இம்மாதம் 18ல் அறிவிப்பு !
புதிய பாலஸ்தீன அரசு இந்த மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரிவுகளில் ஒன்றான ஃபதாவைச் சேர்ந்த ஆசாம் அல் அகமது இதைத் தெரிவித்தார்.
கத்தர் நாட்டிலிருந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார். பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடி வரும் ஃபதா மற்றும் ஹமாஸ் இயக்கங்களிடையே
ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி பிப்ரவரி 18-ம் தேதி புதிய அரசு அறிவிக்கப்படும்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அறிவிப்பு வெளியாகும். இடைக்கால அரசின் தலைவரான முகமது அப்பாஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment