சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும் ,பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்திதாள்கள் வழியாகவும் ,தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம் .
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதற்கும் ,இருக்க ,இருக்க இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும் அவர்கள் அணியக்கூடிய கவர்ச்சியான ஆடைகள் தான் 99 சதவிதம் காரணம் என்பதை அறிவுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள் .ஆனால் இந்த உண்மையான ஆட்சியாளர்களும் ,அறிவுஜீவிகளும் ,பெண்ணுரிமை பேசக்கூடியவர்களும் உணர மறுப்பதுதான் வேதனையிலும் வேதனை .
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குரிய காரணங்களை தற்போதுதான் மிகமிக தாமதமாக காலம் கடந்துவிட்ட பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு தரப்பினராக உணர்த்துவங்கிவுள்ளனர் .
இந்திய நாட்டில் உள்ள அணைத்து பெண்களும் பர்தா அணிய மதுரை ஆதினம் வேண்டுக்கோள் :
நடந்த 29.12. 12 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு மதுரை ஆதினமாக உள்ள அருணகிரிநாதர் ஒரு பேட்டியளித்தார் .அந்த பேட்டியில் அவர் ,"இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது வழக்கம் .கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர் .இஸ்லாமிய பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும் ,தொல்லைகளுக்கு ஆளாகாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் ,ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப வேண்டுமென்றால் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் .அப்பொழுதுதான் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும் "என்று கூறிவுள்ளார் . பெண்களது அரைகுறையான கவர்ச்சி ஆடைகள்தான் ஆண்களை தவறு செய்யத் தூண்டுகின்றது என்ற உண்மையை மதுரை ஆதினம் கூறி அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வுதான் சரியானது என்று கூறியது தான் தாமதம் .உடனடியாக ஆதனம் கூறிய இந்தக் கருத்தைக் கண்டித்துக் மதுரையில் 30.12.12 அன்று மதுரை ஆதின மடத்தை பெண்கள் அமைப்புகள் முற்றுகையிட்டு அந்த அமைப்பைச் சேர்ந்த 50பேர் கைதாகிவுள்ளனர் .
"நான் சொன்னது சரிதான் " -மதுரை ஆதினம்
தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் ,அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் ,பெண்கள் அமைப்பிடம் மனினிபெல்லாம் கேட்க முடியாது என்றும் ,"நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராக பேசவில்லை ;நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது .அதனை பெற்றோர்களும் ,பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் :தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன் ;எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும் ;நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் "என்று அவர் உறுதிபடச் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment