டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பலத்த பதிலடியை கொடுக்கும் விதமாக பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை முற்றிலும் நிறுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இனி சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வழங்கமாட்டோம் என்றும், இதர பயனீட்டாளர்களை கண்டுபிடிப்போம் என்றும் ஈரானின் எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரஸா நிக்ஸாத் கூறியுள்ளார்.
ஆனால், ஈரானின் முடிவு கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று இரு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. தினமும் 58 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை பிரான்சு ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், க்ரீஸ், போர்சுகல், பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எண்ணெயை ஏற்றுமதிச் செய்வதை ஈரான் நிறுத்தும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் ஈரானின் எண்ணெய் அமைச்சகம் இச்செய்தியை மறுத்தது.
பொருளாதார நெருக்கடியில் உழலும் இரு நாடுகளும் ஈரானின் எண்ணெயை சார்ந்தே இருக்கின்றன. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் உலகிலேயே சவூதிக்கு அடுத்து ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் எண்ணெயை வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யமாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருந்தது. மேலும் ஈரானின் மத்திய வங்கியின் மீதும் தடையை அதிகரிப்போம் என்று ஐரோப்பிய யூனியன் தீர்மானித்திருந்தது. இந்நிலையில் ஈரான் பலத்த அடியை கொடுத்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment