Facebook Twitter RSS

Wednesday, February 29, 2012

இனி எங்களுக்கு அணு உலையே வேண்டாம் : ஜப்பான் அலறல் !

 டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன. செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.

ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.

பீதியில் டோக்கியோவை காலி செய்ய தயாராக இருந்த ஜப்பான்..
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டார்களாம்.

இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.

இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத புக்குஷிமா!

இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பல வருடங்களாக நடத்தும் சட்டரீதியான போர் என்னை தளர்த்தி விட்டது – கண்ணீருடன் ஸாக்கியா ஜாஃப்ரி

Zakia_Jafriஅஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பல வருடங்களாக தொடரும் சட்டரீதியான போர் என்னை தளரச்செய்துவிட்டது என்று குல்பர்க் சொஸைட்டியில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி கூறுகிறார்.

“இனி எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எப்பொழுதும் என்னை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் நிற்கின்றனர். இந்த வயதில் என்னால் இயலாது” – மகன் தன்வீர் ஜாஃப்ரி, மகள் நஸ்ரின், பேரப் பிள்ளைகளான தவ்ஸீஃப் ஹுஸைன், ஸுபின் ஹுஸைன் ஆகியோருடன் குல்பர் சொஸைட்டியில் கரியும், புகையும் படர்ந்த தனது பழைய பங்களாவில் இருந்துகொண்டு 70 வயதான ஸாக்கியா ஜாஃப்ரி கண்ணீர் மல்க கூறுகிறார்.
குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
சாஃப்ட்வர் பொறியாளரான கணவர் நஜீப் ஹுஸைனுடன் அமெரிக்காவில் வசிக்கும் மகள் நஸ்ரினுடன் செல்ல ஸாக்கியா ஜாஃப்ரி விரும்புகிறார். தற்போது ஸாக்கியாவுடன் வசிக்கும் அவரது மகள் நஸ்ரின் வருகிற மார்ச் 11-ஆம் தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருக்கிறார். மகளுடன் ஸாக்கியாவும் செல்கிறார். ஆறு மாதம் அங்கு தங்குவார். சூரத்தில் larsen & toubro நிறுவனத்தில் எக்ஸ்க்யூடிவ் பொறியாளராக பணியாற்றும் மகன் தன்வீருடன் குஜராத் இனப்படுகொலைக்கு பிறகு ஸாக்கியா வசித்து வந்தார். அமெரிக்காவிற்கு செல்ல ஸாக்கியா தீர்மானித்து இருந்தாலும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தொடர் நடவடிக்கைகள் குறித்த கவலையில் உள்ளார். இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் நகலை வருகிற மார்ச் 15-ஆம் தேதி ஸாக்கியாவிடம் அளிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் உட்பட வேறு எவருக்கும் அறிக்கையின் நகலை வழங்கமுடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. தான் இந்தியாவில் இல்லாதது வழக்கை பாதிக்கும் என்ற கவலையும் ஸாக்கியாவுக்கு உண்டு.
2002-ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை நரேந்திர மோடியால் ஒரு போதும் மறைக்க முடியாது என்று ஸாகியா ஜாஃப்ரியின் மகள் நஸ்ரின் கூறுகிறார். குல்பர்க் சொஸைட்டியில் தீயில் எரிந்து கிடக்கும் வீடுகள் இனப்படுகொலையின் ஆதாரங்கள் ஆகும். அதனை யாரும் மறக்கமுடியாது எனவும் நஸ்ரின் கூறுகிறார்.
குஜராத் இனப்படுகொலை நடக்கும் வேளையில் நஸ்ரின் அமெரிக்காவில் இருந்தார்.
மும்பையை சார்ந்த டீஸ்டா ஸெடல்வாட், டெல்லியில் இருந்து ஹர்ஷ் மந்தர், குஜராத் பி.யு.சி.எல் தலைவரும் மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் ஜெ.எஸ்.பந்தூக்வாலா உள்பட பலர் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது நினைவு தினத்தில் குல்பர்க் சொசைட்டிக்கு வருகை தந்தனர்.to asiananban

திற‌ந்த மனதோடு ஜெயல‌லிதாவை ச‌ந்‌தி‌க்‌கிறோ‌ம் - உதயகுமா‌ர்

 திற‌ந்த மனதோடு த‌மிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவை ச‌ந்‌தி‌க்க உ‌ள்ளோ‌ம்'' எ‌ன்று கூட‌ங்குள‌ம் அணுஉலை போரா‌ட்ட‌க்குழு அமை‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
த‌‌னியா‌‌ர் செ‌ய்‌தி சேனலு‌க்கு அவ‌ர் இ‌ன்று அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌‌ல் இ‌வ்வாறு த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
கூட‌ங்‌குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம் ப‌ற்‌றிய த‌‌மிழக ‌நிபுண‌ர் குழு அ‌றி‌க்கை ம‌க்க‌ளி‌ன் ‌கரு‌த்தை ‌பிர‌திப‌லி‌ப்பதாக இரு‌க்காது எ‌ன்று உதயகுமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கூட‌ங்குள‌ம் ம‌க்களை த‌மிழக ‌நிபுண‌ர் குழு ச‌ந்‌தி‌த்து கரு‌‌த்து கே‌ட்ட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவை ச‌ந்‌தி‌த்த ‌பிறகே அடு‌த்த க‌ட்ட நடவ‌டி‌க்கை எ‌டு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.to asiananban

ஈரானின் அடுத்த எச்சரிக்கை. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம்.

உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது
அறிந்ததே.
இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமானால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று ஈரானின் இராணுவத்துறை அமைச்சர் ஜெனரல் அஹம்மது வதீதி எச்சரித்துள்ளார்.
"எங்களைத் தாக்கி அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்." என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.

கோத்ரா தீ விபத்து: 10 ஆண்டுகள் நிறைவு !

godhra_pkgஅஹ்மதாபாத்:குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக மோடி அரசு சதித்திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும் கோத்ரா ரெயில் தீ விபத்து நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது. அயோத்தியில் இருந்து வந்துகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6
எண் பெட்டிகளில் பயணித்த 59 பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு  மற்றும் போலீசின் துணையுடன் சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாற்றில் முன்பு ஒருபோதும் நிகழாத அளவுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர்.
கோத்ரா தீ விபத்தின் 10-வது நினைவு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடுச் செய்துள்ளன. குஜராத் இனப் படுகொலையை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்காக 10 தினங்களை கொண்ட நிகழ்ச்சிக்கு 45 மனித உரிமை அமைப்புகள் கூட்டாக ஏற்பாடுச் செய்துள்ளன.
பேரணிகள், சூஃபி இசை, கண்காட்சி, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல், பிரார்த்தனை ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 68 பேர் கொடூரமாக எரித்துக் கொலைச் செய்யப்பட்ட குல்பர்க் சொஸைட்டியில் ஒன்று கூடி திருக்குர்ஆனை படிக்கப் போவதாக இவ்வமைப்புகள் அறிவித்துள்ளன.
கோத்ரா சம்பவத்தின் பின்னணியில் மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும்தான் காரணம் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த உயர் மட்ட கூட்டத்தில், ஹிந்துக்களை அவர்களிடன் கோபத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று மோடி கூறியதாக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ் மூத்த அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் கழிந்த பிறகு ஒரு சில வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளன. இனப் படுகொலையை குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனின் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
கோத்ரா ரெயில் தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய இரண்டு கமிஷன்கள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டன.
மத்திய ரெயில்வே அமைச்சகம் நியமித்த யு.சி.பானர்ஜி கமிஷன் கோத்ரா ரெயில் எரிப்பு விபத்து என்றும், எரிபொருள் ரெயிலுக்கு வெளியே இருந்து பயன்படுத்தப்படவில்லை மாறாக ரெயிலின் உள்பகுதியில் இருந்துதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது. ஆனால், மோடி அரசு நியமித்த கமிஷனின் இடைக்கால அறிக்கையில், முன்னரே திட்டமிட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் ரெயில் எரிப்பு சம்பவம் என்றும் கூறியது

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு !

The text, reportedly worth $22 million, is
 said to contain Jesus’ prediction of the Prophet’s coming but was 
suppressed by the Christian Church for years.அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ்
இயேசுவின் முக்கிய சீடராவார்.
இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.
யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல்  12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.
யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.to asiananban.blogspot.com

எகிப்து:பாராளுமன்ற துணை சபைக்கான தேர்தலிலும் இஃவான்களுக்கு மகத்தான வெற்றி !

Elections commission chief Ahmed Attiyaகெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கீழ் சபைக்கான தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி பாராளுமன்ற துணைச் சபையான ஷூரா(ஆலோசனை) கவுன்சில் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இன்னொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 180 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற துணை சபையில் 106 இடங்களை கைப்பற்றி மிகப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. ஸலஃபிகளின் கட்சியான அந்நூர் 46 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தது. 14 இடங்களை கைப்பற்றிய அல் வஃப்த் கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் முஈஸ் இப்ராஹீம் தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.
சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றிய பிறகு எகிப்தில் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாதங்கள் நீண்ட தேர்தல் நடைமுறை வருகிற ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் மூலம் நிறைவுறும்.

ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சிக்கும் ஈரான்: ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள் !

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்ததால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
எண்ணெய் நிறுத்தம்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால்,
அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்:
தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட நேரிடும் என, ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அது நிகழ்ந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.
படைக் குவிப்பில் அமெரிக்கா:
ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டை மிரட்டும் வகையில், அப்பகுதியில் அமெரிக்கா, தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது.
போர்க் கப்பல்கள் தயார்:
அதன்படி, பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
சிறப்புப் பயிற்சிகள்:
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க ராணுவம், தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஐக்கிய அரபு நாடுகளில், அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு, இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.ஹோர்முஸ் நீரிணையில், ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால், அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
உளவு நிறுவனங்களின்தகவல்கள்:
இதற்கிடையில், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரதிநிதிகள் குழு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, இரு முறை ஆய்வுகள் நடத்திய பின், வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.அவற்றின்படி, அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
அதேநேரம், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில், அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால், யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு, அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து, ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இதுபோன்ற தகவல்களைக் கசிய விடுவதாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன.
ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை என்ன சொல்கிறது?
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.இரு முறையும், கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ., குற்றம்சாட்டியுள்ளது. அங்கு தான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ., ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த இரு ஆய்வுகள் குறித்து, ஐ.ஏ.இ.ஏ., வெளியிட்ட 11 பக்க அறிக்கையின் சாராம்சம்:
*அணுசக்தி திட்டங்களின் ராணுவப் பரிமாணங்கள் குறித்து ஏஜென்சி கவலை கொண்டிருக்கிறது.
*போர்டோ அணுசக்தி நிலையத்தில் உள்ள 696 மையவிலக்கு விசை கருவிகள் மூலம், 20 சதவீத யுரேனியச் செறிவூட்டலை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
*அதேநேரம் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு உதவும் வகையில், 90 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருகிறது.
*கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 19.8 கிலோ யுரேனியம், டெஹ்ரானின் ஜாபர் இபின் ஹயான் ஆய்வகத்தில் இருந்தது. ஆனால் அதை விடக் குறைவான யுரேனியம் தான் கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும், இவை ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகள் குறித்து ஈரான் விளக்கம் அளிக்கவில்லை.
*1995 - 2002 காலகட்டத்தில் யுரேனிய செறிவூட்டலில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய விவரங்களை ஈரான் தரவில்லை.

உலகின் பணக்கார நாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் !

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த
படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும்.
நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

ஷரியா-ஹிந்த் பேரணி மற்றும் இணையதளத்தை தடைச்செய்ய ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை

e2bf3b11df0b872112757f1c2fee6e32_Lபுதுடெல்லி:தலைநகர் டெல்லியில் வருகிற மார்ச் 3-ஆம் தேதி நடக்க விருக்கும் ஷரியா-ஹிந்த் அமைப்பின் பேரணியையும் அதற்கு அழைப்பு விடுத்துள்ள இணையதளத்தையும் உடனடியாக தடைச்செய்ய வேண்டும் மேலும் அதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்துச் செய்யவேண்டும் என்றும் தேசிய ஒருங்கிணைந்த குழுவின்
உறுப்பினர் நவைத் ஹமீத் (இவர் சிறுபான்மையினருக்கான தெற்கு ஆசிய சபையின் செயலாளராகவும் உள்ளார்) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த இணையதளத்தின் முகவரி ‘www.Shariah4Hind.com‘ என்றும், அதன் தலைவர் அபு-பராவுக்கும், அன்ஜெம் சௌத்ரிவுக்கும் வழங்கிய விசாவை திருப்ப பெறவேண்டும், அவர்கள் இந்தியாவுக்கு நுழைவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் தான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி அந்த இணையதளத்தை பதியப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் அதிக ஆபத்து ஏற்படுத்தும் அளவிற்கு கோபம் மூட்டும் அளவில் உள்ளது. ஆகையால் உடனடியாக அது குறித்து விசாரணைச் செய்யவேண்டும். இன்னும் அதில் இந்திய முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்து, இந்தியாவில் ஷரியத் சட்டத்தை நிறுவ வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளதாக தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
அடுத்தபடியாக அந்த பேரணியில் இந்திய அரசியலுக்கும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, எல்.கே.அத்வானி மற்றும் நரேந்திர மோடிக்கும் எதிராக பத்வா கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், வீடியோ கான்பரசிங் மூலம் ஷேக் ஓமர் பக்ரி முஹம்மது (அல்-முஹஜிரௌன் என்ற அமைப்பின் தலைவர் – பிரிட்டனில் பகிரங்கமாக ஜிஹாதையும், ஷரியத் ஆட்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்), அபு பரா (இணையதளத்தின் தலைவர்), அன்ஜெம் சௌத்ரி ஆகியோரும் உரையாற்றுவார்கள் என்று வெளியிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
பேரணி நடத்துவதற்கும், வெளிப்படையாக இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக சவால் விடும் அமைப்பிற்கும் டெல்லி காவல் அதிகாரிகள் எவ்வாறு அனுமதி கொடுத்தனர்?
பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம், அவர்களின் பின்னணி நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல், இந்தியாவிற்குள் நுழைய எவ்வாறு அனுமதி கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த இணையதளத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது பகத்சிங் க்ராந்தி சேனா என்ற அமைப்பை சார்ந்த நபர்களுடன் தொடர்பு உடையது போல் உள்ளது. இதன் தலைவர் தஜிந்தர் பல் சிங்க் பக்க்ஹா, வழக்குரைஞர் பிரஷாந்த பூஷன் அவர்களை தாக்கியதற்கு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மற்றும் சில உறுப்பினர்கள் புது டெல்லியில் இரண்டு மாதத்திற்கு முன்பு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்களை டெல்லி இரயில் நிலையத்தில் வைத்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகையவர்களுக்கு பேரணி நடத்த அனுமதி அளித்திருப்பது தனக்கு வியப்பூட்டுவதாகம், இந்த பேரணி நடத்துவதன் மூலம் இந்திய சமூகங்கள் இடையே பகைமை, குழப்பம் மற்றும் குரோதங்களை வளர்த்து அவர்கள் தங்கள் இலக்கில் வெற்றி பெற நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எகிப்து:அதிபர் தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்: கவலைக்கிடம் !

Abdel Moneim Abol Fotohகெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.
முனூஃபியாவில் பிரச்சாரம் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அப்துல் முனீமின் காரை தடுத்து நிறுத்திய மூன்று நபர்களை கொண்ட முகமூடி கும்பல் அவரது தலையில் பல தடவை தாக்கியுள்ளனர். பின்னர் காரில் ஏறி தப்பிவிட்டனர் என்று பிரச்சார குழுவில் இடம்பெற்றுள்ள அஹ்மத் உஸாமா கூறுகிறார்.

எகிப்தில் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் மீதமிருக்கவே வெற்றி பெறுவார் என கருதப்படும் அப்துல் முனீமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான அப்துல் முனீமிற்கு 60 வயது ஆகிறது. அதிபர் தேர்தல் குறித்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தீர்மானத்தை மீறியதை தொடர்ந்து முனீமை அவ்வியக்கம் நீக்கியது. பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் ஷேக் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி அப்துல் முனீமிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அப்துல் முனீம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்து குற்றத்திற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Friday, February 24, 2012

இந்திய கால்செண்டர்களை மிரட்டி ரூ.25 கோடி வசூல் செய்த அமெரிக்க நிறுவனம் !

Indian call centers are threatened by America's EBIS LLC company.
   இந்தியாவில் உள்ள கால்சென்டர்கள் மூலம் மிரட்டல் விடுத்து அமெரிக்கர்களிடம் அந்நாட்டு நிறுவனம் ஒன்று ரூ.25 கோடி கடன் வசூல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கலிபோர்னியாவைச் சேர்ந்த "இபீஸ் எல்எல்சி' என்ற அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த விவரம்: அமெரிக்காவில் உள்ள இபீஸ் எல்எல்சி நிறுவனம் தன்னை ஒரு கடன் அளிக்கும் நிறுவனம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. கடன் தேவைப்படுவோர் அணுகலாம் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை அணுகியுள்ளனர். அவ்வாறு அணுகியவர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கியமான விவரங்களை பெற்றுக்கொண்டுள்ளது. பின்னர் கடனுக்கு நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது என்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது

 இதனால் கடன் வாங்க விரும்பியவர்கள் அந்நிறுவனத்தில் ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்நிறுவனம் கடன் வழங்கவில்லை. மாறாக இந்தியாவில் உள்ள சில கால்சென்டர்களை அழைத்து கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் தொலைபேசி எண்களை கொடுத்து அவர்களை மிரட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடன் வாங்காதவர்களை வாங்கியதாகக் கூறி, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு அந்நிறுவனம் நிர்பந்தித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்ததுபோல் போலியான ஆவணங்களையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

 இந்தியாவில் உள்ள கால்சென்டர்கள் மூலம் மிரட்டல் வந்ததும் ஏராளமான அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஓடிப்போய் அவர்கள் சொல்லிய தொகையை அமைதியாகச் செலுத்திவிட்டு வந்துள்ளனர். ஆனால் சிலர் மிரட்டலுக்குப் பயந்து பணத்தை கட்டவில்லை. அவர்கள் துணிச்சலாக அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆணையம் நடத்திய விசாரணையில் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 2010, ஜனவரியில் இருந்து இந்திய கால்சென்டர்கள் மூலம் 10000 அமெரிக்க வாடிக்கையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ரூ.25 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய கால்சென்டர்களுக்கும் சர்வதேச அரங்கில் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. இந்திய கால்சென்டர்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா?


 வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? என்பதுதான் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆயிரம் மைல்கள்... ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் எந்த நேரத்திலும் போர் தொடுக்கக் கூடிய நிலை இருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேலின் பிரதமரும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஈரான் மீது இஸ்ரேல் கை வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பது நிபுணர்களின் கணிப்பாகும்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால் ஆயிரம் மைல்களைக் இஸ்ரேலின் போர் விமானங்கள் கடக்க வேண்டும். இத்தாக்குதலுக்கு 100க்கும் குறையாத போர் விமானங்களை பயன்படுத்த வேண்டும்

ஈரான் மீதான தாக்குதலானது மிகவும் சிக்கலானது. கடினமாக ஆபரேஷன் என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

சிரியா மற்றும் ஈராக் மீதான முந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக ஈரான் மீதான தற்போதைய தாக்குதல் இருக்கக் கூடும்..

தொலைக்காட்சி ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுப் பிரதிநிதிகளும் தற்போதைய நிலையில் ஈரான் மீது போர் தொடுப்பது என்பது அறிவுப்பூர்வமானது அல்ல என்றே கூறி வருகின்றனர்.

ஈரான் மீது போர் தொடுப்பது என்பது தற்போதைக்கு சவாலான விஷயம் என்பதே சர்வதே போர் வல்லுநர்களின் கருத்து.

இருப்பினும் ஈரான் மீது கடும் தடைகளை விதிக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் போர் உட்பட அனைத்து அம்சங்களையும் பரிசீலிப்போம் என்றும் அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதர் லியர் வெயின்ரூப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் தயாரிக்கும் இடங்களாக கருதப்படுகிற நடான்ஸ், போர்டோ, அரக், இஸ்பஹான் ஆகிய 4 இடங்களைத்தான் இஸ்ரேல் குறி வைத்துத் தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறது.

3 பாதைகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு 3 பாதைகள் உள்ளன.

துருக்கியின் வடபகுதி வழியாக செல்வது, சவூதி அரேபியான் தென்பகுதி வழியாக செல்வது, ஜோர்டான் மற்றும் ஈராக் வ்ழியாக சென்று தாக்குதவது. இதில் ஈராக் வழியாக செல்வது என்பது இஸ்ரேலிலிருந்து நேரடியாக தாக்குதல் நடத்துவதாகும்.

ஆனால் ஈராக்கின் வான்வழி என்பது அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் சிக்கலானதாக இருக்கக் கூடும். இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஈராக் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரி ஒருவர், இஸ்ரேலிய போர் விமானங்கள், ஈராக் வான்வழியைப் பயன்படுத்தினால், ஈராக் வழிமறிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிடம் அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் இருந்தபோதும் இத்தனை ஆயிரம் மைல்கள் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் பற்றியும் ஆராயப்படுகிறது.

இஸ்ரேலிடம் அமெரிக்க தயாரிப்பு கேசி-707 டாங்கர்கள் 8 இருக்கின்றன. ஆனால் இவை முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ளனவா? ஈரான் மீது போர் தொடுத்தால் இவை பயன்படுத்தப்படுமா? என்பது சந்தேகம் என்கிறார் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் ஸ்காட் ஜான்சன்.

இதேநேரத்தில் ஈரான் பதிலடி கொடுத்தால் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் விவாதித்து வருகின்றன.

ஈரான் பதிலடி கொடுத்தால்..

இஸ்ரேல் குண்டுகள் இலக்கை தாக்கும் முன்பே அவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் ஈரானிடம் உள்ளது. அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருந்தால் இஸ்ரேலுக்கான பதிலடி என்பது மிக மோசமான விளைவுகளை உருவாக்கிவிடக் கூடும் என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள். சதாம் உசேன் ஒன்றுமே இல்லாமல் அமெரிக்காவை பயமுறுத்தி வந்தார். ஆனால் ஈரான் அப்படி அல்ல, கைவசம் ஆயுதங்களை வைத்திருப்பதால்தான் அமெரிக்காவே கூட ஈரான் விஷயத்தில் அவசரம் காட்ட தயங்குகிறது என்கிறார்கள்.

இதேபோல் இஸ்ரேலிடம் இருக்கும் 5 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள ஜிபியூ குண்டுகளால் மலைகளுக்கு இடையே 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட ஈரானின் அணு உலைகளை தகர்க்க முடியுமா என்பதும் சந்தேகமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

அதேசமயம் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துவிட்டால் அது சாத்தியமான ஒன்றுதான். அதற்கான வல்லமை அமெரிக்காவிடம் இருக்கிறது. கத்தார் வான்படை தளம், இந்தியப் பெருங்கடலில் உள்ள டிகாகோ கார்சியோ தீவு அல்லது இங்கிலாந்து நாட்டு தளங்களிலிருந்து போர் விமானங்களை இயக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே பெர்சியன் வளைகுடாவுக்கும் ஹோர்முஸ் ஜலசந்திக்கும் போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியிருப்பதையும் அமெரிக்காவுக்கு சாதகமான அம்சமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எப்படியிருப்பினும், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்கும், இஸ்ரேல் போர் தொடுப்பதற்கும் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாக உள்ளது. இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தால் அதற்கான கடும் விளைவுகளை நிச்சயம் சந்திக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு ஈரானும் நல்ல பலத்துடன் இருப்பதால், இஸ்ரேல்-ஈரான் போர் என்பது மிகப் பெரிய பாதிப்புகளை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

to asai nanban.blogspot.com

“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!!



கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது.“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.





 
மாநில தலைவர்:

முகம்மது தம்பி (அதிராம்பட்டினம்)

மாநில துணைத் தலைவர்: சாகுல் சஹீத் (ராம்னாடு)

மாநில பொதுச் செயலாளர்: சத்தார் (திருச்சி)

மாநில செயலாளர்: அராபாத் (திருநெல்வேலி)
                       

மாநில பொருளாளர்:முஹைதீன் (தஞ்சை)

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:


1. ராஜா முஹம்மது (மதுரை)

2. ஜமிஷா (மேட்டுப்பாளையம்)

3. அப்துல்லாஹ் (சென்னை)

4. பக்ருதீன் (மதுரை)

5. ஹனீப் (கோவை)

6. அப்துர் ரஹ்மான் (காயல்பட்டினம்)



புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் முகம்மது தம்பி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சிM.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் P.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் மாணவ சமூகத்தையே சாரும் என உரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI - ன் தமிழக மாநில பொது செயலாளர் ரஃபீக் அஹமத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, கீழ்கண்ட மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் ஃபக்ருதீன் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் காலாண்டு இதழான 'கேம்பஸ் டுடே' யை கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் மெஹஃபுஸ் வெளியிட்டார்.
தீர்மானம்

1.    இன்றைய கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையிலிருந்து விலகி, கொள்ளை லாபம் ஈட்டும் வியாபார நிறுவனங்களக  மாறி இருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, உயர்கல்வி வரை இலவசமாக வழங்க கோரியும், கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை முன்பதிவு மற்றும் கல்விக் கொள்ளையினை தடுத்து நிறுத்தும்படியான சட்டம் இயற்றுவதோடு, அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தினை உயர்த்த வேண்டும் எனவும் இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 2.    நம் சமூகத்தின் நாளைய தலைவர்களான மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை கருத்தில் கொண்டு அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, கல்வி வளாகங்களில் 100 மீட்டருக்கு உட்பட்டு இருக்கும் மது மற்றும் புகையிலை விற்பதற்கான தடையை 500 மீட்டராக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்துகிறது.
 3.   கல்வி வளாகங்களில் கட்டுப்பாடு எனும் பெயரில் மாணவர்களுக்கு மத்தியில் அவர்களது மத சுதந்திரத்தை பறிப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவன்மையாக கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் அரசை வலியுறுத்துகிறது.
 4.    பள்ளி, கல்லுரிகளில் மாணவியர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளும், மன உளைச்சலால் பெருகிவரும் மரணங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 5. சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையும்விதமாக அனைத்து சமூக மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் தகுந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையின் பரிந்துறைப் படி சிறுபான்மையினருக்கான 15% இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 6.    பள்ளி, கல்லூரிகளின் துவக்க மற்றும் நிறைவு நேரங்களில் பேருந்தின் கூட்ட நெரிசலால் படிகளில் செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாவதை அரசு கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கென இலவச மற்றும் மாணவ தனி பேருந்தினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது.
 7.    மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை, சமூக மற்றும் தெளிந்த அரசியல் சிந்தனையை உருவாக்கிட கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்துவதன் மூலம், கல்லூரி வளாங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அரசினை வலியுறுத்துகிறது.
 8.    பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதித் தேர்வுகள் நெருங்கும் வேளையில், அறிவிக்கப்பட்ட 8 மணி நேர மின்வெட்டும், திடீர் மின்வெட்டுக்களும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்டுத்துகிறது. இந்நிலையை களைய விரைவு நடவடிக்கைகள் வேண்டுமெனவும், குறந்தபட்சமாக, இறுதித் தேர்வுகள் முடியும் வரை முற்றிலும் மின்வெட்டுக்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு, அமல்படுத்த இருக்கும் மின் கட்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 9.    உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைகளை உலகின் பல்வேறு நாடுகள் மூடிவரும் நிலையில், மின் உற்பத்திக்கு நம் தேசத்தில் பல்வேறு வழிமுறைகள் இருந்தும் அதனை விரிவுபடுத்தாமல், திறக்க இருக்கும் கூடங்குளம் அணுஉலையை மக்கள் நலன் கருதி நிரந்தரமாக மூடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 10.                        அத்துமீறும் அதிகாரமளிக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம், மனித உரிமைகளுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற மனித உரிமைகளை மாய்க்கும், ஜனநாயகத்திற்கெதிரான கறுப்புச் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டுமெனவும், தீவிரவாத முத்திரை குத்துப்பட்டு போலி எண்கவுண்டருக்கு உள்ளாக்கப்படும் அவலங்களும் மாய்க்கப்பட்டு, குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியிறுத்துகிறது.
 11.                        உலகின் கள்ள நாடும், எல்லை ஆக்கிரமிப்பு  நாடுமான இஸ்ரேல், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தினையும், குண்டு வெடிப்பு கலாச்சாரத்தினையும், விதைத்துவரும்  நிலையில் இஸ்ரேலுடனான இந்திய இராஜ்ஜிய உறவுகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
 12.   அரசு  மற்றும்  அரசு  உதவி பெறும் கல்வி  நிறுவனங்களில் போதிய உள்கட்டமைப்புவசதியின்மையால் அதில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதுகாப்பு நிலையும்அபாயகர நிலையில் உள்ளதுமாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் திருச்சி தென்னூர் குத்பிஷாநகரில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அளவிற்கு பள்ளியின் கூரை மிகவும்மோசமாக பழுதடைந்துள்ளதுபள்ளியின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் இரவுநேரங்களில் பயன்படுத்தும் சட்ட விரோத கூடாரமாக மாறிவருகிறதுனவே மேற்கண்ட பள்ளிக்கூடம் உட்பட அனைத்து பள்ளிக்கூடம் மீதும் தமிழக அரசும்மாநகராட்சி நிர்வாகமும் தக்கநடவடிக்கை எடுத்து உள்கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் சீரமைக்க வேண்டுமெனகேட்டுகொள்கிறது.
 13.  கேம்பஸ் ஃப்ரண்டின் நடப்பாண்டிற்கான வளர்ச்சி நிதியை அளித்து, பணிகள் மேம்பட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இம்மாநாட்டின் மூலம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
thanks to cfi

எங்களுடைய கடற்படை வீரர்களை கைது செய்ய இந்தியாவிற்கு அதிகாரம் இல்லை : இத்தாலி !

There is no rights to investigate the Italian soldiers in India.
 நடுக்கடலில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கேரள போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் கொச்சி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து கப்பல் பாதுகாப்பு ஊழியர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் இத்தாலி வெளியுறவுத்துறை சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:
மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நடந்துள்ளதால், இச்சம்பவம் பற்றி இந்திய போலீசார் விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ள இருவரும் இத்தாலி குடிமகன்கள். மேலும், இவர்கள் இத்தாலி நாட்டு கடற்படை வீரர்கள். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்தாலிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 

மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கியை எந்த காரணம் கொண்டும் போலீசாரிடம் ஒப்படைக்க முடியாது. கரையில் இருந்து 33 கடல் மைல் தொலைவில் சம்பவம் நடந்ததாக போலீஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் 22.5 கடல் மைல் தொலைவில் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில், முரண்பாடு உள்ளது. 12 கடல் மைலுக்கு மேல் நடந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. எனவே, கேரள போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கப்பல் நிறுவனம் தனக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என்று கொல்லப்பட்ட மீனவர் செலஸ்டினின் மனைவி டோராசெலஸ்டின் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

துப்பாக்கியை கைப்பற்ற உத்தரவு

மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகளை கப்பலுக்கு சென்று சோதனை செய்து கைப்பற்றும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் ஜோய் உத்தரவு பிறப்பித்தார்

thanks to asiananban.blogspot.com
Blogger Wordpress Gadgets