Facebook Twitter RSS

Wednesday, January 23, 2013

Widgets

“ஹெலிகாப்ரில் இருந்து தலிபான்களை வீடியோ கேம் போல சுட்டு கொன்றேன்!” இளவரசர் ஹரி




ஒரு சிலுவை போராளியின் ஆணவ வார்த்தைகள்

“Every Dog has his own day” இது பைபிளின் வசனம். நாளை அராபிய குதிரைகள் இராணியின் அரண்மனை முற்றத்தில் புல் மேயும் நாளும் வரலாம். 

(viruvirupu.com) ப்கானிஸ்தானில் 20 வார ராணுவ சேவைக்கு பின் நாடு திரும்பிய பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, தலிபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் விமானப் படையின் அபாச்சி ஹெலிகாப்ட்டர் பைலட்டாக அவர் பணிபுரிந்தார்.


“தீவிரவாதிகளை அழிப்பதற்கும், தரையில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத்தினரை காப்பதற்கும், ஹெலிகாப்டரில் எனது கையில் ஒரு பட்டன் இருந்தது. அதை அழுத்தினால், ஏவுகணை பாய்ந்து செல்லும். எனது ஹெலிகாப்டரில் இருந்து சென்ற ஏவுகணை தாக்கியதில் தலிபான்கள் கொல்லப்பட்டனர்” என்றும், இளவரசர் ஹரி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் விமானப்படை அபாச்சி ஹெலிகாப்டரில், நேர்த்தியாக ஆயுத சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பன் சிஸ்டத்தில், ராக்கெட்டுகள், ஹெல்ஃபயர் ஏவுகணைகள், 30mm கனொன் எந்திரத் துப்பாக்கி ஆகியவை உள்ளன. தரை துருப்புகள், ஆப்கான் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த செல்லும்போது, வான் பாதுகாப்பு கொடுக்க இந்த ஹெலிகாப்டர்கள் செல்வது வழக்கம்.

ஹெலிகாப்டர் விமானியாக யுத்த முனையில் பணிபுரிவது, எனக்கு ஜாலியான அனுபவம். காரணம் நான், PlayStation, Xbox வீடியோ கேம் விளையாட்டுப் பிரியன். அதில் விரல்களால் பட்டனை அழுத்தி விளையாடுவதுபோல, ராணுவ ஹெலிகாப்டரில் பட்டனை அழுத்தி நிஜ ஏவுகணைகளை ஏவியது, ஜாலியான அனுபவம்” என்று தடாலடியாக கூறியுள்ளார், இளவரசர்!

இந்த ‘ஜாலியான அனுபவத்தின்’ போதுதான், தலிபான்கள் கொல்லப்பட்டனர்!

ஆப்கானில் கேம்ப் பாஸ்டியனில் தங்கியிருந்த இளவரசர் ஹரி, இங்கிருந்தபோது சில மீடியாக்களுக்கு பேட்டிகள் கொடுத்திருந்தார். ஆனால், அந்தப் பேட்டிகள் வெளியாகாதவாறு, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு செய்தித் தடை போட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இளவரசர் ஹரி ஆப்கானில் இருந்து புறப்பட்ட பின்னரே பேட்டிகள் வெளியிடப்படலாம் என்பது, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு.
நேற்றிரவு இளவரசர் ஆப்கானில் இருந்து கிளம்பி விட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே, “எனது ஹெலிகாப்டரில் இருந்து சென்ற ஏவுகணை தாக்கியதில் தலிபான்கள் கொல்லப்பட்டனர்” என்ற பேட்டி ஹைலைட் தற்போது வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets