Facebook Twitter RSS

Saturday, January 26, 2013

Widgets

கமலையும் , ரஜினியையும் புரிந்து கொண்டோம் !!


கமல்ஹாசனைப் புரிந்து கொண்டு, அவருடைய நஷ்டத்தையும் புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ் சினிமாவை சர்வதேச அளவுக்கு உயர்த்திய ஒரு மாபெரும் கலைஞனை கஷ்டப்படுத்திவிடக் கூடாது. இஸ்லாமியர்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர் கமல் அவருக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும், திரைப்படத்தை முழுமையாக தடை செய்யாமல் சில காட்சிகளை நீக்கி கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியிட உதவுமாறு இஸ்லாமியர்களிடம் வேண்டுகின்றேன். என ரஜினிகாந்த்  கருத்து வெளியிட்டுள்ளார்.

மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இதுதான் இப்போது சூடு பிடித்துள்ளது.
முஸ்லிம்கள் விஷயத்தில் சரியான பார்வை கொண்டவரைப் போலவும், கமல்ஹாசன் தவறு செய்யாததைப் போலவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இவருடைய உண்மைத் தன்மையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.
விஸ்வரூபம் என்றொரு திரைப்படத்தை பற்றி தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வாகவே இந்தக் கருத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
கமல் தொடர்பான ரஜினியின் பார்வையின் குருட்டுத் தனம் : 
கமல்ஹாசனின் விஸ்வரூபம் தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஐந்து கோரிக்கைகளை இஸ்லாமியர்களிடம் முன் வைத்துள்ளார்.
# கமல்ஹாசனை புரிந்து கொள்ள வேண்டும்.
# விஸ்வரூபத்தின் மூலம் கமலுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க உதவ வேண்டும்.
# தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞனை கஷ்டப்படுத்தக் கூடாது.
# இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவர் கமல்.
# கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படத்தின் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும். 
ரஜினிகாந்த் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் சினிமாத் துரையின் அடாவடித் தனத்தையும், அயோக்கியத் தனத்தையும் பொது மக்கள் இப்போதுதான் சரியாகப் புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் கமலுடைய திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.
சினிமாவின் பேரால் ஐரோப்பாவின் சில்லரைக்கு ஜால்ரா போடும் கமல் போன்றவர்கள் ரஜினியின் பார்வையில் வேண்டுமானால் கலைஞனாக, கலையுலக ஜாம்பவானாக இருக்கலாம். உண்மையை நேசிக்கும், ஒழுக்கத்தை விரும்பும் சுய கவுரவத்தை ஆசை வைக்கும் எந்த மனிதனுக்கும் கமல் என்ன ரஜினி கூட ஒரு சாக்கடை சக்கை தான். தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரம் சினிமாவுக்குத் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்தக் கதாபாத்திரம் ஒரு அப்துல்லாஹ்வாக அல்லது அப்து ரஹ்மானாக தாடி வைத்து குள்ளா போட்ட, முழு நீள அங்கி அணிந்த ஒருவனாகத் தான் காட்சி அமைப்பு உருவாக்கப்படும். காரணம் முஸ்லிம்கள் தான் உலகின் தீவிரவாதிகள் என்பது இவர்களின் குருட்டு கண்களின் இருட்டுப் பார்வை.
ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திடம் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுகோள் விடுப்பது என்பது வடிகட்டிய முட்டாள் தனமாகும்.
அறிவுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் கமலின் மீது கொண்ட நட்பினால் ரஜினி போன்றவர்கள் இப்படியான கோரிக்கையை வைப்பதின் மூலமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. முழு இஸ்லாமிய சமுதாயத்தின் மீதும் இல்லாத அபாண்டத்தைச் சுமத்தியவரை கண்டித்து திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தும் படி ஆலோசனை சொல்ல வேண்டியவர் தங்கள் வருமானத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறி கமல்ஹாசன் திரைப்படத்தில் மூலம் இஸ்லாமியர்களின் மனதைப் புன்படுத்தியதைப் போல் தனது கருத்தின் மூலம் இஸ்லாமியர்களைப் புன்படுத்துகின்றார் ரஜினிகாந்த்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவராக கமலைப் பாராட்டுகின்றார் ரஜினி உண்மையில் முஸ்லிம்கள் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் செய்யும் காரியத்தை அல்ல கமல் விஸ்வரூம் மூலம் செய்திருக்கின்றார்.
இஸ்லாமியர்களின் புனித குர்ஆனை தீவிரவாதத்தைத் தூண்டும் புத்தகமாக சித்தரித்துள்ளார்.
இஸ்லாமிய சிறுவர்கள் கல்விக்கு ஆர்வம் காட்டுவதை விட அதிகமான ஆர்வத்தை ஆயுதப் பயிற்சிக்குக் காட்டுவதாக சித்தரித்துள்ளார்.
முஸ்லிம்கள் தங்கள் மணைவியரை அண்ணியவர்களுக்கு கூட்டிக் கொடுப்பதைப் போல் சித்தரித்துள்ளார்.
திருமறைக் குர்ஆனின் வசனங்களை தனக்குச் சாதகமாக வலைத்து குர்ஆனின் கருத்துக்களை தவறான புரிதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது போல் திரைப்படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான தனது காழ்ப்புணர்வை கட்டுக்கடங்காமல் கக்கியுள்ள கமல்ஹாசன் தான் இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவரா?
கதைக்கு பாதிப்பில்லாத வகையில் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையில் தெளிவான பாசிசம் அடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. திரைப்படத்தின் காட்சியமைப்பில் நீக்கம் செய்து வெளியிடும் அளவுக்கு உள்ள திரைப்படமல்ல விஸ்வரூபம். முழுத் திரைப்படத்தையும் புரக்கணிக்கும் வகையில் அமைந்த ஒரு சியோனிச கொள்கைப் பரப்பும் திரைப்படமாகவே இது அமைந்துள்ளது.
முழு இஸ்லாமிய சமூகத்தையும் இம்சிக்கும் இத்திரைப்படம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதன் தொடரில் பல இயக்குணர்கள் தங்கள் வக்கிர புத்தியை விஸ்வரூபமாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் திரைப்படத்தின் ஹீரோவான கமல் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை அழிப்பவராகவும் அதில் நடித்திருப்பான். இப்படி முஸ்லிம்கள் தான் இந்தியாவையும் இந்த உலகத்தையும் அழிக்க நினைப்பவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்புவதுடன் கடவுள் மறுப்புக் கொள்கை என்றொன்றை தனக்குள் சொல்லிக் கொண்டு காவிப் பயங்கரவாதத்திற்கு தினமும் இவன் துணை போவதை யாரும் மறுக்க முடியாது.
தான் பெற்ற மகளையே அடுத்தவனுடன் அரை குறை ஆடையுடன் ஆட வைத்து ரசித்துப் பார்த்துவிட்டு ‘என்னைப் போன்றே எனது மகளும் சிறப்பாக நடிக்கின்றாள் என்று பெருமைப் பட்டுக் கொண்டவன் தான் இந்த மானங்கெட்ட கமல். இவனுக்கெல்லாம் ஒழுக்கத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது ‘எறுமை மாட்டின் மேல் மழை பெய்வதற்கு சமனானதாகும்’.
ரஜினி என்ற பாசிச பசை :
இன்றைக்கு உபதேசம் (?) செய்யும் ரஜினிகாந்த் தனது நிலையை மறந்து பேசினாலும் முஸ்லிம்கள் அவரை மறக்க மாட்டார்கள். காரணம் கமலின் தோழனாக இருப்பதைப் போல் கமலைப் போன்ற இஸ்லாமிய துவேஷ வெரி இவரிடமும் நிறைந்தே காணப்படுகின்றது.
பால்தாக்கரே என்ற இஸ்லாமிய வெறியன் மும்பையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் இருக்கும் வரைக்கும் அவனுடைய தீவிர ஆதரவாளராகவும், தற்போதும் அவனுடைய கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பவராகவும் இருப்பவர் தான் இந்த ரஜினிகாந்த்.
கமலின் விஸ்வரூபம் விஷயத்தில் வியத்தகு (?) தத்துவம் பேசும் இவர் நடித்து வெளியிட்ட திரைப்படங்கள் மாத்திரம் தத்துவப் பொக்கிஷங்களா? தான் நடித்து வெளியாகிய பல திரைப்படங்களில் இவனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கருப்புப் பணம் கடத்துபவர்களாக, ஒழுக்கம் கெட்டவர்களாக காட்சிப்படுத்தியவன் தான் இந்த ரஜினிகாந்த்.
இவனுடைய சிந்தனைக்கும் கமலுடைய சிந்தனைக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. கமல் முழுப்படமாக தயாரித்ததை இவன் முழுப்படத்தின் சில காட்சிகளாக சித்தரித்திருக்கின்றான். சிவாஜி என்ற பெயரில் இவன் நடித்து வெளியாகிய திரைப்படத்தில் இந்தியாவின் கருப்புப் பணங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி அதனை டாலராக மாற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவருபவர்களாக முஸ்லிம்களை சித்தரித்திருப்பான்.
முஸ்லிம் தான் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றானா? இந்துக்களில், கிருத்தவர்கள், சீக்கியர்கள் யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லையா? அவர்களின் பெயரால் இவர்கள் திரைப்படம் தயாரித்தார்களா?
கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.
கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.
இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?
அமைதியான ஒரு மார்க்கத்தையும் அதைப் பின்பற்றுபவர்களையும் காட்சி ஊடகத்தின் மூலமாக தீயவர்களாக, தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் என்ன நன்மையை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும் இஸ்லாமியர்களைப் பொருத்த வரையில் இருவருமே ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம்.
பேசித் தீர்வு கண்டு திரைப்படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைக்கும் அயோக்கியன் ரஜினிகாந்திடம் சில கேள்விகள்.
# பல கோடி செலவு செய்து படம் எடுத்துள்ளார் அதனால் படத்தை திரையிட உதவுங்கள் என்று வேண்டு கோள் விடுத்துள்ளீரே உனது இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்து 100 கோடி செலவில் கமல்ஹாசன் ஆபாசப்படம் தயாரித்தால் பேசித் தீர்த்து திரைப்படத்தை வெளியிட உதவி செய்வீரோ?
# உனது இரண்டு பெண் பிள்ளைகளின் நிலையை கவணித்தாலே இவனின் உண்மை நிலை தெளிவாகப் புரிந்துவிடுமே?
# தான் கட்டிய கணவனையே கமல்ஹாசனின் மகளுடன் கட்டிப்பிடித்து படுக்கையறைக் காட்சியில் நடிக்க வைத்தவள் தானே உனது மகள் ஐஸ்வர்யா? உன் குணம் தானே உனது பிள்ளைக்கும்.
# நீ ஒரு மொடாக் குடிகாரன் என்பது எங்களுக்குத் தெரியும். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பார்கள் இப்படி உன்னுடைய இந்தப் பேச்சை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம். காரணம் எங்கள் சமுதாயத்தின் மானத்தில் விளையாடுகின்றாய்.
# நீ பெற்ற மகள் ஐஸ்வர்யாவையும், உனது மருமகன் தனுஷையும் பார்வையாளராக வைத்துக் கொண்டு எந்திரன் திரைப்பட விழாவில் கூத்தாடி ஐஸ்வர்யாவைப் பார்த்து ‘ஐஸ்வர்யா மேக்கப் இல்லாமலே சூப்பர் பிகரு’ என்று சொன்ன வெட்கம் கெட்ட தகப்பன் தானடா நீ?
# பெரிய செலவில் எடுத்த படம் காப்பாற்ற உதவுங்கள் என்று பாதிக்கப்பட்ட எங்களிடம் வெட்கம் கெட்டு கேட்பதை விட அடுத்தவன் மனைவியை கட்டிப் பிடித்து ஆடி நீ சம்பாதித்த பணத்தில் இருந்து கமலுக்கு உதவி செய் பார்க்களாம்?
அன்பின் நல்ல உள்ளங்களே !
நம்மைப் பொருத்த வரையில் சினிமா கூத்தாடிகள் அத்தனை பேரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம் அது ரஜினியாக இருந்தாலும் சரி கமலாக இருந்தாலும் சரி இவனைப் போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளை ரசித்து ருசித்து பார்ப்பதின் ஊடாக இவனைப் போன்ற கூத்தாடிகளின் வளர்ச்சிக்கு நாம் துணை போவதென்பது தெளிவாக நம்மை பாவத்தின் பக்கம் இட்டுச் செல்வதாகும். ஆதனால் இது போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளுக்கு துணை போகாமல் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!                                                          1
நன்றி : ரஷ்மின் 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets