Facebook Twitter RSS

Tuesday, January 15, 2013

Widgets

அமெரிக்க முஸ்லிம்களின் இன்னொரு சாதனை



உலகை உலுக்கிய நிகழ்வு 2001இல் செப்டம்பர் 11 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்து தரைமட்டமாக்கிய நிகழ்வு. 9/11 என இதனை அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள்.
இதற்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் பழிசுமத்தப்பட்டார்கள் உலகெங்கும். ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் சற்றும் தலை தாழ்ந்திடவில்லை.
காரணம் அவர்கள் நன்றாக அறிவார்கள். அஃதுயூத அமெரிக்க உளவுத்துறைகளின் உள்ளிருப்பு வேலைகள்தாம் என்பதை.
அமெரிக்கா இந்த காரணங்காட்டி உலகெங்கும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் நாடுகள் மீதும் ஒரு பெரும் போரைத்தொடுத்து வருகின்றது. கடந்த பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாக.
ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட இடத்தில் ஒரு பெரும் மஸ்ஜித்-ஐ (பள்ளி வாசலை) கட்டி முடிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.
9/22 (2011 அன்று) பத்து ஆண்டுகள் பதினொரு நாட்கள் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலை திறந்து அதில் தொழவும் செய்தார்கள்
இஃது இன்று Ground Zero கிரவுண்ட் ஜீரோ பள்ளிவாசல் என வழங்கப்படுகின்றது. இந்த இடத்தில் இப்போது 13 மாடி கட்டடம் ஒன்று வரவிருக்கின்றது.
இந்த Ground Zero என்ற பெயரை 2001 செப்டம்பர் 11 ஆம் நாள் தகர்க்கப்பட்ட இரண்டு கோபுரங்களையும் அதில் இறந்த வர்களையும் நினைவுகூருவதற்குஅமெரிக்கா தான் வைத்தது. இதை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அடையாளமாகக் காட்டிடவும் முடிவு செய்தது. பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது.
இந்த இடத்தில் வருடந்தோறும் செப்டம்பர் திங்கள் 11ம் நாள் இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் மெழுகுவர்த்திகளைக் கொழுத்துவதையும் ஒரு வழக்கமாக கொண்டு வருகின்றது.
ஆனால் அந்த இடம் இனி முஸ்லிம்கள் தினமும் ஐந்து நேரமும் தொழுகையை நிறைவேற்றிடும் இடமாக ஆக்கப்பட்டு விட்டது.
எத்தனையோ எதிர்ப்புகளையும் தடைகளையும் கொண்டு வந்து குறுக்கே நின்றார்கள் அமெரிக்கர்கள். அத்தனை யையும் தாண்டினார்கள் முஸ்லிம்கள்.
எதிர்த்தவர்களால் இயன்றதெல்லாம் செப்டம்பர் 11 (9/11) அன்றே  திறக்க இருந்த பள்ளிவாசலின் திறப்பை பதினோரு நாட்கள் தள்ளிப்போட்டது தான். அதற்கு மேல்  ஒன்றும் இயலவில்லை. 9/11 அன்று வென்று காட்டினார்கள் முஸ்லிம்கள். இன்னும் விளக்கமாக அறிந்திட பார்க்க வைகறை வெளிச்சம்
இப்போது இந்த ரமளானில் இன்னொரு சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்கள்.
அது முர்ஃபிர்றிஸ்போரோ என்னுமிடத் தில் ஒரு பள்ளிவாசலைத் திறந்திருக்கின்றார்கள். பல நூறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவிலுள்ள இந்த இடத்தில் குறிப்பாக இந்த முர்ஃபிர்றிஸ் போரோ என்னுமிடத்தின் மையப்பகுதியாகிய டென்னீஸ் நகரில் ஒரு பள்ளிவாசலைத் திறந்திருக்கின்றார்கள்.
இங்கே ஈராக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் எகிப்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் சிரியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களும் ஒரு பெரும் முஸ்லிம் சமுதாயமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால் இவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப கடமையும் அடிப்படைக் கடமையுமான தொழுகையை நிறைவேற்றிட இயலவில்லை.
அவர்கள் இஸ்லாமிய மையம் இஸ்லாமிக் சென்டர் என்றொன்றை அமைத்து அதன் தலைமையகத்திலேயே தொழுது வந்தார்கள்.
இந்த இஸ்லாமிய மையத்தையே அவர்கள் தங்களுடைய ஜமாஅத்தாக ஆக்கிக் கொண்டார்கள்.
இந்த ஜமாஅத்இன் கீழ் ஒரு பள்ளி வாசலை அமைத்திட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
ஆனால் அதற்கு அங்கே ஆயிரம் தடைகளை வெட்டிப் போட்டார்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த முர்பிரீஸ் ஃபாரோ என்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.
வரும் செய்திகளைப் படிக்கின்ற போது இந்த முர்ஃபிரீஸ் பாரோ என்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்களை யாரோ தூண்டி விட்டிருக்கின்றார்கள் என்றே படுகின்றது.
காரணம் முர்ஃபிரிஸ்பாரோ என்ற இந்த சமுதாயத்தவர்கள் இன்றளவும் முஸ்லிம்களுக்கெதிராக எதையும் செய்ததில்லை. செய்யும் எண்ணத்திலு மில்லை.
இன்னும் சொன்னால் அவர்கள் முஸ்லிம்களோடு சிறந்த உறவையும் உற்றத் தோழமையும் கொண்டவர்களாக இருந்து வந்தவர்கள்.
முஸ்லிம்கள் இவர்களைப் பற்றிச் சொல்லிடும் போது அவர்கள் எப்போதும் ஒரு வரவேற்கும் சமுதாயமாகவே இருந்தார்கள் என்றே குறிப்பிடுவார்கள்.
ஆனால் பள்ளிவாசலை எதிர்ப்பதில் அவர்கள் அபார வேகத்தோடு செயல் பட்டார்கள்
இரண்டாண்டுகளாகப் பள்ளி வாசலைக் கட்டுவதை நிறுத்திட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்றெல்லாம் அந்தப் பகுதிகளை அல்லோல கல்லோலப் படுத்தினார்கள். பள்ளிவாசலை எழுப்பும் சஃபஃலீ ஃபாத்தி நான் இங்கே முப்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றேன். எங்களுக்கும் (முஸ்லிம்களுக்கும்) இந்த முர்ஃபிறிஸ் சமுதாயத்திற்குமிடையில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. இரண்டு ஆண்டுகளாகத் தான் அவர்கள் எங்களுக்கு எல்லாப் பிரச்சனைகளையும் உருவாக்கினார்கள் என்கிறார்.
அமைதியாக சமூகமாக உறவோடு வாழ்ந்த சமுதாயம் பள்ளிவாசலைக் கட்டும் பணிக்காக வந்த கட்டடப் பொருள்களைக் கொள்ளையடித்தார்கள். சில பல நேரங்களில் அந்த லாரிகளையே கடத்திச் சென்றார்கள்.
கலவரங்களை உருவாக்கி மஸ்ஜித் கட்டினால் பெரும் கொந்தளிப்பு எழும்சட்டம் ஒழுங்கு கெடும் என எச்சரித்தார்கள்.
ஆனாலும் முஸ்லிம்கள் தளரவில்லை. தங்கள் முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றார்கள்
நீதி மன்றங்களுக்குச் சென்றார்கள். நீதிமன்றத்தில் பயங்கரமானதொரு வாதத்தை முன்வைத்தார்கள் முர்ஃபிறிஸ் சமுதாயத்தினர். அஃது முஸ்லிம்கள் மத சுதந்திரப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள். அவர்களின் மத சுதந்திரத்தைப் பாதுகாத்திட இயலாது. தேவையுமில்லை. காரணம் முஸ்லிம்கள் அமெரிக்காவின் அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்றிவிட்டு அந்த இடத்தில் ஷரீயா” சட்டத்தைக் கொண்டு வந்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இப்படி ஒரு வாதத்தை வைத்தார்கள் அல்லாமல் அவர்களால் எந்த சாட்சியத்தை யும் நீதிமன்றத்தில் வைத்திட இயலவில்லை. இதனால் நீதிமன்றம் அவர்களுடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை நிராகரித்து விட்டது பள்ளிவாசலைக்கட்டிட அனுமதி அளித்துவிட்டது.
முஸ்லிம்கள் மெத்த சிரமத்தோடு பள்ளிவாசலை கட்டி முடித்துவிட்டார்கள்.
ஆனால் கட்டி முடித்த பள்ளிவாசலை முஸ்லிம்களால் திறந்திட இயலவில்லை. காரணம் பள்ளி வாசலை திறக்கவிடக் கூடாது என கங்கணம் கட்டிச் செயல்பட்டவர்கள் நீதிமன்றத்திடம் ஒரு ஸ்டே (தடையை) ஐ வாங்கிவிட்டார்கள்.
முஸ்லிம்கள் இப்போது அதற்கெதிராகப் போராடிட வேண்டியவர் களானார்கள்.
கிஞ்சிற்றும் தளராமல் நீதிமன்றத்தில் தங்கள் போரைத் தொடர்ந்தார்கள்.
பள்ளிவாசல் இரகசியமாகக் கட்டப்பட்டுவிட்டது போதிய அளவுக்கு பொதுவிவாதங்கள் நடக்கவில்லை என்று கூறியே திறக்க தடை விதித்தது நீதிமன்றம்
முஸ்லிம்கள் போதிய அளவுக்கு விவாதங்களை நடத்தவே செய்தார்கள்.
ரமழான் மாதத்தில் தொழுகைக்கு இடமில்லை. ஆதலால் நாங்கள் சாலைகளில் தொழவேண்டியது வரும் அப்போது பொது விவாதங்கள் மட்டுமல்ல பொது வருத்தங்களும் வழக்குகளும் வரும் என முரட்டுவாதம் ஒன்றை முன் வைத்தார்கள் அப்போதுதான் நீதிபதிகளின் கண்கள் திறந்தன.
உடனேயே பள்ளிவாசலைத் திறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றினார்கள்.

ரமளானில் பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

இத்தனை போரையும் முன்னே நின்று நடத்தியவர்களுள் ஒருவர் மாட்முல்லர் என்பவர். அவர் அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்.
இப்போதெல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களைக் கொண்டே அல்லாஹ் இஸ்லாத்திற்கு அதிகமாக வேலைகளை வாங்குகின்றான். அதில் நிறைவையும் தருகின்றான்.

பெண்களின் பங்கு

இந்தப்பள்ளிவாசலை நிறுவுவதிலும் அதனை கட்டிமுடிப்பதிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எதிர் கொள்வதில் பெண்கள் காட்டிய ஆர்வம் வீரமும் அலாதியானது.
ஒரு பெட்ரூம் படுக்கை அறைக்குள் தொழுது கொண்டிருந்தோம். இப்போது 12,000  சதுர அடியிலுள்ள பெரிய பள்ளியில் தொழவிருக்கின்றோம் என்கிறார் 10 கிலோ மீட்டர் தனது காரை ஓட்டிகொண்டு வந்து குடும்பத்தோடு இரவு தொழுகைகளில் கலந்து கொள்ளும் அமீராபாத்திமா என்ற பெண்மணி.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets