Facebook Twitter RSS

Thursday, January 24, 2013

Widgets

நீதிபதி சச்சாரின் உயிரை குறிவைத்த இந்துத்துவ பயங்கரவாதம் -



சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத்துவ தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் உயிருக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் குறிவைத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது. அக்டோபர் 2006ல் இந்த  முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும்  ஆனால் கை கூடவில்லை என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் சமூக - பொருளாதார நிலைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு மார்ச் 2005 ல் நீதிபதி சச்சார் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது. நவம்பர் 2006 ஆம் ஆண்டு அந்த ஆணையம் தங்கள் ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை சச்சார் குழு ஆய்வு செய்வது பிடிக்காமல், கொல்லப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதி சுனில் ஜோஷி தலைமையில் சச்சாரைக் கொல்ல முடிவெடுக்கப்பட்டதாக ராஜேந்திர செளத்ரியின் வாக்குமூலம் தெரிவிக்கிறது.

சுனில் ஜோஷி இதன் காரியஸ்தர்களாக ராஜேந்திர செளத்ரியையும் லோகேஷ் ஷர்மாவையும் இருக்கப் பணித்ததாகவும், 2006ன் தொடக்கத்தில் இதற்கான ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் வாக்குமூலம் தெரிவிக்கிறது.

தேசிய புலனாய்வு நிறுவனம் நீதிபதி சச்சாரின் உயிருக்கு ஆபத்து என்று 'அறிந்து', டெல்லியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியது என்றாலும், பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வின் பொருட்டு பயணித்த சச்சாருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அச்சமயம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாந்தேட் நகரில், தனது வீட்டில்  குண்டு தயாரிக்கையில் ஆர் எஸ் எஸ் ஊழியர் இறந்து போனதையடுத்து உளவுத் துறையின் கவனம் ஆர் எஸ் எஸ் இயக்கப் பிரமுகர்கள் மீது திரும்பியதால் சச்சாரைக் கொல்லும் இந்துத்துவ திட்டம் நிறைவேறாமல் போனதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின்போது மகாத்மா காந்தி முஸ்லிம்களுக்கு அனுகூலமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது பிடிக்காததாலேயே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்சேயால் கொல்லப்பட்டார். அதே போன்று நீதிபதி சச்சாரையும் தீர்த்துக்கட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருந்த விசயம் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets