பலஸ்தீனுக்கு தங்களுடைய முழுஆதரவையும் வழங்குவதாக தென்ஆப்ரிக்கா அறிவித்துள்ளது.
பலஸ்தீன் மற்றும் தென்ஆப்ரிக்காவிற்கு இடையேயான கலாச்சார ஒப்பந்தம்(Cultural Agreement) கையெழுத்தானதை தொடர்ந்து ப்ரிடேரியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென்ஆப்ரிக்கா அமைச்சர் பவுல் மஷடைல் இதனை தெரிவித்தார்.
“நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் பலஸ்தீனுக்கு அளிக்க விரும்புகிறோம் மற்றும் இந்த ஆதரவை மேம்படுத்த அமைதியான வழிகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக புறக்கணிப்பு(Boycott), முதலீடு மறுப்பு(Disinvestment) மற்றும் ஒப்புறுதிக்கு (sanction) எதிராக செயல்படுவதில் ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் நடக்கவிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கலை மற்றும் கலாச்சார கண்காட்சிக்கு பரிசுகளை அளிக்க உள்ளதாகவும், கலைஞர்களுக்கு விருந்து ஏற்ப்பாடு செய்ய உள்ளதாகவும் பலஸ்தீன் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் பலஸ்தீனின் கலை மற்றும் கலாச்சார அமைச்சர் சிஹாம்பர் கௌடி, கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரதி அமைச்சர் மூஸா அபுக்ரிபே மற்றும் தென்ஆப்ரிக்காவின் கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பவுல் மஷடைல் மற்றும் பிரதி அமைச்சர் ஜோ பெஹ்லே ஆகியோர் வாழ்த்து மற்றும் அன்பளிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
இனவெறி அரசாங்கத்திற்கு எதிராக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் முன்னணி போராடிய போது பலஸ்தீன் எங்களுக்கு பெரும் அளவில் ஆதரவு தெரிவித்து ஏற்ப்படுத்திய உறவு, பல சகாப்தங்களுக்கு நினைவு கூறும் வகையில் இருந்ததோடு “எங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தேசப் பக்தர்களுக்கு இடையில் உறுதியாய் துணை நிற்கும் இவர்கள் யார்” என்று பலஸ்தீன் மக்களை வியப்புடன் கண்டு முன்னாள் பிரதமர் நெல்சன் மண்டேலா 1997-ஆம் ஆண்டு பலஸ்தீன் ஒருமைப்பாட்டு சர்வதேச நிகழ்த்தியில் பேசிய உரையையும் மஷடைல் இங்கு நினைவு கூர்ந்தார்.
மேலும் பி.டி.எஸ் ஆதரவாளர்கள், பலஸ்தீன் பிரதேசங்கள், நிலம், நீர் மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பை இஸ்ரேல் தொடருமேயானால் இஸ்ரேல் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
‘சர்வதேச சமூகத்தில் எங்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்த தென்ஆப்பிரிக்காவுக்கு எங்கள் நன்றியை தெரிவிப்பதோடு, மேலும் எங்கள் தொடர் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று பலஸ்தீன் அமைச்சர் பர்கௌடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment