புதுடெல்லி:இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார். ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை
நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக் விஜய்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு குறித்து பல வருடங்களுக்கு முன்பாகவே நான் கூறியபொழுது அது பைத்தியக்காரத்தனமான கூற்று என்றே அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் கருதின. இப்பொழுது மத்திய உள்துறை அமைச்சரே வெளியிட்டதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்களை குறித்த ஆதாரங்களை அளிகக் தயார். ஹிந்துத்துவா தீவிரவாதத்தை குறித்து விசாரணை நடந்துவருகிறது. சில ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கமல்நாத் கூறுகையில், “மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க முயல்கிறது” என்றார்.
No comments:
Post a Comment