FEB-07: இந்திய அரசியலில் வளர்ந்து வரும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி மதவாத, ஊழல் அரசியலுக்கு எதிரான மக்கள் சக்தியாக விளங்குகிறது.
இக்கட்சி உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில்அம்பேத்கர் சமாஜ் பார்டி கட்சியோடு இணைந்து 110தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இதில் 10 தொகுதிகளில் இக்கட்சி மற்றைய கட்சிகளுடன் கடும் சமர் செய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மக்களை வாக்குவங்கியாக மட்டுமே கருதிவரும் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் மோசடி அரசியலுக்கு எதிராக இக்கட்சி பிரச்சாரம் செய்துவருகிறது.
ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை உமிழும் பா.ஜ.கவை எதிர்ப்பதுடன், பா.ஜ.கவை காட்டி முஸ்லிம்களை அச்சமூட்டி தங்களுக்கு ஆதரவாக மாற்றும் மற்றைய கட்சிகளின் கேவலமான அரசியலையும் இக்கட்சி கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இக்கட்சியின் உ.பி மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன் அஹ்மத் போட்டியிடும் கான்பூர் மாவட்டத்தில் ஆர்யா நகர் தொகுதியில் தீவிரமான பிரச்சாரம் நடைபெறுகிறது.
உத்தரபிரதேச மாநில தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் SDPI கட்சி பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், வளர்ச்சிக்காக உ.பியை நான்காக பிரிக்கவேண்டும், சிறுபான்மை கல்வியை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும், குடிசை தொழிலுக்கு ஊக்கமளிக்க வேண்டும், பாரம்பரிய தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், போலி என்கவுண்டர் படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை தேர்தல் களத்தில் முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment