Facebook Twitter RSS

Thursday, January 17, 2013

Widgets

யுவான் ரிட்லிக்கு விசா மறுப்பு:இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா !



ஹைதராபாத்:பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான யுவான் ரிட்லிக்கு இந்தியாவுக்கு வர விசாவை மறுத்துள்ளது மத்திய அரசு.ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள யுவான் ரிட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு வர விசாவுக்கு விண்ணப்படித்திருந்தார். ஆனால், அவருக்கு விசா அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.ஏற்கனவே கேரள மாநிலத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தபோதும் இந்திய அரசு விசா அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், யுவான் ரிட்லி வீடியோ
கான்ஃப்ரன்ஸ் மூலமாக மாநாட்டில் உரையாற்றினார் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தனது கண்டனத்தை பதிவுச்செய்துள்ள யுவான் ரிட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:பெண்கள் உரிமைகள் குறித்து 50 ஆயிரம் பெண்கள் மத்தியில் உரையாற்றும் வாய்ப்பை இந்திய அரசு மறுத்துள்ளது.டெல்லியில் கூட்டு பாலியல் கொடுமை போன்ற அக்கிரமங்கள் நடந்த பிறகும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் அதன் தீவிரத்தன்மையை உணரவில்லை.பெண்களை 2-ஆம் தர குடிமக்களாகவே பார்க்கின்றனர் என்று யுவான் ரிட்லி கூறியுள்ளார்.
லண்டனில் வாழும் யுவான் ரிட்லி 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் பத்திரிகை பணிக்காக சென்றபொழுது தாலிபான் போராளிகளால் கைதுச் செய்யப்பட்டார்.2003-ஆம் ஆண்டு விடுதலைச் செய்யப்பட்ட யுவான் ரிட்லி பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets