நடுக்கடலில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கேரள போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் கொச்சி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து கப்பல் பாதுகாப்பு ஊழியர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் இத்தாலி வெளியுறவுத்துறை சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:
மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நடந்துள்ளதால், இச்சம்பவம் பற்றி இந்திய போலீசார் விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இத்தாலி குடிமகன்கள். மேலும், இவர்கள் இத்தாலி நாட்டு கடற்படை வீரர்கள். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்தாலிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கியை எந்த காரணம் கொண்டும் போலீசாரிடம் ஒப்படைக்க முடியாது. கரையில் இருந்து 33 கடல் மைல் தொலைவில் சம்பவம் நடந்ததாக போலீஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் 22.5 கடல் மைல் தொலைவில் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில், முரண்பாடு உள்ளது. 12 கடல் மைலுக்கு மேல் நடந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. எனவே, கேரள போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கப்பல் நிறுவனம் தனக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என்று கொல்லப்பட்ட மீனவர் செலஸ்டினின் மனைவி டோராசெலஸ்டின் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
துப்பாக்கியை கைப்பற்ற உத்தரவு
மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகளை கப்பலுக்கு சென்று சோதனை செய்து கைப்பற்றும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் ஜோய் உத்தரவு பிறப்பித்தார்
thanks to asiananban.blogspot.com
No comments:
Post a Comment