Facebook Twitter RSS

Saturday, January 19, 2013

Widgets

இஸ்லாத்தின் மீதான நவீன சிலுவையுத்தத்தின் மறுபெயர் “அல்-காயிதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” - இஸ்லாத்தை குறி வைக்கும் கிறிஸ்தவ தேசங்கள்!!


தற்கும் சம்மந்தம் இல்லாத சாதாரண அப்பாவி முஸ்லிம் பெண்கள் மீதும், வயோதிபர்கள் மீதும், குழந்தைகள் மீதும் தனது பழைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்த முயலும் பிரான்ஸ் நடத்தும் வெறியாட்டத்தில் ரஷ்யாவும் தன் பங்கிற்கு உதவிகளை செய்து வருகிறது. பீ.பீ.ஸி. செய்திகள் ரஷ்யாவின் இந்த இராணுவ உறுவுகள் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. அதே வேளை ரஷ்ய சரக்கு விமானமான An-124 "Ruslan", பிரான்சிய இராணுவ விமானங்களிற்கு மத்தியில் காணப்படும் வீடியோவை ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இஸ்லாத்தின் மீதான போரை பொய்யாக அல்-காயிதா மீதான போரென சொல்லி நவ சிலுவை யுத்தம் செய்யும் கிறிஸ்தவ தேசங்கள் பட்டியலில் ரஷ்யாவும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. 


ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான வர்த்தக விமானங்களான Volga-Dnepr,  JSC "224 Squadron" போன்றனவும் இப்போது “லொஜிஸ்டிக் எய்ட்” என்ற பெயரில் பிரான்ஸின் இராணுவ தேவைகளிற்கு பயன்படுத்தப்படுவதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 

ரஷ்ய இராணுவ ஆய்வாளர் I. Kramnik, ரஷ்யாவின் இராணுவத்தின் வழங்கள் பிரிவான 224the Squadron ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரிற்கான விநியோகங்கள், வழங்கள் போன்றவற்றை பாரமெடுத்து பராமரிக்க தயார்படுத்தப்பட்டுள்ளன. நேட்டோ, வார்ஸோ போன்ற முகாம்கள் மூடப்பட்டு பல வருடங்களாகி விட்டது. இப்போது இரண்டு முகாம்கள். ஒன்ற சத்திய இஸ்லாத்தின் முகாம். மற்றையது இஸ்லாத்தின் எதிரிகளின் முகாம். இதில் எதனையும் யாரும் தேர்ந்து தெரிவு செய்து கொள்ளலாம். 100 விகித தெரிவு சுதந்திரம் நமக்கு உண்டு. ஆனால் இந்த உலகை படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வின் பொருத்தம் பொருந்திய முகாம் இஸ்லாத்தின் முகாகமாகும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு புரியும். 

SALIS (Strategic Airlift Interim Solution) program. இந்த பெயர் தான் இப்போது இஸ்லாமிய அரசு உருவாவதை தடுப்பதற்கு ரஷ்யா போட்டுக்கொள்ளும் முகமூடியின் பெயர். வாழ்க்கையில் மூன்று முறை தன்னும் உச்சரித்து இருக்க முடியாத தேசத்தின் பெயர் தான் மாலி. பட்டினி சாவு என்றால் மட்டுமே சோமாலியா நினைவிற்கு வரும். ஆனால் இப்போது உலகின் உன்னதமிக்க பெரிய நாடுகள், அதன் தலைவர்கள், தளபதிகள், அவர்களின் ஊடகங்கள் என எல்லாமே “மாலி”, “சோமாலியா” போன்ற பெயர்களை உச்சரிக்கின்றன. ஏன். எதற்காக. மதுபான புட்டியுடனும், குட்டியுடனும் குதூகலிக்கும் மேற்கின் மூளைகள் ஏன் மாலி பற்றி இவ்வளவு கவலை கொள்கின்றன?.

பிரான்ஸ் ஒரு பெரிய வல்லரசு. அதன் இராணுவ விமானங்களும், வான்படை விமானங்களும் போதும் மாலி, சோமாலிய பிரச்சனைகளை கையாள. ஆனால் பிரித்தானியா, ஜேர்மன்,கனடா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, இஸ்ரேல், இப்போது ரஷ்யா என பல நாடுகளும் இராணுவ துணைசார் உதவிகள் என்ற பெயரில் ஏன் தங்களிற்கும் காய்ந்த சோமாலிய அப்பத்தில் பங்குகேற்கின்றன. எதற்காக இவர்கள் தங்கள் உதவிகள் என்ற பெயரில் பிரான்ஸின் பூட்ஸ்களுடன் சேர்ந்து நடைபயில ஆசைப்படுகின்றனர்?

இவர்கள் எல்லோரிற்குமே ஒரே ஒரு அச்சம்தான். அது.. ஆபிரிக்கர்கள் சவுதியின்,கட்டாரின்,குவைதின் அரபிகள் போல அல்ல என்ற தெளிவான விழிப்புணர்வு. இஸ்லாமிய அரசின் ஸ்தாபகம் ஜித்தாவில் என்றால் இவர்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அது அஸ்வாத் என முழங்கப்படும் போது இவர்கள் உள்ளங்கள் அச்சங்கொள்கின்றன. பதைபதைக்கின்றன. எல்லாவற்றையும் இழந்து, இழப்பதற்கு எதுமில்லை என்ற நிலையில் உயிரை இறைவனிற்கு தியாகம் செய்ய முனையும் கறுப்பு மனிதர்களின் உரமிக்க இதயங்கள் பற்றிய அச்சம். அதனால் தான் அவர்கள் இவ்வளவு துடிப்பாக இருக்கிறார்கள். 

1 comment:

  1. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.(4:10)

    ReplyDelete

Blogger Wordpress Gadgets