள்ளதை மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்வார்கள் அவ்விதம் தலைமைத்துவமே முதலில் அழிந்துபோகும் இறுதியாக அழிந்து போவது தொழூகையாகும். (அஹ்மத்)
 
உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள்,
நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை, தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை, அடிபணிதல் இன்றி தலைமைத்துவம் இல்லை. (தாரமி)
 
 ...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டுள்ள ஐந்து விசயங்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறினார்கள். அவை 1.ஜமாத் - ஒன்றினைந்து வாழ்தல் 2. அஸ்ஸம்உ – தலைமையின் ஆணையைச் செவியேற்றல் 3. தாஅத் - தலைமைக்குக் கட்டுபடுதல் 4. ஹிஜ்ரத் - தியாகப்பயணம் மேற்க்கொள்தல் 5. ஜிஹாத் - அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல். ஒருங்கினைந்து வாழூம் சமுதாய அமைப்பிலிருந்து ஒருவர் ஒரு சாண் அளவு வெளியே சென்றாலும் அவர் தனது கழூத்திலிருந்து இஸ்லாத்தின் கட்டை அவிழ்த்து விட்டார். மீண்டும் தீரும்பிவரும்வரை இதே நிலையில்தான் இருப்பார். யார் ஜாஹிலிய்யாவை செயல்படுத்திட அழைப்பு விடுகிறாரோ முழந்தாளிட்டவராக நரகத்தில் நுழையும் கூட்டத்திலிருப்பார். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் கேட்டனர். அவர் தொழூதாலும் நோன்பு நோற்றாலும் இதே நிலைதானா? அதற்கு ஆம் அவர் தொழூபவராக நோன்பு நோற்பவராக தன்னை முஸ்லிம் என்று கருதிக் கொள்பவராக இருப்பினும் சரிதான் என்று கூறிய நபி (ஸல்) தொடர்ந்து சொன்னார்கள். ஆனால் (உண்மையான)முஸ்லீம்களை அல்லாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயரான முஸ்லிம்கள்இ முஃமின்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று அழையுங்கள். (அறிவிப்பாளர்: அல்ஹாரிஸ் அல் அஷ்அரீ (ரலி) (அஹ்மத் இப்னு கதீர்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்,
அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

முஸ்லிம்களே உங்களுக்கு பொருப்பாரை ஏற்படத்தி அதன் மூலம் இருலகிலும் வெற்றி பெற போகிறீர்களா ?

இல்லை நாளை மறுமையில் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விரண்டோடும் தலைவர்கள் பின்னால் செல்லப் போகிறீர்களா ? 

முஸ்லீம்களே, உங்கள் ஈருலக வெற்றி உங்கள் கையில்!!!

Saturday, January 26, 2013

மலேசியாவில் தடை செய்யப்பட்ட விஸ்வருபம் படத்தை திரையிட கோரி பயங்கரவாத ஹிண்ட்ராப் அமைப்பு கோரிக்கை !


கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று திரையிடப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் விதித்திருக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று  பயங்கரவாத  அமைப்பான ஹிண்ட்ராப் தலைவர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.  கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலும் கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது விஸ்வரூபம். இதேநிலைமைதான் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் விஸ்வரூபம்
சந்திக்க நேரிட்டது. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இப்படம் நேற்று திரையிடப்பட்டிருந்தது. மலேசியாவில் அந்நாட்டு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியிடப்படுகிறதே என்பதை கமலை ஆதரிக்கும் திரை பிரபலங்கள் சுட்டிக்காட்டியும் பேசி வந்தனர். 

இந்நிலையில் அந்நாட்டு இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் திரைப்படத்தை நிறுத்துமாறு திரையரங்குகளுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே கமலஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று பயங்கரவாத ஹிண்ட்ராப் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஹிண்ட்ராப் தலைவரான உதயகுமார் இது குறித்து கூறுகையில், கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தைப் போல பல ஹாலிவுட் திரைப்படங்கள் மலேசியாவில் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படத்தில் யதார்த்தம் எதுவோ அதனை கமலஹாசன் வெளிப்படுத்தியிருக்கிறார். இதைத் தடை செய்வது ஏற்க முடியாது. விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த ஹிண்ட்ராப் அமைப்பு இந்தியாவில் உள்ள பயங்கரவாத ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் என்பது குறிப்பிடதக்கது...


கமலையும் , ரஜினியையும் புரிந்து கொண்டோம் !!


கமல்ஹாசனைப் புரிந்து கொண்டு, அவருடைய நஷ்டத்தையும் புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ் சினிமாவை சர்வதேச அளவுக்கு உயர்த்திய ஒரு மாபெரும் கலைஞனை கஷ்டப்படுத்திவிடக் கூடாது. இஸ்லாமியர்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர் கமல் அவருக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும், திரைப்படத்தை முழுமையாக தடை செய்யாமல் சில காட்சிகளை நீக்கி கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியிட உதவுமாறு இஸ்லாமியர்களிடம் வேண்டுகின்றேன். என ரஜினிகாந்த்  கருத்து வெளியிட்டுள்ளார்.

மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இதுதான் இப்போது சூடு பிடித்துள்ளது.
முஸ்லிம்கள் விஷயத்தில் சரியான பார்வை கொண்டவரைப் போலவும், கமல்ஹாசன் தவறு செய்யாததைப் போலவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இவருடைய உண்மைத் தன்மையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.
விஸ்வரூபம் என்றொரு திரைப்படத்தை பற்றி தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வாகவே இந்தக் கருத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
கமல் தொடர்பான ரஜினியின் பார்வையின் குருட்டுத் தனம் : 
கமல்ஹாசனின் விஸ்வரூபம் தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஐந்து கோரிக்கைகளை இஸ்லாமியர்களிடம் முன் வைத்துள்ளார்.
# கமல்ஹாசனை புரிந்து கொள்ள வேண்டும்.
# விஸ்வரூபத்தின் மூலம் கமலுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க உதவ வேண்டும்.
# தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞனை கஷ்டப்படுத்தக் கூடாது.
# இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவர் கமல்.
# கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படத்தின் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும். 
ரஜினிகாந்த் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் சினிமாத் துரையின் அடாவடித் தனத்தையும், அயோக்கியத் தனத்தையும் பொது மக்கள் இப்போதுதான் சரியாகப் புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் கமலுடைய திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.
சினிமாவின் பேரால் ஐரோப்பாவின் சில்லரைக்கு ஜால்ரா போடும் கமல் போன்றவர்கள் ரஜினியின் பார்வையில் வேண்டுமானால் கலைஞனாக, கலையுலக ஜாம்பவானாக இருக்கலாம். உண்மையை நேசிக்கும், ஒழுக்கத்தை விரும்பும் சுய கவுரவத்தை ஆசை வைக்கும் எந்த மனிதனுக்கும் கமல் என்ன ரஜினி கூட ஒரு சாக்கடை சக்கை தான். தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரம் சினிமாவுக்குத் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்தக் கதாபாத்திரம் ஒரு அப்துல்லாஹ்வாக அல்லது அப்து ரஹ்மானாக தாடி வைத்து குள்ளா போட்ட, முழு நீள அங்கி அணிந்த ஒருவனாகத் தான் காட்சி அமைப்பு உருவாக்கப்படும். காரணம் முஸ்லிம்கள் தான் உலகின் தீவிரவாதிகள் என்பது இவர்களின் குருட்டு கண்களின் இருட்டுப் பார்வை.
ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திடம் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுகோள் விடுப்பது என்பது வடிகட்டிய முட்டாள் தனமாகும்.
அறிவுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் கமலின் மீது கொண்ட நட்பினால் ரஜினி போன்றவர்கள் இப்படியான கோரிக்கையை வைப்பதின் மூலமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. முழு இஸ்லாமிய சமுதாயத்தின் மீதும் இல்லாத அபாண்டத்தைச் சுமத்தியவரை கண்டித்து திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தும் படி ஆலோசனை சொல்ல வேண்டியவர் தங்கள் வருமானத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறி கமல்ஹாசன் திரைப்படத்தில் மூலம் இஸ்லாமியர்களின் மனதைப் புன்படுத்தியதைப் போல் தனது கருத்தின் மூலம் இஸ்லாமியர்களைப் புன்படுத்துகின்றார் ரஜினிகாந்த்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவராக கமலைப் பாராட்டுகின்றார் ரஜினி உண்மையில் முஸ்லிம்கள் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் செய்யும் காரியத்தை அல்ல கமல் விஸ்வரூம் மூலம் செய்திருக்கின்றார்.
இஸ்லாமியர்களின் புனித குர்ஆனை தீவிரவாதத்தைத் தூண்டும் புத்தகமாக சித்தரித்துள்ளார்.
இஸ்லாமிய சிறுவர்கள் கல்விக்கு ஆர்வம் காட்டுவதை விட அதிகமான ஆர்வத்தை ஆயுதப் பயிற்சிக்குக் காட்டுவதாக சித்தரித்துள்ளார்.
முஸ்லிம்கள் தங்கள் மணைவியரை அண்ணியவர்களுக்கு கூட்டிக் கொடுப்பதைப் போல் சித்தரித்துள்ளார்.
திருமறைக் குர்ஆனின் வசனங்களை தனக்குச் சாதகமாக வலைத்து குர்ஆனின் கருத்துக்களை தவறான புரிதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது போல் திரைப்படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான தனது காழ்ப்புணர்வை கட்டுக்கடங்காமல் கக்கியுள்ள கமல்ஹாசன் தான் இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவரா?
கதைக்கு பாதிப்பில்லாத வகையில் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையில் தெளிவான பாசிசம் அடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. திரைப்படத்தின் காட்சியமைப்பில் நீக்கம் செய்து வெளியிடும் அளவுக்கு உள்ள திரைப்படமல்ல விஸ்வரூபம். முழுத் திரைப்படத்தையும் புரக்கணிக்கும் வகையில் அமைந்த ஒரு சியோனிச கொள்கைப் பரப்பும் திரைப்படமாகவே இது அமைந்துள்ளது.
முழு இஸ்லாமிய சமூகத்தையும் இம்சிக்கும் இத்திரைப்படம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதன் தொடரில் பல இயக்குணர்கள் தங்கள் வக்கிர புத்தியை விஸ்வரூபமாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் திரைப்படத்தின் ஹீரோவான கமல் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை அழிப்பவராகவும் அதில் நடித்திருப்பான். இப்படி முஸ்லிம்கள் தான் இந்தியாவையும் இந்த உலகத்தையும் அழிக்க நினைப்பவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்புவதுடன் கடவுள் மறுப்புக் கொள்கை என்றொன்றை தனக்குள் சொல்லிக் கொண்டு காவிப் பயங்கரவாதத்திற்கு தினமும் இவன் துணை போவதை யாரும் மறுக்க முடியாது.
தான் பெற்ற மகளையே அடுத்தவனுடன் அரை குறை ஆடையுடன் ஆட வைத்து ரசித்துப் பார்த்துவிட்டு ‘என்னைப் போன்றே எனது மகளும் சிறப்பாக நடிக்கின்றாள் என்று பெருமைப் பட்டுக் கொண்டவன் தான் இந்த மானங்கெட்ட கமல். இவனுக்கெல்லாம் ஒழுக்கத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது ‘எறுமை மாட்டின் மேல் மழை பெய்வதற்கு சமனானதாகும்’.
ரஜினி என்ற பாசிச பசை :
இன்றைக்கு உபதேசம் (?) செய்யும் ரஜினிகாந்த் தனது நிலையை மறந்து பேசினாலும் முஸ்லிம்கள் அவரை மறக்க மாட்டார்கள். காரணம் கமலின் தோழனாக இருப்பதைப் போல் கமலைப் போன்ற இஸ்லாமிய துவேஷ வெரி இவரிடமும் நிறைந்தே காணப்படுகின்றது.
பால்தாக்கரே என்ற இஸ்லாமிய வெறியன் மும்பையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் இருக்கும் வரைக்கும் அவனுடைய தீவிர ஆதரவாளராகவும், தற்போதும் அவனுடைய கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பவராகவும் இருப்பவர் தான் இந்த ரஜினிகாந்த்.
கமலின் விஸ்வரூபம் விஷயத்தில் வியத்தகு (?) தத்துவம் பேசும் இவர் நடித்து வெளியிட்ட திரைப்படங்கள் மாத்திரம் தத்துவப் பொக்கிஷங்களா? தான் நடித்து வெளியாகிய பல திரைப்படங்களில் இவனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கருப்புப் பணம் கடத்துபவர்களாக, ஒழுக்கம் கெட்டவர்களாக காட்சிப்படுத்தியவன் தான் இந்த ரஜினிகாந்த்.
இவனுடைய சிந்தனைக்கும் கமலுடைய சிந்தனைக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. கமல் முழுப்படமாக தயாரித்ததை இவன் முழுப்படத்தின் சில காட்சிகளாக சித்தரித்திருக்கின்றான். சிவாஜி என்ற பெயரில் இவன் நடித்து வெளியாகிய திரைப்படத்தில் இந்தியாவின் கருப்புப் பணங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி அதனை டாலராக மாற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவருபவர்களாக முஸ்லிம்களை சித்தரித்திருப்பான்.
முஸ்லிம் தான் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றானா? இந்துக்களில், கிருத்தவர்கள், சீக்கியர்கள் யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லையா? அவர்களின் பெயரால் இவர்கள் திரைப்படம் தயாரித்தார்களா?
கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.
கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.
இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?
அமைதியான ஒரு மார்க்கத்தையும் அதைப் பின்பற்றுபவர்களையும் காட்சி ஊடகத்தின் மூலமாக தீயவர்களாக, தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் என்ன நன்மையை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும் இஸ்லாமியர்களைப் பொருத்த வரையில் இருவருமே ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம்.
பேசித் தீர்வு கண்டு திரைப்படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைக்கும் அயோக்கியன் ரஜினிகாந்திடம் சில கேள்விகள்.
# பல கோடி செலவு செய்து படம் எடுத்துள்ளார் அதனால் படத்தை திரையிட உதவுங்கள் என்று வேண்டு கோள் விடுத்துள்ளீரே உனது இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்து 100 கோடி செலவில் கமல்ஹாசன் ஆபாசப்படம் தயாரித்தால் பேசித் தீர்த்து திரைப்படத்தை வெளியிட உதவி செய்வீரோ?
# உனது இரண்டு பெண் பிள்ளைகளின் நிலையை கவணித்தாலே இவனின் உண்மை நிலை தெளிவாகப் புரிந்துவிடுமே?
# தான் கட்டிய கணவனையே கமல்ஹாசனின் மகளுடன் கட்டிப்பிடித்து படுக்கையறைக் காட்சியில் நடிக்க வைத்தவள் தானே உனது மகள் ஐஸ்வர்யா? உன் குணம் தானே உனது பிள்ளைக்கும்.
# நீ ஒரு மொடாக் குடிகாரன் என்பது எங்களுக்குத் தெரியும். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பார்கள் இப்படி உன்னுடைய இந்தப் பேச்சை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம். காரணம் எங்கள் சமுதாயத்தின் மானத்தில் விளையாடுகின்றாய்.
# நீ பெற்ற மகள் ஐஸ்வர்யாவையும், உனது மருமகன் தனுஷையும் பார்வையாளராக வைத்துக் கொண்டு எந்திரன் திரைப்பட விழாவில் கூத்தாடி ஐஸ்வர்யாவைப் பார்த்து ‘ஐஸ்வர்யா மேக்கப் இல்லாமலே சூப்பர் பிகரு’ என்று சொன்ன வெட்கம் கெட்ட தகப்பன் தானடா நீ?
# பெரிய செலவில் எடுத்த படம் காப்பாற்ற உதவுங்கள் என்று பாதிக்கப்பட்ட எங்களிடம் வெட்கம் கெட்டு கேட்பதை விட அடுத்தவன் மனைவியை கட்டிப் பிடித்து ஆடி நீ சம்பாதித்த பணத்தில் இருந்து கமலுக்கு உதவி செய் பார்க்களாம்?
அன்பின் நல்ல உள்ளங்களே !
நம்மைப் பொருத்த வரையில் சினிமா கூத்தாடிகள் அத்தனை பேரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம் அது ரஜினியாக இருந்தாலும் சரி கமலாக இருந்தாலும் சரி இவனைப் போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளை ரசித்து ருசித்து பார்ப்பதின் ஊடாக இவனைப் போன்ற கூத்தாடிகளின் வளர்ச்சிக்கு நாம் துணை போவதென்பது தெளிவாக நம்மை பாவத்தின் பக்கம் இட்டுச் செல்வதாகும். ஆதனால் இது போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளுக்கு துணை போகாமல் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!                                                          1
நன்றி : ரஷ்மின் 
Blogger Wordpress Gadgets